first review completed

ருமானாவ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
சபாவில் வாழும் பழங்குடிச் சிறுபான்மை மக்களில் ருமானாவ் இனக்குழுவினரும் அடங்குவர்.
மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடிச் சிறுபான்மை மக்களில் ருமானாவ் இனக்குழுவினரும் அடங்குவர்.
[[File:Rumanau.jpg|thumb|ருமானாவ் பெண்]]

=== இனப்பரப்பு ===
===இனப்பரப்பு===
வட சபாவில் அமைந்திருக்கும் கினாபாத்தாங்கான் ஆற்றங்கரையை ஒட்டி வாழும் ஒராங் சுங்கை இனக்குழு மக்களில் ஒரு பிரிவினராக ருமானாவ் இனக்குழுவினர் வகைப்படுத்தப்படுகின்றனர்.

=== சமயம் ===
===சமயம்===
ருமானாவ் மக்கள் கிருஸ்த்துவ சமயத்தையும் இசுலாமியச் சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.
ருமானாவ் மக்கள் கிறிஸ்துவ சமயத்தையும் இஸ்லாமியச் சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

=== மொழி ===
===மொழி===
ருமானாவ் மக்கள் ருமானாவ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். ருமானாவ் மொழி பைத்தான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்படுகிறது. ருமானாவ் மொழி ரோமானாவ், ரோமாராவ், ருமானாவ் அலாப் என்றும் அழைக்கப்படுகிறது.  

=== தொழில் ===
===தொழில்===
ருமானாவ் மக்கள் மலைத்தேன் சேகரிப்பதில் தேர்ந்தவர்கள். ருமானாவ் மக்கள் மெங்காவாகு பகுதியில் அமைந்திருக்கும் காடுகளில் மலைத்தேனை அறுவடை செய்கின்றனர். சபா மாநில காட்டுவளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மெங்காவாகு பகுதியில் ருமானாவ் மக்கள் மலைத்தேனைச் சேகரிப்பதற்கு அரசு அனுமதியளித்திருக்கிறது.

=== தலைவேட்டை ===
===தலைவேட்டை===
ருமானாவ் இனக்குழு தலைவேட்டையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. 1885 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வட போர்னியோ பிரிட்டன் கம்பெனியின் அறிக்கையின்படி கினாபாத்தாங்கான் பகுதியில் வாழ்ந்த மக்கியாங் பிரிவுக்கும் ருமானாவ் பிரிவுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தலையை வேட்டையாடும் சண்டை இருந்தது எனச் சொல்லப்படுகிறது. 1900 ஆண்டுவாக்கில் ருமானாவ் மக்களின் குடியிருப்பில் தங்கிய பிரிட்டன் கடலோடியான டோரோதி காதோர் தன் நாட்குறிப்பில் வாரந்தோறும் தலைகள் இல்லாத சடலங்களை பிரிட்டன் அதிகாரிகள் காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர் எனக் குறிப்பிடுகிறார்.
ருமானாவ் இனக்குழு தலைவேட்டையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. 1885-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வட போர்னியோ பிரிட்டன் கம்பெனியின் அறிக்கையின்படி கினாபாத்தாங்கான் பகுதியில் வாழ்ந்த மக்கியாங் பிரிவுக்கும் ருமானாவ் பிரிவுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தலையை வேட்டையாடும் சண்டை இருந்தது எனச் சொல்லப்படுகிறது. 1900 ஆண்டுவாக்கில் ருமானாவ் மக்களின் குடியிருப்பில் தங்கிய பிரிட்டன் கடலோடியான டோரோதி காதோர் தன் நாட்குறிப்பில் வாரந்தோறும் தலைகள் இல்லாத சடலங்களை பிரிட்டன் அதிகாரிகள் காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர் எனக் குறிப்பிடுகிறார்.
[[File:821307e7-0a39-411f-92a1-b389f854e316 1.jpg|thumb|பூலியான் தூண் நிறுவும் சடங்கு]]

மே 4, 1953 ஆம் ஆண்டு ருமானாவ் இனக்குழுவுக்கும் மங்காக் இனக்குழுவுக்கும் இடையில் நூறாண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தலை கொய்யும் வேட்டையை பிரிட்டன் அரசு இணக்கப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டது. தொங்கோட் மாவட்டத்தில் இருக்கும் கம்போங் கியாண்டோங்கோவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் இரு இனக்குழுவின் மூத்தார்களும் கலந்து மோமோபோல் அல்லது மிதாரு என்றழைக்கப்படும் சடங்கைச் செய்தனர். போரை நிறுத்தும் உறுதிமொழிச் சடங்கில் பூலியான் எனப்படும் தூண் நடப்பட்டு கோழியொன்று பலிகொடுக்கப்பட்டு அதன் குருதி தூண் மீது ஊற்றப்பட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவோரின் கல்லறை வரை குருதிப்பலி தொடரும் என்ற குறியீட்டுச் சடங்காகக் கோழி பலியளிக்கப்பட்டது.
மே 4, 1953 அன்று ருமானாவ் இனக்குழுவுக்கும் மங்காக் இனக்குழுவுக்கும் இடையில் நூறாண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தலை கொய்யும் வேட்டை பிரச்சினைக்கு  பிரிட்டன் அரசு இணக்கப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டது. தொங்கோட் மாவட்டத்தில் இருக்கும் கம்போங் கியாண்டோங்கோவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் இரு இனக்குழுவின் மூத்தார்களும் கலந்து மோமோபோல் அல்லது மிதாரு என்றழைக்கப்படும் சடங்கைச் செய்தனர். போரை நிறுத்தும் உறுதிமொழிச் சடங்கில் பூலியான் எனப்படும் தூண் நடப்பட்டு கோழியொன்று பலிகொடுக்கப்பட்டு அதன் குருதி தூண் மீது ஊற்றப்பட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவோரின் கல்லறை வரை குருதிப்பலி தொடரும் என்ற குறியீட்டுச் சடங்காகக் கோழி பலியளிக்கப்பட்டது.

=== திருமணச் சடங்குகள் ===
===திருமணச் சடங்குகள்===
ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் ஒராங் சுங்கை இனக்குழுவினரின் வழக்கப்படியே நிகழும். ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் பெண் பார்க்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் திருமண நிச்சயச் சடங்குகள் நிகழ்கின்றன. அச்சடங்கின் போது மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்குச் சென்று திருமணத்துக்கான உறுதியை அளிக்கின்றனர். அதன் பின்னர், டமாக் எனப்படும் சீர் பொருட்களுக்கான பேச்சுவார்த்தை நிகழ்கிறது. திருமண நாளும், திருமணத்தின் போது மணமகன் வீட்டார் அளிக்க வேண்டும் சீர் பொருட்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. ஒராங் சுங்கை மக்களின் திருமணச் சடங்குகள் அவரவர் சார்ந்திருக்கும் சமயச்சடங்குகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.
ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் ஒராங் சுங்கை இனக்குழுவினரின் வழக்கப்படியே நிகழும். ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் பெண் பார்க்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் திருமண நிச்சயச் சடங்குகள் நிகழ்கின்றன. அச்சடங்கின் போது மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்குச் சென்று திருமணத்துக்கான உறுதியை அளிக்கின்றனர். அதன் பின்னர், டமாக் எனப்படும் சீர் பொருட்களுக்கான பேச்சுவார்த்தை நிகழ்கிறது. திருமண நாளும், திருமணத்தின் போது மணமகன் வீட்டார் அளிக்க வேண்டும் சீர் பொருட்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. ஒராங் சுங்கை மக்களின் திருமணச் சடங்குகள் அவரவர் சார்ந்திருக்கும் சமயச்சடங்குகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

=== இறப்புச்சடங்குகள் ===
===இறப்புச்சடங்குகள்===
ருமானாவ் மக்களின் இறப்புச்சடங்குகள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. ஒராங் சுங்கை மக்களில் பெரும்பாலானோர் இசுலாமியச் சமயத்தைப் பின்பற்றுவதால் இறப்புச்சடங்குகள் இசுலாமியச் சமய முறைப்படியே நிகழ்கின்றன.  
ருமானாவ் மக்களின் இறப்புச்சடங்குகள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. ஒராங் சுங்கை மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமப் பின்பற்றுவதால் இறப்புச்சடங்குகள் இஸ்லாமியச் சமய முறைப்படியே நிகழ்கின்றன.  

=== உசாத்துணை ===
===உசாத்துணை===
[https://openresearch-repository.anu.edu.au/bitstream/1885/253338/1/PL-C78.139.pdf பைத்தானிய மொழிக்குடும்பம், ஜூலி, கே.கிங், 1984]

சபாவில் கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் மனித உருவங்கள், 2017, Yunus Sauman Sabin, Adnan Jusoh, Wan Noorlizawati Wan Mat Ali & Zuliskandar Ramli

{{Ready for review}}
{{First review completed}}
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:01, 7 September 2023

மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழும் பழங்குடிச் சிறுபான்மை மக்களில் ருமானாவ் இனக்குழுவினரும் அடங்குவர்.

ருமானாவ் பெண்

இனப்பரப்பு

வட சபாவில் அமைந்திருக்கும் கினாபாத்தாங்கான் ஆற்றங்கரையை ஒட்டி வாழும் ஒராங் சுங்கை இனக்குழு மக்களில் ஒரு பிரிவினராக ருமானாவ் இனக்குழுவினர் வகைப்படுத்தப்படுகின்றனர்.

சமயம்

ருமானாவ் மக்கள் கிறிஸ்துவ சமயத்தையும் இஸ்லாமியச் சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி

ருமானாவ் மக்கள் ருமானாவ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். ருமானாவ் மொழி பைத்தான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்படுகிறது. ருமானாவ் மொழி ரோமானாவ், ரோமாராவ், ருமானாவ் அலாப் என்றும் அழைக்கப்படுகிறது.

தொழில்

ருமானாவ் மக்கள் மலைத்தேன் சேகரிப்பதில் தேர்ந்தவர்கள். ருமானாவ் மக்கள் மெங்காவாகு பகுதியில் அமைந்திருக்கும் காடுகளில் மலைத்தேனை அறுவடை செய்கின்றனர். சபா மாநில காட்டுவளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மெங்காவாகு பகுதியில் ருமானாவ் மக்கள் மலைத்தேனைச் சேகரிப்பதற்கு அரசு அனுமதியளித்திருக்கிறது.

தலைவேட்டை

ருமானாவ் இனக்குழு தலைவேட்டையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. 1885-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வட போர்னியோ பிரிட்டன் கம்பெனியின் அறிக்கையின்படி கினாபாத்தாங்கான் பகுதியில் வாழ்ந்த மக்கியாங் பிரிவுக்கும் ருமானாவ் பிரிவுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தலையை வேட்டையாடும் சண்டை இருந்தது எனச் சொல்லப்படுகிறது. 1900 ஆண்டுவாக்கில் ருமானாவ் மக்களின் குடியிருப்பில் தங்கிய பிரிட்டன் கடலோடியான டோரோதி காதோர் தன் நாட்குறிப்பில் வாரந்தோறும் தலைகள் இல்லாத சடலங்களை பிரிட்டன் அதிகாரிகள் காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர் எனக் குறிப்பிடுகிறார்.

பூலியான் தூண் நிறுவும் சடங்கு

மே 4, 1953 அன்று ருமானாவ் இனக்குழுவுக்கும் மங்காக் இனக்குழுவுக்கும் இடையில் நூறாண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தலை கொய்யும் வேட்டை பிரச்சினைக்கு பிரிட்டன் அரசு இணக்கப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டது. தொங்கோட் மாவட்டத்தில் இருக்கும் கம்போங் கியாண்டோங்கோவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் இரு இனக்குழுவின் மூத்தார்களும் கலந்து மோமோபோல் அல்லது மிதாரு என்றழைக்கப்படும் சடங்கைச் செய்தனர். போரை நிறுத்தும் உறுதிமொழிச் சடங்கில் பூலியான் எனப்படும் தூண் நடப்பட்டு கோழியொன்று பலிகொடுக்கப்பட்டு அதன் குருதி தூண் மீது ஊற்றப்பட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவோரின் கல்லறை வரை குருதிப்பலி தொடரும் என்ற குறியீட்டுச் சடங்காகக் கோழி பலியளிக்கப்பட்டது.

திருமணச் சடங்குகள்

ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் ஒராங் சுங்கை இனக்குழுவினரின் வழக்கப்படியே நிகழும். ருமானாவ் மக்களின் திருமணச் சடங்குகள் பெண் பார்க்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் திருமண நிச்சயச் சடங்குகள் நிகழ்கின்றன. அச்சடங்கின் போது மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்குச் சென்று திருமணத்துக்கான உறுதியை அளிக்கின்றனர். அதன் பின்னர், டமாக் எனப்படும் சீர் பொருட்களுக்கான பேச்சுவார்த்தை நிகழ்கிறது. திருமண நாளும், திருமணத்தின் போது மணமகன் வீட்டார் அளிக்க வேண்டும் சீர் பொருட்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. ஒராங் சுங்கை மக்களின் திருமணச் சடங்குகள் அவரவர் சார்ந்திருக்கும் சமயச்சடங்குகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

இறப்புச்சடங்குகள்

ருமானாவ் மக்களின் இறப்புச்சடங்குகள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. ஒராங் சுங்கை மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமப் பின்பற்றுவதால் இறப்புச்சடங்குகள் இஸ்லாமியச் சமய முறைப்படியே நிகழ்கின்றன.

உசாத்துணை

பைத்தானிய மொழிக்குடும்பம், ஜூலி, கே.கிங், 1984

சபாவில் கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் மனித உருவங்கள், 2017, Yunus Sauman Sabin, Adnan Jusoh, Wan Noorlizawati Wan Mat Ali & Zuliskandar Ramli

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.