விக்ரமன்

From Tamil Wiki
Revision as of 23:03, 1 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "விக்ரமன் (19 மார்ச் 1928 - 1 டிசம்பர் 2015) தமிழ் எழுத்தாளர், இதழாளர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விக்ரமன் (19 மார்ச் 1928 - 1 டிசம்பர் 2015) தமிழ் எழுத்தாளர், இதழாளர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.வரலாற்று நாவல்களை எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

விக்ரமனின் மனைவி பெயர், ராஜலட்சுமி. அவருக்கு, மணியன், கண்ணன் ஆகிய இரண்டு மகன்கள், உமா, ஜெயந்தி, ஹேமா ஆகிய மூன்று மகள்கள்

இலக்கியவாழ்க்கை

விக்ரமனின் இயற்பெயர் வேம்பு. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலின் கதைநாயகனின் பெயரை தனக்காகச் சூட்டிக்கொண்டார்.1940-ஆம் ஆண்டில் தன் பன்னிரண்டாவது வயதில் கலாவல்லி, பரமஹம்சர் என்று இரு கையெழுத்து இதழ்களை வெளியிட்டார். காந்தியின் ஹரிஜன் ஆங்கிலப் இதழை வாசித்து அந்த ஆர்வத்தில் தன் பள்ளித்தோழர் நா. சுப்பிரமணியத்துடன் இணைந்து தமிழ்ச் சுடர் என்ற கையெழுத்து இதழை நடத்தினர். கையெழுத்து இதழை கண்டு பாராட்டிய ஏ.கே.செட்டியார் அதற்கு காகிதம், அட்டை வாங்கி அன்பளிப்பாக அளித்தார். தன் நா. இராமச்சந்திரன் எழுதிய கதை ஒன்று மாலதி எனும் இதழில் வெளியாகி இருந்ததைக் கண்ட விக்ரமன் 1942-ஆம் ஆண்டு ’நண்பா மறந்துவிட்டாயா?’ என்ற சிறுகதையை “மாலதி’ இதழுக்கு அனுப்பினார். அதில் பணியாற்றிய நவீனன் அதை வெளியிட்டார். தொடர்ந்து “வள்ளிக் கணவன்’, “விளையாட்டுக் கல்யாணம்’ என்ற சிறுகதைகளும் அவ்விதழில் வெளிவந்தன. தன் இயற்பெயரான வேம்பு என்ற பெயரிலேயே அவற்றை எழுதினார்.

1944-ஆம் ஆண்டில் தன் நண்பர் ஓவிய ஸுபாவுடன் மாமல்லபுரம் சென்று ’மாமல்லபுரம், ஒரு வழிக் குறிப்புப் புத்தகம்’ என்னும் கட்டுரையை 1943-ல் காஞ்சி கோவில்களைப் பற்றி ’கலைக்காஞ்சி’ என்ற தொடர் ’ஜ்வாலா’ என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து திருப்பரங்குன்றம், சோழர்களின் பெருமை கூறு, கங்காபுரி காவலன் என பயணக்கட்டுரைகளை எழுதினார். வெளிநாடுகளுக்கும் சென்று பயணக்கட்டுரைகளை எழுதினார்


ஆக்கங்கள்[தொகு]

  1. உதயசந்திரன்
  2. நந்திபுரத்து நாயகி
  3. பரிவாதினி
  4. பாண்டியன் மகுடம்
  5. யாழ் நங்கை
  6. பராந்தகன் மகள்
  7. வந்தியத்தேவன் வாள்