second review completed

மோட்டார் விகடன்

From Tamil Wiki
மோட்டார் விகடன் இதழ்

மோட்டார் விகடன் (2007) ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியான இதழ். ஆட்டோமொபைல் தொழில் நுட்பங்கள், புதிதாக அறிமுகமாகும் வாகனங்கள் குறித்த செய்திகள், தொழில்நுபட்ங்கள் பற்றிய செய்திகள் மோட்டர் விகடனில் இடம் பெற்றன.

வெளியீடு

கால மாற்றத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட ஆனந்த விகடன் குழுமம், நவீன ஆட்டொமொபைல் தொழில் நுட்பங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஜனவரி 2007 முதல் மோட்டார் விகடன் என்ற இதழை வெளியிட்டது.128 பக்கங்களைக் கொண்ட இவ்விதழின் தொடக்க கால விலை ரூ.40/- 2024-ல் விலை ரூ. 75/-

உள்ளடக்கம்

மக்களுக்கு நீடித்த பலனைத் தரும் வாகனங்கள் எது என்பதைப் பற்றியும், அதன் சாதக, பாதக அம்சங்கள், தொழில் நுட்பங்கள் பற்றியும், பராமரிப்பு பற்றிய செய்திகளையும் தாங்கி மோட்டார் விகடன் வெளிவந்தது. எந்த என்ஜின் சிறந்தது, புதிய கார்கள் பற்றிய தொழில்நுட்பச் செய்திகள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் பற்றிய செய்திகள், வண்டி ஓட்டும்போது அறிந்திருக்க வேண்டிய முக்கியமான செய்திகள் எனப் பல செய்திக் கட்டுரைகள் மோட்டார் விகடனில் வெளியாகின.

மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் வெளிவந்தன. யாத்ரி ஆப்கள் பற்றிய செய்திகள், மோட்டர் வாகனப் பந்தயங்கள் பற்றிய செய்திகளை மோட்டார் விகடன் வெளியிட்டது.  

மோட்டார் விகடன் மாத இதழ் பெட்ரோல் மற்றும் வாகன பராமரிப்புச் செலவுகள் பற்றிய இணைப்பிதழை வெளியிட்டது. புத்தம் புதிய வாகன வரவுகள் அனைத்தும் படங்களுடனும் விரிவான விளக்கங்களுடனும் இதழில் இடம் பெற்றன.

மதிப்பீடு

மோட்டார் வாகனத் துறைக்கான முழுமையான ஒரு வழிகாட்டியாக மோட்டார் விகடன் இதழ் வெளிவந்தது. மோட்டார் விகடன் இதழ் ஆங்கிலத்திலும் வெளிவந்தது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.