under review

வேங்கடரமண ஐயங்கார்

From Tamil Wiki
Revision as of 11:12, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வேங்கடரமண ஐயங்கார் (பொ.யு.19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வேங்கடரமண ஐயங்கார் கொங்கு நாடு விஜயமங்கலத்திற்கு அருகேயுள்ள நடுப்பட்டி எனும் ஸ்ரீநிவாசபுரத்தில் பொ.யு. 1865-ல் நாராயண ஐயங்காருக்கு மகனாகப் பிறந்தார். இளமைக்கல்வி கற்றார். வடமொழி தென்மொழி இரண்டையும் கற்றார். மருத்துவம், காலக்கணிதம், மாந்திரீகம் கற்றார். 'தேர்வண்டிக்கால்' எழுதிய குன்னத்தூர் சுப்பராயக் கவிராயர் இவரின் ஆசிரியர்.

சிறப்புப் பெயர்கள்
  • வித்வ சங்கக் கோயில்
  • மும்மணிச்சாபம்

இலக்கிய வாழ்க்கை

வேங்கடரமண ஐயங்கார் தனிப்பாடல்கள் பல பாடினார். செல்வர்கள் மீது சீட்டுக்கவிகள் பாடினார். சிலேடைகள் பாடினார். கடவுளர்கள் மீது வசை பாடினார். பதிகம், கும்மி, தூது முதலிய சிற்றிலக்கிய வகைகளில் பாடல்கள் பாடினார். கூனம்பட்டி மடம் மாணிக்கவாசகசாமி மீது பஞ்சரத்தினம் பாடினார். நல்லூர் விஸ்வநாதர் ஸ்வாமி மீது ஊஞ்சல் லாலி பாடினார். பொன்னாண்டாம்பாளையம் ராமசாமிக் கவுண்டர் மீது மாதுவிடுதூது பாடினார். தன் இறப்பை காலக்கணித முறைப்படி முன்னரே அறிந்து இரங்கற்பா பாடினார் என்பர்.

பாடல் நடை

வசை

அண்டக் குறவன் அழைத்தால் வருவானோ
வண்டக் குறக்குணமும் மானுமோ தண்டப்
பரையன் மலைச்சிக்குப் பாவனென வந்து
தரைமீ திருப்பதனால் தான்

நூல் பட்டியல்

  • சாதகசாராம்ச ரத்னாகரம்
  • மாணிக்கவாசகசாமி பஞ்சரத்தினம்
  • விஸ்வநாதர்ஸ்வாமி ஊஞ்சல்லாலி
  • ராமசாமிக்கவுண்டர் மாதுவிடுதூது
  • தண்டபாணி பதிகம்
  • வரதராஜப் பெருமாள் சதகம்
  • துடுப்பதி செல்லாண்டியம்மன் பதிகம்
  • கோவை கோணியம்பிகை பதிகம்
  • ஆனந்தப் பதிகம்
  • காதல் விடு தூது
  • திருவேங்கடமுடையான் பதிகம்
  • செங்கண்மால் பதிகம்
  • சிங்காரக்காதல்
  • சந்தக்கும்மி

உசாத்துணை


✅Finalised Page