being created

லுன் பவாங்

From Tamil Wiki
Revision as of 14:22, 11 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|லுன் பவாங் இன மூதாதைலுன் பவாங் பழங்குடியினர் (Lun Bawang) கிழக்கு கலிமந்தன், புருனே (டெம்புரோங் மாவட்டம் – Temburong District), சபாவின் தென்மேற்கு மற்றும் சரவாக்கின் வடக்குப் பகுதி (லிம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
லுன் பவாங் இன மூதாதை

லுன் பவாங் பழங்குடியினர் (Lun Bawang) கிழக்கு கலிமந்தன், புருனே (டெம்புரோங் மாவட்டம் – Temburong District), சபாவின் தென்மேற்கு மற்றும் சரவாக்கின் வடக்குப் பகுதி (லிம்பாங் பிரிவு – Limbang Division) ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் சரவாக் பழங்குடியினர்.

இனப்பரப்பு

லுன் பவாங் என்றால் உட்புற பகுதியில் வாழ்பவர்கள் என்று பொருள். 'லுன்' என்றால் மக்கள், 'பவாங்' என்றால் உட்புறம். லுன் பவாங் பழங்குடியினர் போர்னியோ மலைப்பகுதிகளான கிழக்கு கலிமந்தன், புருனே, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் உட்புறத்தில் தோன்றினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

பண்பாடு

'இராவ் அகோ லுன் பவாங்' எனப்படும் திருவிழா லுன் பவாங் மக்களால் இன்றளவும் தவறாமல் கொண்டாடப்படுகிறது. இது பாரம்பரியமாக நெல் அறுவடைத் திருவிழாவாக இருந்துள்ளது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் நடைபெறும். லுன் பவாங் பழங்குடி தங்களின் மற்ற பழங்குடி நண்பர்களையும் இத்திருவிழாவிற்கு அழைப்பது வழக்கம். 'ங்குய்ப் சுலிங்' (nguip suling) மற்றும் 'அங்க்லுங்' (angklung) போன்ற லுன் பவாங் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனங்களும் இந்நிகழ்வில் நடைப்பெறும். லுன் பவாங் பழங்குடியினர் விருந்தோம்பும் உபசரிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்களாக் கருதப்படுகிறார்கள்.

வாழ்க்கை முறை

இவர்கள் விவசாயம் மற்றும் கோழி, பன்றிகள் மற்றும் எருமைகள் போன்ற கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டுள்ளனர். லுன் பவாங் பழங்குடியினர் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்களால அறியப்படுகிறார்கள். கடந்த காலங்களில் துணிச்சலான போர்வீரர்களாகவும், தாக்குதல் நடத்துபவர்களாகவும், தலைகளை வெட்டி வேட்டையாடுபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்ததால் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை சூழலை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதனால், எதிரிகளை எளிமையான வழியில் பல யுக்திகளைப் பயன்படுத்தி எதிர்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் நீர்நிலைகளில் வாழ்வதற்கும் நீர் போக்குவரத்துகளைக் கையாளுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மொழி

லுன் பவாங் மொழி எழுத்துகள்

வட போர்னியோவைச் சேர்ந்த மலாயோ - போலினேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக லுன் பவாங் மொழி கருதப்படுகிறது. சரவாக் மாநிலத்தின் லவாஸ், லிம்பாங், தாவாவ் ஆகிய மாவட்டங்களிலிம் சபா மாநிலத்தில் கெனிங்காவ் மற்றும் சிப்பித்தாங் ஆகிய மாவட்டங்களிலும் ஏறக்குறைய 24000 பேர் லூன் பவாங் மொழியைப் பேசுகின்றனர். லுன் பவாங் மொழி ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழியில் வெளிவந்த முதல் அச்சு நூலான பைபிள் மொழிப்பெயர்ப்பு 1982 ஆம் ஆண்டு வெளியீடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு லுன் பவாங் மொழி அகராதி வெளியீடப்பட்டிருக்கிறது.

கலை

குயு தாலுன்
சிகர்

லுன் பவாங் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர்கள். முற்காலத்தில் லுன் பவாங் பழங்குடி ஆண்களுக்கான ஆடைகள் குயு தாலுன் (kuyu talun) என்ற மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. தலையைச் சுற்றிக் கட்டப்படும் துணி சிகர் (sigar) என்றும், மேல் சட்டையாக அணியும் துணியை அப்பர் (abpar) என்றும் அழைக்கின்றனர். மேலும், இவர்கள் பல வண்ணங்கள் நகைகள், தொப்பிகள் மற்றும் பாரம்பரிய உடைகளை உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர்கள். சரவாக்கில் உள்ள பல பழங்குடியினரைப் போலவே, பச்சை குத்துவதும் லுன் பவாங் பழங்குடியினரின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

சமயம்

லுன் பவாங் இன மக்கள்  பாகனிய வழிபாட்டுச் சடங்குகளைக் கொண்டிருந்தனர். இருப்பினும், Brunei Evengelical Mission எனப்படும் கிருஸ்துவ மிஷினரியின் கிருஸ்துவச் சமயப் போதனைகளுக்குப் பின்னர் பலரும் கிருஸ்துவச் சமயத்தைத் தழுவினர். லுன் பவாங் இனத்தைச் சேர்ந்த சிலர் இசுலாமியச் சமயத்தையும் தழுவினர்.

உணவு முறை

தாங்கள் உண்ணும் அரிசியை நுபா’ லயா (Nuba’ Laya) எனப்படும் முறையில் வாழையிலை அல்லது இத்திப் (daun itip) எனும் இலையினுள் சுற்றி வைப்பார்கள். பசையம் அரிசி, நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் மற்றும் உப்பு கலந்து செய்யப்படும் கெலுபிஸ் (Kelupis) என்னும் உணவு லுன் பவாங் மக்களின் பாரம்பரிய உணவு ஆகும். அது மட்டுமின்றி, ‘பினரம்’ மற்றும் ‘நுனு’ போன்ற பாரம்பரிய பலகாரங்களும் இதனுள் அடங்கும். மேலும், இறைச்சி மற்றும் மீன்களுடன் உப்பு சேர்த்து ஒரு மாதத்திற்கு மூங்கிலினுள் அடைத்து பாதுகாப்பார்கள். இம்முறையில் பதப்படுத்தப்படும் உணவுகளை தெலு (Telu) என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு புளிப்பு தன்மை கொண்ட உணவுகள் இவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். மேய்ன் கெரம்புட் எனப்படும் கிணற்றில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உப்பை இவர்கள் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மலை உப்பில் அதிக அயோடின் உள்ளடங்கி உள்ளது. குறிப்பாக இளம் குழந்தைகளின் அறிவுத்திறன் அளவை அதிகரிக்கும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.

லுன் பவாங் மக்கள் உயரமாக கட்டப்பட்டிருக்கும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர். இவ்வீடுகளில் ஒரு புறம் ஒரு திறந்த பொது பகுதியும், மறுபுறம் தனியார் குடியிருப்பு போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நீண்ட வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பம் வாழலாம் எனச் சொல்லப்படுகிறது. ‘

திருமணச் சடங்குகள்

லுன் பவாங் இனத் திருமணச்சடங்கில் பெற்றோர்களே மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். லுன் பவாங் இன ஆண்கள் டெலேய் பரோஹ் எனப்படும் வயதையும் பெண்கள் டெச்சுர் பருஹ் எனப்படும் அடைந்தப்பின்னர் திருமணப்பேச்சுவார்த்தை துவங்குகிறது.  சிறுவர்களின் பத்து வயதுக்குள்ளாகவே திருமண நிச்சயம் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், கிருஸ்துவச் சமயப்பரவலுக்குப் பின்னர் லுன் பவாங் இனத்தவரின் திருமணச் சடங்குகள் பெருமளவு மாறியிருக்கிறது.

இறப்புச் சடங்குகள்

லுன் பவாங் இனத்தவர்களின் நம்பிக்கைப்படி இறப்பென்பது வேறொரு உலகத்துக்கான பெயர்வாக நம்பப்படுகிறது. இறந்தவரின் உடலுடன் உடைகள், விலையுயர்ந்த அணிகள், மண்பாண்டம் ஆகியவை உடன் வைத்துப் புதைக்கப்படுகிறது. இருளாக இருக்கும் புத்துலகத்துக்கான வழியில் ஒளிபாய்ச்சுவதற்காக பெண்களின் கைகளில் அணியும் கைவளைகள் உடன் வைத்துப் புதைக்கப்படுகிறது. இறந்த நபரின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒப்பாரி வைக்கும் குழுவினரும் இறப்புச்சடங்கில் பங்கேற்கின்றனர். இறந்த நபரின் ஆன்மாவுக்குத் துணையாக இருக்கும்படி மறையாற்றலை வணங்குகின்றனர்.  இறப்புச்சடங்குகள் நிகழும் போது எவ்வித இசைக்கருவிகளும் இசைக்கப்படக்கூடாது எனும் கட்டுப்பாடும் லுன் பவாங் இனத்தவரிடம் இருக்கிறது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.