மௌனம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 16:17, 17 September 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "மௌனம் (2009-2013) கவிஞர் ஏ. தேவராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மௌனம் (2009-2013) கவிஞர் ஏ. தேவராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழ் நவீன கவிதைகளைப் பிரசுரிக்கவும், கவிதைகள் குறித்த உரையாடல்களை உருவாக்கும் நோக்கிலும் வெளிவந்தது. கவிஞர் ஏ. தேவராஜனே தனி ஒருவராக இவ்விதழ் முயற்சியை முன்னெடுத்தார்.

பின்னணி

ஏ. தேவராஜன் நவீன கவிதைக்கான வலுவான களத்தை உருவாக்க 'மௌனம்' இதழைத் ஜனவரி 2009 தொடங்கினார். மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழுக்கும் 100 பிரதிகள் அச்சிடப்பட்டன. மௌனம் இதழில் கவிதைகள், கவிதை விவாதங்கள், விமர்சனங்கள், கவிஞர்களுடனான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.

ஏ. தேவராஜன் இரண்டு முறை 'மௌனம்' கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இந்த உரையாடல்களில் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். முதல் உரையாடல் ஜூன் 11, 2011லும் இரண்டாம் உரையாடல் 2012லும் நடந்தது.

சிறப்பிதழ்

மௌனம் நான்கு சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது:

  • ஆகஸ்ட் 2009 - எழுத்தாளர் தினச் சிறப்பிதழ்
  • செப்டம்பர் 2010 - கோ. புண்ணியவான் சிறப்பிதழ்
  • ஜூன் 2011 - சை. பீர்முகம்மது சிறப்பிதழ்
  • மார்ச் 2013 - பா.ஆ. சிவம் அஞ்சலி சிறப்பிதழ்
மௌனம் இதழ் பட்டியல்