வீரபத்திரர்

From Tamil Wiki
Revision as of 22:46, 20 September 2022 by Navingssv (talk | contribs) (Created page with "வீரபத்திரர்: தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். சிவனின் காப்பாளர்களுள் ஒருவர். == தோற்றம் == வீரபத்திரரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வீரபத்திரர்: தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். சிவனின் காப்பாளர்களுள் ஒருவர்.

தோற்றம்

வீரபத்திரரின் தோற்றம் குறித்து இரு வேறு கதைகள் புராணங்களில் சொல்லப்படுகின்றன. ”தக்‌ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் தலை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர்” என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில், வீரபத்திரர் சிவனின் வாயிலிருந்து தோன்றியதாக உள்ளது. தக்‌ஷனின் யாகத்தை அழிக்க வீரபத்திரரின் ஒவ்வொரு தலை மயிரிலிருந்தும் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ரவுமையர்கள் என்றழைக்கப்பட்டனர்.

தக்‌ஷன் யாகம் அழிப்பு