under review

மெய்கண்டார்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 12: Line 12:
மெய்கண்டார் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார் என நம்பப்படுகிறது.   
மெய்கண்டார் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார் என நம்பப்படுகிறது.   
== தொன்மங்கள் ==
== தொன்மங்கள் ==
மெய்கண்டாரின் தந்தையின் ஆசிரியரான [[அருள்நந்தி சிவாச்சாரியார்]] மெய்கண்டார் அருளுரை கூறுவதை அறிந்து பார்க்கவந்தார். மெய்கண்டார் அருளுரையில் மூழ்கியிருந்தமையால் அவரைப் பொருட்படுத்தவில்லை. அதைக்கண்டு ஆணவம் புண்பட்ட அருள்நந்தி சிவாச்சாரியார் "ஆணவமலத்தின் மெய்நிலை என்ன?' என்று கேட்டார். மெய்கண்டார் அருள்நந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக்காட்டினார். அதை கண்டதும் ஆணவம் அழிந்த அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரின் மாணவரானார். மெய்கண்டாரின் நாற்பத்தொன்பது மாணவர்களில் அவரே முதன்மையானவர்.
மெய்கண்டாரின் தந்தையின் ஆசிரியரான [[அருணந்தி சிவாசாரியார்]] மெய்கண்டார் அருளுரை கூறுவதை அறிந்து பார்க்கவந்தார். மெய்கண்டார் அருளுரையில் மூழ்கியிருந்தமையால் அவரைப் பொருட்படுத்தவில்லை. அதைக்கண்டு ஆணவம் புண்பட்ட அருள்நந்தி சிவாச்சாரியார் "ஆணவமலத்தின் மெய்நிலை என்ன?' என்று கேட்டார். மெய்கண்டார் அருள்நந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக்காட்டினார். அதை கண்டதும் ஆணவம் அழிந்த அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரின் மாணவரானார். மெய்கண்டாரின் நாற்பத்தொன்பது மாணவர்களில் அவரே முதன்மையானவர்.
== மரபு ==
== மரபு ==
மெய்கண்டாரின் மாணவர்களின் மரபு [[மெய்கண்ட சந்தானம்]] என அழைக்கப்படுகிறது. இவர்களே இன்றும் தொடரும் துறவியர் மரபான [[திருக்கயிலாய பரம்பரை]]யினர்.
மெய்கண்டாரின் மாணவர்களின் மரபு [[மெய்கண்ட சந்தானம்]] என அழைக்கப்படுகிறது. இவர்களே இன்றும் தொடரும் துறவியர் மரபான [[திருக்கயிலாய பரம்பரை]]யினர்.

Latest revision as of 04:20, 14 April 2024

To read the article in English: Meikandar. ‎

meykandar

மெய்கண்டார் (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) (மெய்கண்டதேவர்) சைவசித்தாந்தத்தின் முதன்மை ஆசிரியர். சிவஞானபோதம் என்னும் நூலை இயற்றியவர். இவரில் இருந்து தொடங்கும் சைவ ஞானாசிரியர்களின் மரபு மெய்கண்ட சந்தான மரபு எனப்படுகிறது.

வரலாறு

பிறப்பு

பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள திருமுனைப்பாடி என்னும் நடுநாட்டில், திருப்பெண்ணாகடம் என்னும் ஊரில், வேளாளர் குலத்தில் பிறந்த அச்சுதக் களப்பாளர் என்னும் நிலக்கிழார் திருத்துறையூரில் வாழ்ந்த அருள் நந்தி சிவாசாரியாரின் ஆணைப்படி திருவெண்காடு சென்று நோன்பிருந்து வேண்டிக்கொண்டு பிறந்த மைந்தர் மெய்கண்டார். இயற்பெயர் திருவெண்காடர். சுவேதவனப்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். திருவெண்ணைநல்லூரில் தன் தாய்மாமன் காங்கேய பூபதியின் இல்லத்தில் வளர்ந்தார்.

ஞானமடைதல்

திருவெண்காடர் பரஞ்சோதி முனிவரிடம் மந்திர உபதேசம் பெற்று, மெய்கண்டார் என்ற பெயர் சூட்டப்பெற்றார். இது பரஞ்சோதி முனிவரின் ஆசிரியரான சத்தியஞானதரிசிகள் என்னும் முனிவரின் பெயரின் தமிழ் வடிவம். மெய்கண்டார் அதன்பின் இல்லம் நீங்கி திருவெண்ணைநல்லூரிலுள்ள பொல்லாப்பிள்ளையார் ஆலயத்தில் அமர்ந்து ஞான உபதேசம் செய்துவரலானார்.

மெய்யியல் பணி

மெய்கண்டார் சைவமரபில் சித்தாந்த சைவம் எனப்படும் சைவத்தின் முதன்மைப்பேராசிரியர். சிவஞான போதம் என்றும் சிவஞான சூத்திரங்கள் என்றும் அழைக்கப்படும் நூலை இயற்றினார்.

மறைவு

மெய்கண்டார் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வீடுபேறடைந்தார் என நம்பப்படுகிறது.

தொன்மங்கள்

மெய்கண்டாரின் தந்தையின் ஆசிரியரான அருணந்தி சிவாசாரியார் மெய்கண்டார் அருளுரை கூறுவதை அறிந்து பார்க்கவந்தார். மெய்கண்டார் அருளுரையில் மூழ்கியிருந்தமையால் அவரைப் பொருட்படுத்தவில்லை. அதைக்கண்டு ஆணவம் புண்பட்ட அருள்நந்தி சிவாச்சாரியார் "ஆணவமலத்தின் மெய்நிலை என்ன?' என்று கேட்டார். மெய்கண்டார் அருள்நந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக்காட்டினார். அதை கண்டதும் ஆணவம் அழிந்த அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரின் மாணவரானார். மெய்கண்டாரின் நாற்பத்தொன்பது மாணவர்களில் அவரே முதன்மையானவர்.

மரபு

மெய்கண்டாரின் மாணவர்களின் மரபு மெய்கண்ட சந்தானம் என அழைக்கப்படுகிறது. இவர்களே இன்றும் தொடரும் துறவியர் மரபான திருக்கயிலாய பரம்பரையினர்.

உசாத்துணை


✅Finalised Page