லானோ

From Tamil Wiki
Revision as of 13:30, 16 November 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "thumb|நன்றி: Brush Strokes லானோ இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். == வாழிடம் == இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், பேராக் மாநிலத்தின் ஹுலு பேராக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி: Brush Strokes

லானோ இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வாழிடம்

இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், பேராக் மாநிலத்தின் ஹுலு பேராக் வட்டாரத்தில் வசிக்கின்றனர்.

தொழில்

லானோ பழங்குடியினர் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தல், மீன் பிடித்தல், வன வளங்களைச் சேகரித்தல் போன்ற வேலைகளைச் செய்வர்.

நம்பிக்கைகள்

குவாசா ஆதாஸ்

லானோ பழங்குடியினர் கண்களுக்குத் தெரியாத சக்திகளை நம்புபவர்கள். இதனை ஆவ் குவாசா என அழைப்பர். ஆவ்குவாசா ஆதாஸ் என்றால் மலாய் மொழியில் உயரிய சக்தி என்று பொருள். லானோ பழங்குடியினரை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கரேய் (Karei), யாரா மெங் (Yara Meng) ஆவிகளைக் குவாசா ஆதாஸின் கீழ் வகைப்படுத்தியுள்ளனர். குவாசா ஆதாஸ் ஆவிகளே கண்களுக்குத் தெரியாத சக்திகளால் கட்டப்பட்டு பூமியில் இடி, மின்னல், வெள்ளங்களை ஏற்படுத்துகின்றனரென லானோ பழங்குடி நம்புகின்றனர்.

ஓராங் ஹீடோப்

ஓராங் ஹீடோப் என்றால் பூமியிலும் சொர்கத்திலும் வாழும் கண்களுக்குத் தெரியாத ஆவிகள். லானோ பழங்குடியினர் தொக் பெட்ன் (Tok Pedn), சின்னோய் (Chinnoi), காரேய் (Karei) எனும் ஆவிகளின் நம்பிக்கையுடையவர்கள்.

சின்னோய்

சின்னோய் மனிதர்களுக்கு உதவும் ஆவி. லானோ பழங்குடியினர் சின்னோயை வாழ்த்தி பெனின்லோன் (Peninlon) பாடல்களில் பாடியுள்ளனர்.

காரேய்

லானோ பழங்குடியினர் காரேய் சொர்க்கத்தில் வாழுமென நம்புகின்றனர். காரேய் பூமியில் புலியாக அவதரித்து மனிதர்களைக் கண்காணிக்கும். லானோ பழங்குடியினர் காரேயைச் சியமாங் தோற்றத்தில் இருக்குமென நம்புகின்றனர். [Symphalangus syndactylus] காரேய் ஹலாக்கின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஹலாக் என்பவர் மந்திரவாதி, ஆவிகளுடன் பேசும் திறமையுடையவர். காரேய் இடி, மின்னல், புலி, நோய் நொடிகளின் வழியாக தவறிழைத்த மனிதர்களைத் தண்டிக்கும் என லானோ பழங்குடி நம்புகின்றனர்.

கலை

பெனின்லோன் (Peninlon)

பெனின்லோன் என்பது ஆடல் பாடல் கலந்த ஓரு கலை. பெனின்லேனை மருத்துவத்துக்காகவும், விருந்தினர்களை வரவேற்கவும், இறப்பு சடங்குகளிலும் நிகழ்த்துகின்றனர். பெனின்லோன் ஹாலாக்கால் பாடப்படுகிறது. பெனின்லோன் பாடும்போது, இரு வேறான நீளம் கொண்ட மூங்கிலால் ஒலி எழுப்பப்படுகிறது. இந்த மூங்கில் இசைக்கருவியின் பெயர் சந்தோங்.  

சடங்குகள்

நடவு சடங்கு

லானோ பழங்குடியினர் நெல் பயிரிடுவதற்கு முன்னம் நடவு சடங்கு செய்வர். நடவு சடங்கு ஹாலாக்கால் நடத்தப்படும். நடவு சடங்கு மலை அரிசியின் ஆவியை வழிப்பட செய்வதாகும்.

இரத்த தியாக சடங்கு

மனிதர்கள் தவறிழைப்பதால் காரேய் கோபமடைகிறது. அதனால், மனிதனுக்குப் பல இடர்களைத் தொந்தரவாகக் கொடுக்கிறது. எனவே, காரேயை ஆற்றுப்படுத்த இரத்த தியாக சடங்கு நிகழ்கிறது.

மரணம்

லானோ பழகுடியினரில் ஒருவர் இறந்தால், அவரைக் குளிப்பாட்டி புதைக்க எடுத்து செல்வர். லானோ பழங்குடி சமூதாயத்தில் மரணித்த ஒருவரை அவரின் நகைகளுடன் புதைப்பர். மரணித்தவரின் மற்ற உடைமைகளை அவரின் கல்லறையில் வைப்பர்.

மரணம் நிகழ்ந்த வீட்டில் ஆடல், பாடல் போன்ற அலகார நடவடிக்கைகள் நடக்காது. இந்த விலக்கு ஒருவர் மரணித்த கணம் முதல் இறுதி விருந்து வரை கடைபிடிக்கப்படும். ஒருவர் இறந்த மறு நாள் இரவு முதல் விருந்து நடக்கும். முதல் விருந்தை கெனுயி சென்ட்ரு (Kenu’yi Sendru) என்றழைப்பர். இரண்டாம் நாள் விருந்து கெனுயி சிசேய் (Kenuyi’ Chichei). லானோ பழங்குடியினர் கெனுயி சிசேயைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு விருந்து உபசரிப்பு நடக்கும். ஏழாம் இறந்தவரின் ஆவிக்கு விடைகொடுப்பர்.

புத்தகம்

The last descendants of The Lanoh Hunters and Gatherers in Malaysia (Hamid Mohd Isa, Penerbitan Universiti Sains Malaysia, 2015)