under review

ம.க.வே. திருஞானசம்பந்தர்

From Tamil Wiki

ம.க.வே. திருஞானசம்பந்தர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

ம.க.வே. திருஞானசம்பந்தர் இலங்கை யாழ்ப்பாணத்தில் ம.க. வேற்பிள்ளையின் மூத்த மகனாகப் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பண்டிதராப் பணியாற்றினார்.

இதழியல்

ம.க.வே. திருஞானசம்பந்தர் "இந்து சாதனம்" பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலமாகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ம.க.வே. திருஞானசம்பந்தர் நாடகாசிரியர், உரையாசிரியர். 1921இல் உலகம் பலவிதம் என்ற வரிசையில் "கோபால-நேசரத்தினம்", "காசிநாதன்நேசமலர்" என இரண்டு நாவல்கள் எழுதினார்.

நூல் பட்டியல்

  • கோபால-நேசரத்தினம்
  • காசிநாதன்நேசமலர் (1924)

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.