விவரண மரபு

From Tamil Wiki
Revision as of 07:31, 20 April 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "விவரண மரபு (பொயும் 10 ஆம் நூற்றாண்டு) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. அத்வைத விளக்கங்களில் இருந்து உருவானது. விவரண மரபு சங்கரரின் முதன்மை மாணவரான பத்மபாதர் எழுதிய பஞ்சபா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விவரண மரபு (பொயும் 10 ஆம் நூற்றாண்டு) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. அத்வைத விளக்கங்களில் இருந்து உருவானது. விவரண மரபு சங்கரரின் முதன்மை மாணவரான பத்மபாதர் எழுதிய பஞ்சபாதிகா என்னும் நூலுக்கு பத்மபாதரின் மாணவர் பிரகாசாத்மன் எழுதிய விளக்கவுரையில் இருந்து உருவானது. விவரண மரபைச் சேர்ந்தவர்கள் அனைத்தும் பிரம்மமே என்பதனால் பிரம்மம் அன்றி ஒன்று இருக்கமுடியாது என்றும் ஆகவே அவித்யையும் பிரம்மமே என்றும் வாதிட்டனர்.

தோற்றம்

வேதாந்த மரபுக்குள் சங்கரர் உருவாக்கிய அத்வைதம் பிற்காலத்தில் பாமதி மரபு , விவரண மரபு என இரண்டாகப் பிரிந்தது. இப்பிரிவினை சங்கரரின் மரபைச் சேர்ந்தவர்கள் அவருடைய நூல்களுக்கும் அவரது மாணவரின் நூல்களுக்கும் அளித்த விளக்கங்களிலுள்ள வேறுபாடு வழியாக உருவானது. பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு அளித்த வாஸஸ்பதி மிஸ்ரர் சங்கரர் விளக்கத்தில் இருந்து பாமதி உருவானது. மண்டன மிஸ்ரரின் மாணவரான வாசஸ்பதி மிஸ்ரர் தன் ஆசிரியரின் கருத்துக்களுடன் சங்கரரின் அவித்யை பற்றிய கருத்துக்களை இணைத்து விளக்கம் அளித்தார்.அதற்கு ஒரு தலைமுறைக்குப் பின் சங்கரரின் மாணவரான பத்மபாதர் எழுதிய பஞ்சபாதிகா என்னும் நூலுக்கு அவருடைய மாணவரான பிரகாசாத்மன் எழுதிய விளக்கவுரையில் இருந்து விவரண மரபு உருவானது. அத்வைத மரபில் வலுவான தரப்பு என்பது விவரண மரபேயாகும்

தத்துவம்