under review

ராமச்சந்திர குஹா

From Tamil Wiki
Revision as of 02:36, 2 December 2023 by Visu (talk | contribs) (→‎அரசியல் வாழ்க்கை: - removed this paragraph. As this was Sashi Tharoor and not Ramachandra Guha.)
ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா

ராமச்சந்திர குஹா (பிறப்பு ஏப்ரல் 29, 1958) எழுத்தாளர், நவீன இந்திய வரலாற்றாசிரியர், சுற்றுசூழல் ஆய்வாளர், பேராசிரியர், கட்டுரையாளர், இதழியலாளர். சுற்றுச்சூழல், சமூகம், அரசியல், கிரிக்கெட் சார்ந்த ஆய்வுகளை எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

ராமச்சந்திர குஹாவின் இயற்பெயர் ராமச்சந்திரன். 1958-ல் டேராடூனில் சுப்ரமணிய ராம்தாஸ் குஹா, அன்னபூர்ணா மெஹ்ரா இணையருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தந்தை வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். தாய் பள்ளி ஆசிரியர். கேம்பிரியன் ஹால், டூன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 1977-ல் டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (Indian Institute of management) உத்தராஞ்சல் மாநிலக்காடுகளில் ஏற்பட்ட சிப்கோ இயக்கத்தின் வரலாற்றைக் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ராமச்சந்திர குஹாவின் முனைவர் பட்ட ஆய்வேடு "'The Unquiet Woods: Ecological Change and Peasant Resistance in the Himalaya' என்ற பெயரில் வெளியானது.

ராமச்சந்திர குஹா மனைவி சுஜாதா கேசவனுடன்

தனிவாழ்க்கை

ராமச்சந்திர குஹா வரைகலை வடிவமைப்பாளர் சுஜாதா கேசவனை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரு குழந்தைகள். இவர்களின் மகன் கேசவ குஹா புனைவெழுத்தாளர்.

1985 முதல் 2000 வரை இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளின் பல்கலைக்கழகங்களில் ஆசிரியப்பணி ஆற்றினார். 2019-ல் இந்திய அறிவியல் கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருந்தார். கிரியா (Krea), ஸ்டான்போர்ட், யேல், மேம்பட்ட ஆய்வுக்கான பெர்லின் நிறுவனம் (Berlin Institute of advanced studies) , இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராக இருந்தார். தற்போது ராமசந்திர குஹா பெங்களூரில் வசிக்கிறார்.

பொறுப்புகள்

  • 1978-ல் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஹை கமிஷனில் உறுப்பினராக இருந்தார்.
  • ஜெர்மனியின் "Wissenschaftskolleg zu Berlin" ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2006-ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
  • ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆர்னே நாஸ் இருக்கை(Arné Naess Chair)
  • பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தோ-அமெரிக்கன் சமூகத் தலைவர்
  • லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வரலாறு மற்றும் சர்வதேச விவகாரங்களில் பிலிப் ரோமன் இருக்கை
  • வினோத் ராயை தலைவராகக் கொண்ட BCCI குழுவில் லோதா கமிட்டி சீர்திருத்தங்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் 2017-ல் நியமிக்கப்பட்டார்.

அமைப்புப் பணிகள்

ராமச்சந்திர குஹா 2004-ல் நவீன இந்திய வரலாற்றினை ஆய்வு செய்யும் நியூ இந்தியா பவுண்டேஷன் (New India Foundation) என்ற லாபநோக்கில்லா அமைப்பை (NPA) உருவாக்கினார். அதன் செயல் அறங்காவலராகவும் பங்காற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ராமசந்திர குஹா பள்ளிக் காலத்தில் 'டூன் ஸ்கூல் வீக்லி' என்ற பள்ளி வார இதழில் பங்காற்றினார். 'ஹிஸ்டரி டைம்ஸ்' என்ற இதழை பள்ளித் தோழரான அமிதவ் கோஷுடன் நடத்தினார். நவீன இந்திய வரலாறு, சூழலியல், கிரிக்கெட் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டு அவை சார்ந்த புத்தகங்கள் எழுதினார். அவரது புத்தகங்கள் சுற்றுச்சூழலின் உலகளாவிய வரலாறு, ஒரு மானுடவியலாளர்-செயல்பாட்டாளரின் வாழ்க்கை வரலாறு, இந்திய கிரிக்கெட்டின் சமூக வரலாறு மற்றும் இமயமலையில் உள்ள விவசாயிகளின் சமூக வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியவை.

வரலாறு

ராமச்சந்திர குஹா நவீன இந்தியா சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்களை எழுதினார். 'India after Gandhi' (காந்திக்குப் பிறகு இந்தியா) என்ற நூலை 2007-ல் வெளியிட்டார். இது தி எகனாமிஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் அவுட்லுக் இதழ்களால் ஆண்டின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தி இந்து இந்த தசாப்தத்தின் (2010-2019) சிறந்த புனைகதை அல்லாத புத்தகங்களில் ஒன்றாக் இந்நூலை மதிப்பீடு செய்தது. இந்த புத்தகம் 2011-ல் ஆங்கில மொழி நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது. நவீன இந்திய வரலாறு சார்ந்த முக்கியமான நூலாக விளங்குகிறது.

குஹா 2013-ல் ' Gandhi Before India" என்ற நூலை எழுதினார். 1869-1914 வரை காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தை இப்புத்தகம் அளிக்கிறது. 2018-ல் “Gandhi-Years That changed the world (1914-1948)" என்ற தொடரை எழுதினார். 2022-ல் 'Rebels Against the Raj' என்ற நூலை எழுதினார். இந்திய விடுதலைக்காகப் போராட்டத்திற்கு துணை நின்ற மேற்கத்தியர்களைப் பற்றிய நூல், 'Patriots and Partisans' (2012), 'Democrats and Dissenters' (2016) போன்ற வரலாறு சார்ந்த கட்டுரைத் தொகுதிகளையும் எழுதினார்.

சூழலியல்

ராமச்சந்திர குஹாவின் முனைவர் பட்ட ஆய்வு சூழலியல் போராட்டமான சிப்கோ இயக்கம் சார்ந்தது. 1999-ல் வெறியர் எல்வின் (Harry Verrier Holman Elwin) என்ற மானுடவியல் அறிஞரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். 1999-ல் 'Environmentalism: A Global History', 2006-ல் 'How Much Should a Person Consume?' ஆகிய நூல்களையும் எழுதினார்.

கிரிக்கெட்

2002-ல் 'A Corner of a Foreign Field: The Indian History of a British Sport', 2020-ல் 'The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind' என்ற கிரிக்கெட் சார்ந்த நூல்களை எழுதினார். இதழ்களில் கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.

விருதுகள்

  • 2009-ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது
  • India after Gandhi எனும் நூலுக்காக 2011-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • 2003-ல் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆர்.கே.நாராயண் பரிசு பெற்றார்.
  • அவரது கட்டுரை 'Prehistory of Community Forestry in India' 2001-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் வரலாற்றிற்கான லியோபோல்ட்-ஹைடி பரிசு (Leopold-Hidy Prize) பெற்றது
  • 2002-ல் 'A Corner of a Foreign Field' புத்தகம் the Daily Telegraph -ன் பரிசு பெற்றது.
  • அமெரிக்க இதழான ஃபாரீன் பாலிசி மே 2008-ல் உலகின் தலைசிறந்த 100 பொது அறிவுஜீவிகளில் ஒருவராக அவரைப் பெயரிட்டது. தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் குஹா 44வது இடத்தைப் பிடித்தார்.
  • 2014 -ல் யேல் பல்கலைக்கழகம் மனிதநேயத்திற்கான (Humanities) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
  • ஃபுகுவோகா ஆசிய கலாச்சார விருது (2015)
  • அமெரிக்க வரலாற்று சங்கம் (AHA) 2019-ம் ஆண்டிற்கான அதன் கௌரவ வெளிநாட்டு உறுப்பினர் பரிசை ராமச்சந்திர குஹாவிற்கு வழங்கியுள்ளது.

நூல்கள்

வரலாறு
  • Savaging the Civilized: Verrier Elwin, his tribals and India (Oxford University Press, University of California Press, 1999)
  • Makers of Modern India. India: Penguin India (2012)
  • India after Gandhi: The history of the world's largest democracy (2007)
  • Patriots & Partisans (Penguin) (2012)
  • Gandhi Before India (Penguin) (2013)
  • An Anthropologist Among the Marxists, and other essays (Orient Blackswan, 2000)
  • The Last Liberal and Other Essays. Permanent Black (2004)
  • Institutions and Inequalities: Essays in Honour of Andre Beteille (Oxford University Press, Along with Parry, Jonathan P, 2011)
  • Gandhi: The Years that Changed the World, 1914-1948 (2018)
சூழலியல்
  • The Use and Abuse of Nature (along with Madav Gadkil)
  • The Unquiet Woods: Ecological Change and Peasant Resistance in the Himalaya (Oxford University Press, 1989)
  • This Fissured Land: An Ecological History of India (Oxford University Press, Along with Madhav Gadgil, 1993)
  • Ecology and Equity: The Use and Abuse of Nature in Contemporary India (Penguin India, Along with Madav gadgil)
  • Varieties of Environmentalism: Essays North and South (Penguin India, along with Alier, Joan Martinez, 1997)
  • Social Ecology Oxford University Press (1998)
  • Nature, Culture, Imperialism: Essays on the Environmental History of South Asia (Oxford University Press, Along with Arnold, David, 1998)
  • Nature's Spokesman: M. Krishnan and Indian Wildlife (Along with Krishnan, M, 2001)
  • How Much Should a Person Consume?: Thinking Through the Environment (Oxford University Press, 2006)
  • Environmentalism: A Global History (Penguin, 2014)
கிரிக்கெட்
  • Wickets in the East (Oxford University Press) (1992)
  • Spin and Other Turns (Penguin India) (2000)
  • An Indian Cricket Omnibus (Oxford University, along with Vaidyanathan, T.G. 1994)
  • The Picador Book of Cricket (Pan Macmillan, 2001)
  • A Corner of a Foreign Field: An Indian history of a British sport. Picador (2004)
  • The States of Indian Cricket: Anecdotal Histories. Permanent Black (2005)
  • An Indian cricket century (Sujit Mukherjee, 2002)
  • The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind. (Harper Collins, 2020)

இணைப்புகள்


✅Finalised Page