under review

வி. கந்தப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:17, 13 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "வி. கந்தப்பிள்ளை (1840 - 1913) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர், ஆசிரியர், சொற்பொழிவாளர், புராண உரையாளர், பதிப்பாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == வி. கந்தப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், வே...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி. கந்தப்பிள்ளை (1840 - 1913) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர், ஆசிரியர், சொற்பொழிவாளர், புராண உரையாளர், பதிப்பாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி. கந்தப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், வேலணையில் வினாசித்தம்பிக்கு மகனாக 1840-ல் பிறந்தார். ஆறுமுகநாவலரின் நெருங்கிய நண்பர். வித்துவ சிரோண்மணி பொன்னம்பலபிள்ளையின் மாணவர்.

ஆசிரியப்பணி

வி. கந்தப்பிள்ளை தீவுப்பகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கப் பணியாற்றினார். 1880-ல் வேலணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். நெடுந்தீவிலும் பாடசாலையை நிறுவும் நோக்கில் ஆ.சோமசுந்தரம்பிள்ளையை அங்கு அனுப்பி திண்ணைப்பள்ளியை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

சைவ தத்துவங்களை விளக்கும் ‘சைவ சூக்மார்த்த போதினி’ என்ற சித்தாந்த சஞ்சிகையை வேலணையில் அச்சிட்டார். தத்துவப்பிராகாசம் என்ற நூலை அச்சில் பதித்தார். பல தமிழ், சைவ நூல்களைப் பதிப்பித்தார்.

நூல் பட்டியல்

  • சைவ சூக்மார்த்த போதினி

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.