வேக்மன் ஜெயராசா

From Tamil Wiki
Revision as of 15:32, 16 June 2022 by Ramya (talk | contribs)

வேக்மன் ஜெயராசா(அக்டோபர் 21, 1945) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் பறங்கித்தெருவில் அக்டோபர் 21, 1945இல் பிறந்தார். 1975லிருந்து கொழும்புத்துறையில் வசித்தார். கொழும்புத்துறை புனித ஜோசப் பாடசாலையில் கல்வி கற்றார். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் பணி புரிந்தார். பெரிய தகப்பனார் னாவாத்துறையைச் சேர்ந்த மரிசலினும் சிறிய தந்தை சூசை மரியானும் அண்ணாவியார்கள். இவர்களுடன் சேர்ந்து சிறுவயதில் ஒப்பாரிப் பாடல்களை வேக்மன் ஜெயராசா பாடினார்.

கலை வாழ்க்கை

அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பில் யுவானியார் நாடகத்தில் ”ஏரோலியான்” பாத்திரத்தில் நடித்தார். இவரின் குரல்வளத்திற்காக நாட்டுக்கூத்து மன்னன் ”பூத்தான் யோசேப்” தனது நாடகங்களில் சேர்த்துக் கொண்டார். சகுந்தலை, ஏரோதன் போன்ற பல நாட்டுக்கூத்து இசை நாடகங்களை நடித்துள்ளார்

சீடர்கள்

விருதுகள்

நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்

  • சங்கிலியன் - பரதிருபன்
  • தேவசகாயம்பிள்ளை - 2வது தேவசகாயன்
  • ஜெனோவா - மந்திரி (வானொலியிலும் இடம்பெற்றது)
  • எஸ்தாக்கி - எஸ்தாக்கியார்
  • அலங்காரரூபன் - அலங்காரரூபன்
  • மனம்போல் மாங்கல்யம் - ஒலாண்டோ
  • மரியதாசன் - மரியதாஸ்
  • யுவானியார் - யுவானியார்
  • மெய்காப்போன் கடமை - தமயன்
  • நீ ஒரு பாறை - ராசப்பன்
  • யோகு - யோகு
  • சோழன் - முனிவர்
இசை நாடகங்கள்
  • சகுந்தலை - முனிவர்
  • ஏரோதன் - முனிவர்
பழக்கிய நாடகங்கள்
  • மனம்போல் மாங்கல்யம்
  • எஸ்தாக்கியார்
  • தேவசகாயம்பிள்னள
  • சங்கிலியன் (சில்லாலையில் பறக்கிறது)
  • யூலியசீசர் (ஓட்டகப்புலத்தில் பழக்கியது)
  • கருங்குயில் குன்றத்துக் கொலை (மயிலிட்டியில் பழக்கியது)
  • மனுநீதிகண்ட சோழன் (ஆங்கிவ திருக்குடும்ப பாடசாளை)
  • சோழன் மதின் (ஜோன் பொஸ்கேர் பாடசாலை)

உசாத்துணை