under review

வசுமதி ராமசாமி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் வை.மு.கோதைநாயகி போல் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு பெயர் வசுமதி ராமசாமி. (தோற்றம்: 21.4.1917, மறைவு: 4.1.2004). கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்ம...")
 
(Corrected error in line feed character)
 
(26 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் வை.மு.கோதைநாயகி போல் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு பெயர் வசுமதி ராமசாமி. (தோற்றம்: 21.4.1917, மறைவு: 4.1.2004). கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன.
[[File:Vasumathi-ramasamy-color1.jpg|thumb|வசுமதி ராமசாமி]]
வசுமதி ராமசாமி (ஏப்ரல் 21, 1917 - ஜனவரி 4, 2004). தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். பெண்களுக்கான இதழ்களில் குடும்பச்சூழலைச் சித்தரித்தவர்.
== பிறப்பு கல்வி ==
ஏப்ரல் 21, 1917-ல் கும்பகோணத்தில் பிறந்தார். இவருடைய தமையன் சுவாமி ஐயங்கார் கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர். அவ்வாறு இலக்கிய வாசிப்புக்குள் ஈர்க்க்ப்பட்டார்.
== தனிவாழ்க்கை ==
12 வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆனது. கணவர் ராமசாமி ஐயங்கார் சென்னையில் வழக்கறிஞர். 'அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள்

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர் வசுமதி ராமசாமி.
எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோர் நெருங்கிய தோழிகள்.
[[File:வசு.png|thumb|வசுமதி ராமசாமி]]
== இலக்கியவாழ்க்கை ==
[[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] ஆசிரியையாக இருந்து நடத்திய [[ஜகன்மோகி]]னி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. அவர் நடத்திய [[நந்தவனம்]] பெண்கள் இதழில் எழுதினார். தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப்பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான 'காப்டன் கல்யாணம்' விகடனில் வெளிவந்தது. கல்கியில் எழுதிய 'தேவியின் கடிதங்கள்' என்ற கடித வடிவ நாவலுக்கு ராஜாஜி அணிந்துரை வழங்கினார்.
ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
== சமூகசேவை ==
காந்தியை நேரடியாகச் சந்தித்து அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றார். காந்தி தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றார். முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய 'இந்திய மாதர் சங்கம்’ என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். (இறுதி ஆண்டுத் தேர்வின் போது கணவர் மறைந்தது இவரைப் பாதிக்கவே படிப்பைத் தொடரவில்லை.)
காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் பக்தி கொண்ட வசுமதி ராமசாமி அவர் கூறியபடி 'ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார்.  

தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் "அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள 'சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20- ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஒளவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.
 
== இதழியல்  ==
கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்<nowiki>' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. ""தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?''</nowiki> என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது குரு என்று அவர் சொன்னதுண்டு.
வசுமதி ராமசாமி நடத்திய இதழ்கள்
 
* ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள் (ஆன்மிக சிறுவர் இதழ்)
காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். காந்தி சென்ற வழியில் நடந்தவர் மட்டுமல்ல, காந்தி காட்டிய வழியில் நடந்தவரும் கூட.
* பாரத தேவி (பெண்கள் இதழ்)
 
* ராஜ்ய லட்சுமி (பெண்கள் இதழ்)
முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய "இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.
== மறைவு ==
 
வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004 -ல் மறைந்தார்
லால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். "தேவியின் கடிதங்கள்' என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றவர்.
== இலக்கிய இடம் ==
 
ஜகன்மோகினி, கலைமகள் போன்ற இதழ்களை மையமாக்கி எழுதிய பெண் எழுத்தாளர்கள் தமிழில் ஏராளமான படைப்புகளை எழுதியிருக்கின்றனர். நடுத்தரவர்க்க குடும்பச் சூழல், பெரும்பாலும் பிராமணக் குடும்பப்பின்னனி, கொண்டவை. எளிய உளவியலும், உணர்ச்சிநாடகத் தன்மையும் கொண்டவை. பொதுவாசிப்புக்குரியவை. வசுமதி ராமசாமி அவ்வகையைச் சேர்ந்த எழுத்தாளர்.
சிட்டி, ரா.கணபதி, பரணீதரன் போல இவரும், நூறாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் மேல் மிகுந்த பக்திகொண்டவர். "இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர் ராம்நாத் கோயங்கா, பரமாச்சாரியாரை நடமாடும் கடவுள் என்று, தாம் அளித்த "இல்லஸ்டிரேடட் வீக்லி' நேர்காணலில் சொன்னபோது, அந்தக் கருத்தை நூறு சதவிகிதம் ஏற்றவர் வசுமதி ராமசாமி. பரமாச்சாரியார் கட்டளைப்படி, "ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்கும் தொண்டு தொடர்கிறது.)
== நூல்கள் ==
 
நாவல்கள்
காவிரியுடன் கலந்த காதல், சந்தனச் சிமிழ், பார்வதியின் நினைவில், பனித்திரை, ராஜக்கா முதலிய பல சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். "ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் "இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது "சிவன் சொத்து' என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன்.
* தேவியின் கடிதங்கள்  
 
* காப்டன் கல்யாணம்
சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் இவரும் ஒருவர். பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர்.
* காவிரியுடன் கலந்த காதல்
 
* சந்தனச் சிமிழ்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.
* பார்வதியின் நினைவில்
 
* பனித்திரை
சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒüவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஒளவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.
* ராஜக்கா
 
====== வாழ்க்கை வரலாறு ======
கணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். வசுமதி, கணவர் ராமசாமியைக் கைப்பிடித்தபோது வசுமதியின் வயது பன்னிரண்டுதான். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார்.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
 
* எஸ்.அம்புஜம்மாள்  
"அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள். வசுமதி ராமசாமி, தம் குழந்தைகளின் உள்ளத்தில் மட்டுமல்ல, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களிலும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களிலும் நிலையாக வாழ்கிறார்.
== உசாத்துணை ==
* [https://s-pasupathy.blogspot.com/2017/04/702-1.html பசுபதிவுகள்: 702. வசுமதி ராமசாமி -1]
* [https://nakarajan.blogspot.com/2020/01/vasumathi-ramasamy-writer-born-1917.html NAKARAJAN: VASUMATHI RAMASAMY WRITER BORN 1917 APRIL 21-JANUARY 4,2004]
* [https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5926 தினகரன் -பெண்களின் மனதை வென்ற எழுத்தாளர்]
* [http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4640&id1=84&issue=20180316 குங்குமம்-பெண்களின் மனதை வென்ற எழுத்தாளர் வசுமதி ராமசாமி]
* [https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/blog-post_3.html தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: 3 - வசுமதி ராமசாமி]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 20:17, 12 July 2023

வசுமதி ராமசாமி

வசுமதி ராமசாமி (ஏப்ரல் 21, 1917 - ஜனவரி 4, 2004). தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். பெண்களுக்கான இதழ்களில் குடும்பச்சூழலைச் சித்தரித்தவர்.

பிறப்பு கல்வி

ஏப்ரல் 21, 1917-ல் கும்பகோணத்தில் பிறந்தார். இவருடைய தமையன் சுவாமி ஐயங்கார் கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர். அவ்வாறு இலக்கிய வாசிப்புக்குள் ஈர்க்க்ப்பட்டார்.

தனிவாழ்க்கை

12 வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆனது. கணவர் ராமசாமி ஐயங்கார் சென்னையில் வழக்கறிஞர். 'அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள்

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோர் நெருங்கிய தோழிகள்.

வசுமதி ராமசாமி

இலக்கியவாழ்க்கை

வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. அவர் நடத்திய நந்தவனம் பெண்கள் இதழில் எழுதினார். தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப்பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான 'காப்டன் கல்யாணம்' விகடனில் வெளிவந்தது. கல்கியில் எழுதிய 'தேவியின் கடிதங்கள்' என்ற கடித வடிவ நாவலுக்கு ராஜாஜி அணிந்துரை வழங்கினார். ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

சமூகசேவை

காந்தியை நேரடியாகச் சந்தித்து அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றார். காந்தி தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றார். முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய 'இந்திய மாதர் சங்கம்’ என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் பக்தி கொண்ட வசுமதி ராமசாமி அவர் கூறியபடி 'ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள 'சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20- ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஒளவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

இதழியல்

வசுமதி ராமசாமி நடத்திய இதழ்கள்

  • ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள் (ஆன்மிக சிறுவர் இதழ்)
  • பாரத தேவி (பெண்கள் இதழ்)
  • ராஜ்ய லட்சுமி (பெண்கள் இதழ்)

மறைவு

வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004 -ல் மறைந்தார்

இலக்கிய இடம்

ஜகன்மோகினி, கலைமகள் போன்ற இதழ்களை மையமாக்கி எழுதிய பெண் எழுத்தாளர்கள் தமிழில் ஏராளமான படைப்புகளை எழுதியிருக்கின்றனர். நடுத்தரவர்க்க குடும்பச் சூழல், பெரும்பாலும் பிராமணக் குடும்பப்பின்னனி, கொண்டவை. எளிய உளவியலும், உணர்ச்சிநாடகத் தன்மையும் கொண்டவை. பொதுவாசிப்புக்குரியவை. வசுமதி ராமசாமி அவ்வகையைச் சேர்ந்த எழுத்தாளர்.

நூல்கள்

நாவல்கள்

  • தேவியின் கடிதங்கள்
  • காப்டன் கல்யாணம்
  • காவிரியுடன் கலந்த காதல்
  • சந்தனச் சிமிழ்
  • பார்வதியின் நினைவில்
  • பனித்திரை
  • ராஜக்கா
வாழ்க்கை வரலாறு
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • எஸ்.அம்புஜம்மாள்

உசாத்துணை

✅Finalised Page