ராஜம் கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 07:30, 30 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர்

பிறப்பு, கல்வி

திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பெற்றோர்கள் யஞ்ஞ நாராயணன், மீனாட்சி. முறையான பள்ளிக்கல்வி பெறவில்லை. 15 வயதிலேயே மணம்செய்து வைக்கப்பட்டார். தானாகவே ஆங்கிலம், தமிழ், இந்தி கற்றுக்கொண்டார். நூல்களை வாசிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார்.

தனிவாழ்க்கை

ராஜம்கிருஷ்ணனின் கணவர் மின்வாரியப் பொறி யாளரான முத்துகிருஷ்ணன். தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிட மிருந்த பணத்தையும், இழந்தார். எண்பது வயதில் கைவிடப்பட்டு நின்றவரை சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் பாதுகாக்க முயற்சி செய்து ‘விச்ராந்தி’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். முதுமையை அங்கே கழித்தார்.இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது

இலக்கியவாழ்க்கை

ராஜம் கிருஷ்ணன் 1948-இல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுக

ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘வெள்ளி டம்ளர்’ சாவி அவர்களின் ‘வெள்ளிமணி’யில் வெளிவந்தது. அலைகடலில், பவித்ரா, அல்லி போன்ற குறுநாவல்கள், டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை

வரலாறு, பயணநூலான அன்னை பூமி, மாஸ்கோ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். கதையின் கதை, கானாற்றின் செல்வங்கள் போன்ற இருபத்தைந்து வானொலி நாடகங்களையும் படைத்துள்ளார். இராஜம் கிருஷ்ணன் சிறுகதை, வாழ்க்கை வரலாறு, வானொலிக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்ற பல துறைகளில் சாதனை முத்திரை பதித்திருந்தாலும் நாவல் துறையில்

இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை கொண்ட வராகவு

விருதுகள்

  • 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
  • 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
  • 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
  • 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
  • 1991—திரு.வி.க. விருது

இறப்பு

தொண்ணூறு வயதில் உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு 21 - அக்டோபர்- 2014 அன்று ராஜம் கிருஷ்ணன் உயிர் துறந்தார். தான் இறந்துவிட்டால் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் உடல் அந்த மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டது


1946லிருந்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார். ஊட்டி, குந்தா, கோவா போன்ற இடங்களுக்கு கணவரோடு பணியின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்றமை இவர்தம் நாவல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை கொண்ட வராகவும் இருந்தார்.

நூல்கள்

சிறுகதைகள்

  1. அழுக்கு 1990, தாகம் சென்னை
  2. அவள் (புதினம்)
  3. அல்லி (சிறுகதை)
  4. அலைகள், 1965 மார்ச், கலைமகள் காரியாலயம். சென்னை-4
  5. அலை வாய்க்கரையில் (புதினம்)
  6. அன்னையர்பூமி (புதினம்)
  7. இடிபாடுகள் (புதினம்)
  8. உத்தரகாண்டம் (புதினம்)
  9. உயிர் விளையும் நிலங்கள் (புதினம்)
  10. ஊசியும் உணர்வும் (சிறுகதை)
  11. கதைக்கனிகள்
  12. கரிப்பு மணிகள் (புதினம்)
  13. கல்வி (சிறுகதை)
  14. களம் (சிறுகதை), 1985, பாரி புத்தகப்பண்ணை, சென்னை.
  15. கனவு (சிறுகதை)
  16. காக்கானி
  17. கிழமைக்கதைகள் (சிறுகதை)
  18. குறிஞ்சித் தேன் (புதினம்)
  19. கூடுகள் (புதினம்) 1990, தாகம் சென்னை
  20. கூட்டுக் குஞ்சுகள் (புதினம்)
  21. கைவிளக்கு 1966, மங்கள நூலகம், சென்னை
  22. கோடுகளும் கோலங்களும் (புதினம்)
  23. சிவப்பு ரோஜோ (சிறுகதை)
  24. சுழலில் மிதக்கும் தீபங்கள் (புதினம்)
  25. சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)'
  26. நித்திய மல்லிகை (சிறுகதை)
  27. பச்சைக்கொடி (சிறுகதை)
  28. பாதையில் பதிந்த அடிகள் பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்
  29. புதியதோர் உலகம் செய்வோம் (புதினம்)
  30. புதிய கீதம்
  31. புதிய சிறகுகள் (புதினம்)
  32. பெண்குரல் (புதினம்) 1953
  33. மலர்கள் (புதினம்)
  34. மலைரோஜா (சிறுகதை)
  35. மாணிக்க கங்கை (புதினம்)
  36. மாறி மாறி பின்னும் (புதினம்)
  37. மின்னி மறையும் வைரங்கள் (சிறுகதை)
  38. முள்ளும் மலர்ந்தது (புதினம்)
  39. வண்ணக்கதைகள் (சிறுகதை)
  40. வளைக்கரம் (புதினம்)
  41. வனதேவியின் மைந்தர்கள் (புதினம்)
  42. விலங்குகள், 1975, பாரி புத்தகப்பண்ணை, சென்னை.
  43. வேருக்கு நீர் (புதினம்) - சாகித்ய அகாதெமி விருதுபெற்றது
  44. ரோஜா இதழ்கள் (புதினம்)
  45. சத்திய வேள்வி

பெண்ணியக்கட்டுரைகள்

  1. காலம்தோறும் பெண்
  2. காலம்தோறும் பெண்மை
  3. யாதுமாகி நின்றாய்
  4. இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

வாழ்க்கை வரலாறு

  1. டாக்டர் ரங்காச்சாரி, 1965 ,
  2. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
  3. சத்திய தரிசனம்

தன்வரலாறு

  1. காலம் 2014

உசாத்துணை