வி.கனகசபைப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:25, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வி.கனகசபைப் பிள்ளை ( 25மே 1855 - 21) (விஸ்வநாதம் பிள்ளை கனகசபைப் பிள்ளை ) பெப்ருவரி 1906) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றசிரியர். தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி.கனகசபைப் பிள்ளை ( 25மே 1855 - 21) (விஸ்வநாதம் பிள்ளை கனகசபைப் பிள்ளை ) பெப்ருவரி 1906) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றசிரியர். தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து காலவரிசைப் படுத்தியவர்.

பிறப்பு, கல்வி.

யாழ்பாணத்தில் மல்லாகம் ஊரைச்சேர்ந்த தமிழறிஞர் விஸ்வநாதம் பிள்ளையின் மகனாக 25 மே 1855 ல் பிறந்தார்.விஸ்வநாதம் பிள்ளை பீட்டர் பெர்சிவல் மற்றும் போல் வின்ஸ்லோ ஆகியவர்களிடம் ஆங்கிலம் கற்றார். அவர்கள் சி.வை. தாமோதரம் பிள்ளையை சென்னைக்கு படிக்க அனுப்பிய போது இவரையும் உடன் அனுப்பி வைத்தனர். சென்னைக்குச் சென்ற விசுவநாதம் பிள்ளை பி.ஏ படித்தபின் சென்னை கோமளேசுவரன் பேட்டையில் அரசுப்பணியேற்று வசித்தார். அவர் மகனாகிய கனகசபை பிள்ளை. சிறு வயது முதல் தந்தையாரிடமே தமிழ் கற்று சென்னையில் பள்ளிக்கல்வியை முடித்து பி.ஏ. பட்டம் பெற்று சட்டப் படிப்பையும் முடித்தார்.

தனிவாழ்க்கை

கனகசபைப் பிள்ளை 1876ல் செல்லம்மாளை மணந்தார். மதுரையில் வழக்கறிஞர் தொழில் பார்க்கையில் தமிழார்வம் கொண்டார். வழக்கறிஞர் தொழில் பிடிக்காமல் தபால்துறையில் அதிகாரியாகப் பதவியில் சேர்ந்தார்.

இலக்கியவாழ்க்கை

ஊர் ஊராக ஏட்டு சுவடிகளை தேடி அலைந்தார். கிடைத்த சுவடிகளை எழுத்தில் படிவமாக்குவதெற்கென்றே தனியாக அப்பாவுப் பிள்ளை என்பவரை பணியில் அமர்த்திக்கொண்டார். கிட்டதட்ட இருபது வருடங்கள் அப்பாவு கனகசபை அவர்களுடனிருந்து சுவடிகளை பிரதி எடுக்கும் பெரும்பணி செய்தார்.

இப்படி தான் தேடி கண்டெடுத்த அரிய பொக்கிஷங்களை பிறர் கேட்டால் வேறு யாராக இருந்தாலும் தரத் தயங்குவர். ஆனால் கனகசபை பிள்ளை தன் முன் உ.வே.சா. அவர்கள் வந்து தான் சேகரித்த அரிய பொக்கிஷங்களை தன்னிடம் தருமாறு கேட்டதும் மறு பேச்சில்லாமல் எடுத்து கொடுத்தார். அன்று மட்டும் அவர் அப்படி கொடுத்திராவிட்டால் இன்று நமக்கு சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் புறநானூறும் கிடைத்திருக்குமா என்பது ஐயப்பாடே.

தன் 29ம் வயதில் தொடர்ந்து தன் தந்தை தாய் இரு குழந்தைகள் என அடுத்தடுத்து மரணங்களை சந்தித்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து தமிழ்ப் பணியில் ஈடுபட்டார். ஆங்கிலத்தில் புலமை மிக்க கனகசபை அவர்கள் Madras Review எனும் இதழில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடராக எழுதினார். தமிழர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம். வாழ்க்கை முறை குறித்த மிக முக்கியமான ஆவணமாக அன்றைய காலத்தில் ஏற்கப்பட்டு பலரும் அவரை பாராட்டினர். இந்தக் கட்டுரைகள் பின்னாளில் The Tamils Eighteen Hundred Years Ago என்று தொகுக்கப்பட்டன. இன்றும் அத்தொகுப்பு தன் பெருமை குன்றாமல் தமிழர்தம் வரலாற்றுக்கு வளம் சேர்ந்த்து வருகிறது.