under review

ராஜகோபாலப் புலவர்

From Tamil Wiki
Revision as of 10:10, 30 September 2023 by Tamizhkalai (talk | contribs)

ராஜகோபாலப் புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கீரநத்தத்தம் மங்கையம்மன் மீது பக்தி கொண்டு பதிகங்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ராஜகோபாலப் புலவர் சுள்ளெரும்புக் கண்வள நாட்டில் கீரநத்தத்தில் பொ.யு. 19-ஆம் நூற்றாண்டில் செண்பகக் கோனாருக்கு மகனாகப் பிறந்தார். தன் பத்தாவது வயதில் துறவு மேற்கொண்டார். தங்கை செம்பாத்தாளும் உடன் சென்றார். மைசூர் சென்று அரசனிடம் செப்பிடுவித்தை செய்து காட்டி வேலை பெற்றார்.

ராஜகோபாலப் புலவர் ராயர்கோயில் பூசாரி கருப்பக்கோனார் மகள் காளியம்மாளை மணந்தார். இவர்களுக்கு நாராயணசாமிப்புலவர், பாலகிருஷ்ணப்புலவர், சொக்கநாதப்புலவர், சந்திரசேகரப் புலவர் என நான்கு மகன்கள் பிறந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

ராஜகோபாலப் புலவர் தனிப்பாடல்கள் பல பாடினார். நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கெளசிகபுரி காளியம்மன் மீது பாடல்கள் பாடினார். காலகாலேஸ்வரர் மீது பாடல்கள் பாடினார். கீரநத்தத்திற்குச் சென்று மங்கையம்மன் மீது தவம் செய்தார். பதிகங்கள் பல பாடினார்.

உசாத்துணை


✅Finalised Page