ரத்தம் ஒரே நிறம்

From Tamil Wiki

ரத்தம் ஒரே நிறம் ( 1981) சுஜாதா எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். 1856ல் நிகழ்ந்த முதல் இந்திய ராணுவக் கிளர்ச்சியின் பின்னணியில் எழுதப்பட்டது.

எழுத்து வெளியீடு

சுஜாதா 1980-ல் குமுதம் இதழில் சிப்பாய் கலவரத்தின் பின்னணியில் ‘சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதையை எழுதியபோது அதில் நாடார் சாதியினர் பற்றி இழிவாக எழுதப்பட்டுள்ளது என்று கருதிய சாதிச்சங்கங்களின் வன்முறை நிறைந்த எதிர்ப்பு எழுந்தது. சுஜாதா மன்னிப்பு கோரினார். தொடர் நிறுத்தப்பட்டது சாதி குறிப்புகள் இல்லாமல் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற பெயரில் சில மாதங்கள் கழித்துஅந்நாவலை எழுதினார். 1982ல் குமுதத்தில் தொடராக வெளிவந்த ரத்தம் ஒரே நிறம் பின்னர் நூல்வடிவு கொண்டது.

கதைச்சுருக்கம்