under review

வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1950 இல் தொடங்கப்பட்டது. இப்பள்ளி ஜோகூர் மாநிலத்தின் சிகாமட்டில் உள்ளது. == வரலாறு == 1950 இல் வூல்ஸ் தோட்ட மேலாளர் நாராயணன் குட்டியின் முயற்சிய...")
 
No edit summary
Line 58: Line 58:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
{{Ready for review}}

Revision as of 07:30, 4 November 2023

JBD7063.jpg

வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1950 இல் தொடங்கப்பட்டது. இப்பள்ளி ஜோகூர் மாநிலத்தின் சிகாமட்டில் உள்ளது.

வரலாறு

1950 இல் வூல்ஸ் தோட்ட மேலாளர் நாராயணன் குட்டியின் முயற்சியில் இத்தோட்டத்தில் ஒரு பிரத்தியேக வகுப்பு தொடங்கப்பட்டது. ஆசிரியர் எம்.கிருஸ்ணனுக்குப்  போதனைக் கட்டணமாக ரி.ம முப்பது வழங்கப்பட்டது. அப்போது முப்பது மாணவர்கள் இருந்தனர். ரப்பர் பால் நிறுக்கும் இடத்தில்தான் வகுப்பு நடைபெற்றது. ரப்பர் பால் நிறுத்து முடித்த பின்னரே மாணவர் பயில இயலும். இதேபோன்று புக்கிட் டத்தோ தோட்டத்திலும் வகுப்பு தொடங்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டிறுதியில் வூல்ஸ் தோட்ட மேலாளரின் தொடர் முயற்சியால் ஒரு சிறு கட்டடம் கட்டப்பட்டது. எம்.கிருஸ்ணன் முதல்  தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இரு ஆசிரியர்கள், 37 மாணவர்களுடன் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியது.

பள்ளி மேம்பாடு

Untitledc.jpg
013.jpg

1973 இல் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி இப்போதுள்ள இடத்திற்கு மாறியது. சுப்பையா தலைமையாசிரியராகப்  பொறுப்பேற்றபோது கூடுதல் வகுப்பறைகள், சிற்றுண்டிச்சாலை, நூல்நிலையம், கூடைப்பந்து திடல் ஆகியவை கட்டப்பட்டன. 1987 இல் மாணவர் எண்ணிக்கை 220 ஆனது. வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வாழ்வியல் கல்வி அறை, அறிவியல் அறை, கூடுதலாக இரு வகுப்பறைகளும் கட்டப்பட்டன. தொடர்ந்து பல தலைமையாசிரியர்களின் காலத்தில் சபைக்கூடல் தளம், கணினி அறை,இலவசப் பாடநூல் அறை, பாதுகாவலர் குடில் போன்றவை அமைக்கப்பட்டன. 2011 இல் வூல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப்  பாலர் பள்ளி அமைக்க கல்வியமைச்சின் அனுமதி கிடைத்தது. தலைமையாசிரியர் மு.ஜெயந்தி லாபீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுவா தீ யோங்கின்  உதவியுடன் தோட்ட நிர்வாகத்திடமிருந்து பாலர் பள்ளிக்கான நிலத்தைப் பெற்றார். 2013 இல் பாலர் பள்ளி திறப்புவிழா கண்டது.

தலைமை ஆசிரியர் ஆண்டு
எம்.கிருஸ்ணன் 1950 - 1972
சுப்பையா 1973 - 1983
எஸ்.ராமதாஸ் 1984 - 1987
பி.சுப்ரமணியம்       1987 -1994
டி. சிவலிங்கம் 1994 - 1996
ஆர்.மாணிக்கம் 1997 -1999
ஜி.மனோகரன்    1999 - 2002 
ஆர்.முருகையா 2002
எஸ்.சந்திரா   2002 -2003
எம்.திருவேங்கடம் 2003 - 2004
மு.பரமாவதர்  2004 - 2011
மு.ஜெயந்தி 2011 - 2016
ரா.வாசுகி    2016 – 2020
பே. ஆனந்தி 2020 - தற்போது வரை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.