being created

லா.ச. ராமாமிர்தம்: Difference between revisions

From Tamil Wiki
(draft copy)
(first draft)
Line 32: Line 32:
அறுபத்தைந்து வருட இலக்கிய வாழ்வில்  இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.
அறுபத்தைந்து வருட இலக்கிய வாழ்வில்  இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

= இலக்கிய இடம் =
அனாயாசமாக படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. மொழி படிமங்களாக ஆகும் தருணம் எல்லா இலக்கிய வடிவங்களிலும் ஒரு உச்ச நிலையாக்க் கருதப் படுகிறது. இந்த அம்சம் தூக்கலாக இருப்பதால் தான் லா.ச.ராவின் படைப்புகள் மீண்டும் மீண்டும் வாசகனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது.
அவரது கூறுமுறை நனவோடை உத்தி (Stream of Consciousness) என்று பரவலாக அழைக்கப் படுகிறது. லா.ச.ராவின் எழுத்து வெறும் நனவோடை உத்தி மட்டுமல்ல என்று '''ஜெயமோகன்''' ஒரு விமர்சனக் கட்டுரையில் எழுதியுள்ளார். அக விகசிப்பு கொண்டஎழுத்து (Psychedelic writing) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளும் ஆகிருதிகளும் ஓங்கி உள்ள உறவுகள் விட்டு வெளியே செல்லாத உலகம். இந்த வட்ட்த்திற்கு வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகள், போர்கள் – இவற்றுடன் லாசராவுக்கும் அவரது பாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே தோன்றும்.ஆனாலும் அந்தக் கதைகள், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து விட்டவை அல்ல. அவற்றில் ஒரு மாபெரும் சலனம், ஒரு இயக்கம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவே அடிப்படையில் லாசாராவின் கலை மேதைமை என்று எண்ணத் தோன்றுகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லாசரா,மௌனி, நகுலன், பிரம்மராஜன், கோணங்கி போன்ற தானியக்க எழுத்து பாணியில் எழுதிய படைப்பாளிகளை ஒப்பிட்டு விமர்சித்தும் ஜெயமோகன் எழுதியுள்ளார்.
= படைப்புகள் =
== புதினங்கள் ==
# ''புத்ர (1965)''
# ''அபிதா (1970)''
# ''கல்சிரிக்கிறது''
# ''பிராயச்சித்தம்''
# ''கழுகு''
# ''கேரளத்தில் எங்கோ''
== சிறுகதைகள் ==
# ''இதழ்கள் (1959)''
# ''ஜனனி (1957)''
# ''பச்சைக் கனவு (1961)''
# ''கங்கா (1962)''
# ''அஞ்சலி (1963)''
# ''அலைகள் (1964)''
# ''தயா (1966)''
# ''மீனோட்டம்''
# ''உத்தராயணம்''
# ''நேசம்''
# ''புற்று''
# ''துளசி''
# ''என் பிரியமுள்ள சினேகிதனுக்கு''
# ''அவள்''
# ''த்வனி''
# ''விளிம்பில்''
# ''அலைகள்''
# ''நான்''
# ''சௌந்தர்ய''
== நினைவலைகள் ==
# ''சிந்தாநதி'' (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
# ''பாற்கடல்''
== கட்டுரைகள் ==
# ''முற்றுப்பெறாத தேடல்''
# ''உண்மையான தரிசனம்''
= உசாத்துணை =
# குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான லா.ச.ரா. நேர்காணல்
# அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து  ஜடாயு - தமிழ்ஹிந்து (tamilhindu.com)

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:57, 30 January 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by Muthukumar R (pammal)

La.Sa.Ra.jpg

மணிக்கொடி யுகத்தின் கடைசி நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்தவர் ‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்து வந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்.

இவருடைய படைப்புகள் குறியீட்டு நடையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத அனுபவங்கள், ஆன்மிகம் மற்றும்  இசையை மையமாக கொண்டவை.

சிந்தாநதி என்ற சுயசரிதை நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு, இளமை

லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916 இல் கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.இவருடைய தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது.  எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்திருக்கிறார்.  தி.ஜா.ரங்கநாதன் (தி.ஜா.ரா), லா.சா.ராவின் இலக்கிய  வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

தனி வாழ்க்கை

லா சா ரா, வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடர வங்கியாளராக, பஞ்சாப் நேஷனல் பேங்க் கில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.

குடும்பம்

லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருக்கிறார். எல்லாம் பெருந்திரு மீது புனையப் பட்டது. அதை ஒரு இடையறாத தியானமாக, நித்திய வழிபாடாக அவர் செய்து வருகிறார். இதே போன்றதொரு உணர்வு தான் லா.சா.ரா தன் எழுத்துக்கான உந்துதல் பற்றிக் கூறும் போதும் வெளிப்படுகிறது.

இவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. இவருடைய மனைவி ஹைமாவதி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இலக்கியவாழ்க்கை

பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான  நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

மணிக்கொடி எழுத்தாளர்கள்  ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும்  கூறுகிறார்.

தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். தனது 50வது வயதில் "புத்ர" என்னும் தனது முதல் நாவலை  எழுதினார்.

அறுபத்தைந்து வருட இலக்கிய வாழ்வில்  இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

அனாயாசமாக படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. மொழி படிமங்களாக ஆகும் தருணம் எல்லா இலக்கிய வடிவங்களிலும் ஒரு உச்ச நிலையாக்க் கருதப் படுகிறது. இந்த அம்சம் தூக்கலாக இருப்பதால் தான் லா.ச.ராவின் படைப்புகள் மீண்டும் மீண்டும் வாசகனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது.

அவரது கூறுமுறை நனவோடை உத்தி (Stream of Consciousness) என்று பரவலாக அழைக்கப் படுகிறது. லா.ச.ராவின் எழுத்து வெறும் நனவோடை உத்தி மட்டுமல்ல என்று ஜெயமோகன் ஒரு விமர்சனக் கட்டுரையில் எழுதியுள்ளார். அக விகசிப்பு கொண்டஎழுத்து (Psychedelic writing) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளும் ஆகிருதிகளும் ஓங்கி உள்ள உறவுகள் விட்டு வெளியே செல்லாத உலகம். இந்த வட்ட்த்திற்கு வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகள், போர்கள் – இவற்றுடன் லாசராவுக்கும் அவரது பாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே தோன்றும்.ஆனாலும் அந்தக் கதைகள், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து விட்டவை அல்ல. அவற்றில் ஒரு மாபெரும் சலனம், ஒரு இயக்கம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவே அடிப்படையில் லாசாராவின் கலை மேதைமை என்று எண்ணத் தோன்றுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லாசரா,மௌனி, நகுலன், பிரம்மராஜன், கோணங்கி போன்ற தானியக்க எழுத்து பாணியில் எழுதிய படைப்பாளிகளை ஒப்பிட்டு விமர்சித்தும் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

படைப்புகள்

புதினங்கள்

  1. புத்ர (1965)
  2. அபிதா (1970)
  3. கல்சிரிக்கிறது
  4. பிராயச்சித்தம்
  5. கழுகு
  6. கேரளத்தில் எங்கோ

சிறுகதைகள்

  1. இதழ்கள் (1959)
  2. ஜனனி (1957)
  3. பச்சைக் கனவு (1961)
  4. கங்கா (1962)
  5. அஞ்சலி (1963)
  6. அலைகள் (1964)
  7. தயா (1966)
  8. மீனோட்டம்
  9. உத்தராயணம்
  10. நேசம்
  11. புற்று
  12. துளசி
  13. என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
  14. அவள்
  15. த்வனி
  16. விளிம்பில்
  17. அலைகள்
  18. நான்
  19. சௌந்தர்ய

நினைவலைகள்

  1. சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  2. பாற்கடல்

கட்டுரைகள்

  1. முற்றுப்பெறாத தேடல்
  2. உண்மையான தரிசனம்

உசாத்துணை

  1. குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான லா.ச.ரா. நேர்காணல்
  2. அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து  ஜடாயு - தமிழ்ஹிந்து (tamilhindu.com)