ம.பெ.ஸ்ரீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 11:17, 4 November 2022 by Jeyamohan (talk | contribs)

ம.பெ.ஸ்ரீனிவாசன் ( 16 ஆகஸ்ட் 1943) ம.பெ.சீனிவாசன், மபெசீ. வைணவ அறிஞர். தமிழாய்வாளர். தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார்

பிறப்பு, கல்வி

ம.பெ.ஸ்ரீனிவாசன் சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் என்னும் ஊரில் பெரியசாமி – சிட்டாள் இணையருக்கு 16 ஆகஸ்ட் 1943 ல் பிறந்தார். சிவகங்கையில் பள்ளிப்ப்டிப்பை முடித்த ம.பெ.ஸ்ரீனிவாசன் பொருளியலில் பட்டப்படிப்புபை நிறைவுசெய்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். வைணவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றர்

தனிவாழ்க்கை

ம.பெ.ஸ்ரீனிவாசன் சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசுக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

விருதுகள்

  • 2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
  • 2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
  • 2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவு பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்|

நூல்கள்

  • திருமங்கையாழ்வார் மடல்கள் 1987
  • திருமங்கையாழ்வார் மடல்கள் 20022
  • வைணவ இலக்கிய வகைகள் 1994
  • திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள் 2013
  • பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)சாகித்திய அகாதமி புதுதில்லி1996
  • குலசேகராழ்வார் சாகித்திய அகாதமி புதுதில்லி 2003
  • முதலாழ்வார்கள் சாகித்திய அகாதமி புதுதில்லி 2007
  • திவ்வியப்பிரபந்தம் (பாசுரத்தொகுப்பு) ஆராய்ச்சி முன்னுரையுடன் 2010
  • ஒரு நாள் ஒரு பாசுரம் 2006
  • ஸ்ரீ இராமாநுசர் (ஞானபரம்பரை வரிசை) 2006
  • திருமுருகாற்றுப்படை உரை விளக்கம் 2009
  • ஆழ்வார்களும் தமிழ் மரபும் 2010
  • கம்பனும் ஆழ்வார்களும் 2011
  • கம்பனில் சங்க இலக்கியம் 2013
  • வண்டாடப் பூமலர 2013