first review completed

விசலாட்சி ஹமீட்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
No edit summary
Line 15: Line 15:
* [https://www.youtube.com/watch?app=desktop&v=-9FYyYhaYEE RADIO CEYLON - TAMIL ANNOUNCER VISALAKSHI HAMEED]
* [https://www.youtube.com/watch?app=desktop&v=-9FYyYhaYEE RADIO CEYLON - TAMIL ANNOUNCER VISALAKSHI HAMEED]


{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:58, 9 March 2024

விசலாட்சி ஹமீட்

விசலாட்சி ஹமீட் (பிறப்பு: ஜனவரி 28, 1941) ஈழத்துப் பெண் எழுத்தாளர். ஊடகவியலாளர், நாடகக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

விசலாட்சி ஹமீட் இந்தியாவின் கேரளாவில் குகதாசன், தேவகி இணையருக்கு ஜனவரி 28, 1941-ல் பிறந்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்தார்.கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

விசலாட்சியின் தன் ரசிகராக இருந்த ஹமீட்-ஐக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. ஹோமியோபதி மருத்துவத்தில் சான்றிதழ் பெற்றார். மேடை நாடகக் கலைஞர். மெல்லிசைப் பாடல்கள் பாடினார்.

ஊடகவியல்

இலங்கை வானொலியின் சிறுவர் மலர், நாடக அரங்கின் வழி சிறுவயதிலேயே ஊடகத்துறையில் இணைந்தார். தனது ஊடகப் பயணத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவே இருந்தார். 2005 வரை தமிழ் அறிவிப்பாளராக இருந்தார். அதன்பின் மலையாள அறிவிப்பாளராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

2005-ல் தனது 50 ஆண்டு ஊடகத்துறை நிறைவையொட்டி ஒலி அலையின் என் நினைவலைகள் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். பூரணி என்னும் புனைபெயரில் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார்.

விருதுகள்

  • இலங்கை அரசு கலாபூசணம் விருது வழங்கியது.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.