under review

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை (1904 - 1951) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்.

இளமை, கல்வி

காமாட்சி சுந்தரம் பிள்ளை இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் 1904-ம் ஆண்டு, நாகலிங்கம் பிள்ளைக்கு இளைய மகனாகப் பிறந்தார். இவர் தனது மூத்த சகோதரர் சின்னத்துரை என்பவரிடம் தவில் கற்றார்.

தனிவாழ்க்கை

நாதஸ்வரக் கலைஞர் சுப்பையா பிள்ளை என்பவரின் மகள் கனகாம்புஜம் அம்மாளை காமாட்சி சுந்தரம் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு முருகானந்தம் (ஓவியர்), குகானந்தம் (தவில்) என இரு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

இசைப்பணி

காமாட்சி சுந்தரம் பிள்ளை வாசிப்பின் வேகத்துக்குப் புகழ் பெற்றவர். அதற்காக 'கர வேக கேசரி’ போன்ற பட்டங்கள் பெற்றவர்.

மாணவர்கள்

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • இனுவில் சின்னத்தம்பிப் பிள்ளை
  • யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை 1951-ம் ஆண்டு தன் நாற்பத்தியேழாம் வயதில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page