first review completed

மைகன்ஸி ரீஸ்

From Tamil Wiki
Revision as of 01:06, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reverted edits by Tambot1 (talk) to last revision by Logamadevi)
ரீஸ்

மைகன்ஸி ரீஸ் (Rees Myfanwy Dyfed M.B,Ch.B) (பிறப்பு: ஜூன் 21, 1889) வேலூர், ஈரோடு பகுதிகளில் மருத்துவப் பணியாற்றிய லண்டன் மிஷனைச் சேர்ந்த மருத்துவர்.

வாழ்க்கை

மைகன்ஸி ரீஸ் ஜூன் 21, 1889-ல் பிறந்தார். 1909 முதல் ஈரோட்டில் மருத்துவப் பணியாற்றினார். 1913-ஆம் ஆண்டு மத போதகர் பணிக்காக ஈரோடு வந்த ரெவெ.தாமஸ் சார்ல்ஸ் விட்னியை மணம்புரிந்து ஆலன் விட்னி என்ற மகன் பிறந்தார். 1924-ஆம் ஆண்டு போதகர் விட்னிக்கு சேலத்துக்கு பணியிட மாறுதல் கிடைக்க டாக்டர் ரீஸ் மற்றும் மகன் ஆலன் ஆகியோர் சேலம் சென்றனர். அங்கிருந்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு பணியிட மாறுதல் ஆகி சென்று மதபோதக பணி மற்றும் மருத்துவ சேவைப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி பகுதியில் பணியில் இருந்தபோது போதகர் விட்னி காலமானார். அதைத் தொடர்ந்து டாக்டர் ரீஸ், ஆலன் விட்னியும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்.

பணிகள்

டி.சி.விட்னி
ரீஸ் மருத்துவப் பட்டம், லண்டன்

மருத்துவப்படிப்பு முடித்ததுமே வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றினார். 1909-ல் ஈரோட்டில் பரவிய தொற்றுநோயை கட்டுப்படுத்தும்பொருட்டு ஏ.டபிள்யூ.பிரப் ரீஸ் மைகன்ஸியை அழைத்துவந்து தன் பங்களா முன்னர் கொட்டகை அமைத்து மக்களுக்கு இலவச மருத்துவம் செய்தார். மூன்றாண்டுகள் பணியாற்றிய பின் ரீஸ் ரெவெ.தாமஸ் சார்ல்ஸ் விட்னியை மணந்து வேலூர் திரும்பினார். லண்டன் மிஷன் மருத்துவமனை (இப்போது சி.எஸ்.ஐ.மருத்துவமனை) மகப்பேறு மருத்துவமனையாக ஆனபோது 1923 முதல் 1924 வரை மீண்டும் ஈரோட்டில் பணியாற்றினார். மிஸ். ஹில்டா போலார்ட் இக்காலத்தில் பிரப் மருத்துவமனையில் பணியாற்றினார்.

மறுதொடர்பு

ரீஸின் பேரன் சைமன் விட்னி, பேத்தி பென்னி ஸ்மித் - ஆய்வாளர் ரமேஷுடன் (நன்றி டெய்லி ஹண்ட்)

ஈரோடு மாவட்டம், புங்கம்பாடியைச் சேர்ந்த ஆய்வாளர் ரமேஷ் என்பவர் பிரப் ஆலயம் மற்றும் ஈரோட்டில் சி.எஸ்.ஐ. சபை குறித்த ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் ரீஸ் குறித்த தகவல்களை சேகரித்தார். ரீஸின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டார். அப்போது டாக்டர் ரீஸ்-போதகர் விட்னியின் பேரன் சைமன் விட்னி, பேத்தி பென்னி ஸ்மித் ஆகியோர் தங்கள் தாத்தா, பாட்டி குறித்த விவரங்களை அறிந்து அன்று ஈரோடு வந்து தங்கள் பாட்டி பணியாற்றிய இடங்களைப் பார்வையிட்டனர்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.