விந்தியா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 23: Line 23:
* சுதந்திரப் போர்
* சுதந்திரப் போர்
===== சிறுகதைகள் =====
===== சிறுகதைகள் =====
* கண்ணனின் மாமா
* எண்பது சிறுகதைகள்
* ஒரு சொல்
===== மொழிபெயர்ப்பு =====
* குற்றமுள்ள நெஞ்சு
* Cupid alarms (சிறுகதைத் தொகுப்பு)
* கற்பனை உள்ளம்
* பெயர் மாற்றம்
* அந்த நாளிலே
* ஞானம் வேண்டாம்
* அமைதியின் எதிரொலி
* அனுபவ வார்த்தை
* போகும்பொழுதும்
* நல்ல மனது
* கிடைத்தது மாற்று
* அன்பு மனம்
* மாசு
* கிறுக்கு
* ஏடுகள் சொல்வதுண்டோ?
* கூப்பிய கை
* விழியின் வெம்மை
* காதல் இதயம்
* குழந்தை உள்ளம்
* மாதம் பிறந்தது
* உறவின் இனிமை
* தவறிய சொல்


== மொழிபெயர்க்கப்பட்ட இவரின் படைப்புகள் ==
== மொழிபெயர்க்கப்பட்ட இவரின் படைப்புகள் ==

Revision as of 06:35, 31 October 2022

விந்தியா

விந்தியா(இந்தியா தேவி) (ஏப்ரல் 12, 1927 - அக்டோபர் 7, 1999) எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் இந்தியா தேவி. இவர் ஒரிஸாவில் உள்ள பெர்ஹாம்பூரில் ஏப்ரல் 12, 1927-ல் கே.என்.சுந்தரேசன், தையல்நாயகி இணையருக்கு மகளாகப் பிறந்தார். உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். அங்கு தெலுங்கு பாட மொழியாக இருந்ததால் வீட்டில் அவருக்குத் தந்தை தமிழ் கற்பித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அக்கால வழக்கப்படி அவருக்கு 1942-ல் பதினைந்து வயதில் திருமணம் நடந்தது. கணவர் வி.சுப்பிரமணியன் கட்டாக்கில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியதால் அவருடன் அங்கே வசித்தார். பிரபல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் ஆனந்தரங்கன் (Andy Sundaresan) விந்தியாவின் இளைய சகோதரர். இவர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரது நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சுதேசமித்திரன், கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் வழியாக இளவயதில் வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். ’விந்தியா’, 'விந்தியா தேவி’ என்ற புனைப்பெயர்களில் கதைகள் எழுதினார். முதல் சிறுகதை ’பார்வதி’ கலைமகளின் சுதந்திரதின இதழில் ஆகஸ்ட் 15, 1947-ல் வெளியானது. பால்ய விவாகம் சகஜமாக இருந்த அந்தக் காலத்தில், ஒரு பெண் பருவம் அடைந்ததை மறைத்தால், அப்படியே மறைத்துத் திருமணமும் செய்தால் என்ன ஆகும் என்பதை அந்தக் கதையில் சொல்லியிருந்தார்.

கி.வா.ஜ. தொடர்ந்து கலைமகளுக்குக் கதைகள் எழுத ஊக்குவித்துக் கடிதம் எழுதினார். பல கதைகளை கலைமகளில் வெளியிட்டார் . சுதேசமித்திரன் , கலைமகள் , காவேரி , பாரிஜாதம் , வெள்ளிமணி , கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து விந்தியாவின் சிறுகதைகள் வெளியாகின. பிற்காலத்தில் ஆனந்தவிகடன் , குமுதம் , தினமணிகதிரிலும் விந்தியாவின் சிறுகதைகள் வெளிவந்தன.

இவர் கதைகளில் ’ஏடுகள் சொல்வதுண்டோ?’ குறிப்பிடத் தகுந்த ஒன்று . மார்ச் 1948-ல் 'காவேரி' இலக்கிய இதழில் இச்சிறுகதை வெளியானது. கண்ணனின் மாமா, ஒரு சொல், குற்றமுள்ள நெஞ்சு, கற்பனை உள்ளம், பெயர் மாற்றம், அந்த நாளிலே, ஞானம் வேண்டாம், அமைதியின் எதிரொலி, அனுபவ வார்த்தை, போகும்பொழுதும், நல்ல மனது, கிடைத்தது மாற்று, அன்பு மனம், மாசு, கிறுக்கு போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.'சுதந்திரப் போர்' என்ற நாவலை எழுதினார்.

இவரது நாவலும் சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விந்தியாவின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் தெலுங்கில், எழுத்தாளர் சேஷராவ் அவர்களால் மொழிபெயக்கப்பட்டன. சுதேசமித்திரனில் விலைவாசி, தேர்தல், ஜனநாயகம் குறித்தெல்லாம் பல கட்டுரைகள் எழுதினார். பேராசிரியர் ஆனந்தரங்கன் விந்தியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'Cupids's Alarms' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விந்தியாவின் 'சுதந்திரப் போர்’ நாவலையும் 'Rajeswari' என்ற தலைப்பில் ஆனந்த ரங்கன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றை அமெரிக்காவில் உள்ள 'குறிஞ்சி பதிப்பகம்' வெளியிட்டது.

இலக்கிய இடம்

எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளத் தயங்கும் கருவை, தன் ஆரம்ப காலகட்டக் கதையிலேயே எடுத்துக் கொண்டு, அதனை சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றார். தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் விந்தியா.

விருதுகள்

  • 'அன்பு மனம்' சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • சுதேசமித்திரன் நடத்திய கட்டுரைப் போட்டியில் இவரது 'அம்மன் திருவிழா' கட்டுரை, சிறந்த கட்டுரைக்கான பரிசைப் பெற்றது.
  • கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டிக்காக விந்தியா எழுதிய நாவல் 'சுதந்திரப் போர்’ பரிசு பெற்றது.

மறைவு

அக்டோபர் 7 , 1999-ல் விந்தியா காலமானார் .

நூல்கள்

நாவல்
  • சுதந்திரப் போர்
சிறுகதைகள்
  • எண்பது சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு
  • Cupid alarms (சிறுகதைத் தொகுப்பு)

மொழிபெயர்க்கப்பட்ட இவரின் படைப்புகள்

  • Cupids's Alarms - சிறுகதைகள்
  • Rajeswari - சுதந்திரப்போர் நாவல்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
  • விந்தியா: வலைதளம்