றாம் சந்தோஷ்

From Tamil Wiki
Revision as of 17:06, 7 July 2022 by Ramya (talk | contribs)

றாம் சந்தோஷ் (விமல் குமார்) (நவம்பர் 2, 1993) தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

வேலூர் வாணியம்பாடியில், உதயேந்திரம் கிராமத்தில் சண்முகம் பொன்னுசாமி, வனஜா இணையருக்கு றாம் சந்தோஷ் நவம்பர் 2, 1993இல் பிறந்தார். பள்ளிக்கலைவியை உதயேந்திரம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளியிலும், வாணியம்பாடி இந்து மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றார். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வேதியியல் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றார். ஆந்திரா மாநிலம் குப்பத்தில் திராவிடப்பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியரான முனைவர் த. விஷ்ணுகுமாரனின் நெறியாழ்கையின் கீழ் “நச்சினார்க்கினியாரின் தொல்காப்பியக் கோட்பாடு” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.

தனி வாழ்க்கை

ஆந்திரா மாநிலம் குப்பத்தில் திராவிட, கணிணித்துறையில் கோ. பாலசுப்ரமணியன் நெறிப்படுத்தலில் திட்டப்பணியாளராக இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

விமல்குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார். இவரின் முதல் படைப்பு சிற்றேடு இதழில் 2014இல் கழிவறைக் கோடுகள் என்ற கவிதை வெளியானது. சிற்றேடு, மணல்வீடு, தடம், நடு, மலைகள்.காம், பரிசோதனை, சிறுபத்திரிக்கை, ஓலைச்சுவடி, கனலி, வாசகசாலை, காலச்சுவடு, கணையாழி, நீலம் இதழ்களில் எழுதியுள்ளார். சொல்வெளித்தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழவன், ஞானக்கூத்தன், சி. மணி, ரமேஷ் : பிரேம், நாச்சியார் (ஆண்டாள்), செயங்கொண்டார் போன்றோரின பாதிப்பு தொடக்கக் கால ஆதர்ஷம், கவிஞர், அப்துல் ரகுமான். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத்திறனாய்வு, கோட்பாடு, நாட்டாற்வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை கண்ணீரின் நிறங்கள் என்ற தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

இலக்கியம் மற்றும் ஆய்வுலகில் தமிழவன் சிந்தனைப் பள்ளியினைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

விருதுகள்

  • சொல்வெளித்தவளைகள் கவிதைத்தொகுப்பிற்காக 2020இல் கவிஞர் ஆத்மாநாம் விருது பெற்றார்.
  • 2022இல் பா.ரா. சுப்ரமணியன் இளம் ஆய்வறிஞர் பட்டம் பெற்றார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • சொல்வெளித்தவளைகள் (2018)
  • இரண்டாம் பருவம் (2021)
  • கண்ணீரின் நிறங்கள் (மொழிபெயர்ப்பு)

இணைப்புகள்

  • றாம் சந்தோஷ்: வலைதளம்