under review

மெந்திரி தோட்டத்தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 10:42, 29 March 2024 by Logamadevi (talk | contribs)

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் பகாங் மாநிலத்தின் பெரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் அரசு பதிவெண் CBDA097.

மெந்திரித் தோட்டத்தமிழ்ப்பள்ளி சின்னம்

பள்ளி வரலாறு

மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 1948 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மெந்திரி தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காக தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.

கட்டிட வரலாறு

1976-ம் ஆண்டு மெந்திரி தோட்டம் அமைந்திருக்கும் நிலம் சீனத்தொழிலாளர்களின் கைக்கு மாறியதால் பள்ளி மாற்றலாகும் சூழல் ஏற்பட்டது. நிலச்சிக்கலின் காரணமாக 1976-ம் ஆண்டு தொடங்கி 2001-ம் ஆண்டு வரையில் திரியாங் பட்டணத்தில் இருந்த சீனப்பள்ளிக் கட்டிடத்தில் மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்கியது. 2001-ம் ஆண்டு திரியாங் சீனப்பள்ளியின் கட்டிடச் சீரமைப்பு பணிகளின் காரணமாய் அருகிலிருந்த ஸ்ரீ புந்தார் தேசியப்பள்ளி கட்டிடத்தில் செயற்படத் தொடங்கியது.

மெந்திரி தோட்டக்கட்டிடக் கட்டிடம்

இன்றைய நிலை

முகப்புக் கட்டிடம்

மே 20 2012-ம் ஆண்டு பள்ளிக்கான தனித்த கட்டிடம் தாமான் திரியாங் மாஜு வீடமைப்புப்பகுதியில் கிடைத்தது. பள்ளியின் புதிய கட்டிடத்தில் அலுவலகம், ஆசிரியர் அறை, நூலகம், வகுப்பறைகள், திடல் என அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  தேசிய வகை மெந்திரி தோட்டத்தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டத்தை அப்போதைய உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் திறந்து வைத்தார்.மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 2015-ம் ஆண்டு மலேசியக் கல்வி அமைச்சால் உருமாற்றப்பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளியில் 21 -ம் நூற்றாண்டுக்கான கற்றல் திறனை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் பின்பற்றப்படுகிறது.மெந்திரித் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் 2023-ம் ஆண்டு பாலர் பள்ளி தொடங்கி ஆறாம் ஆண்டு வரையில் 138 மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளித் தலைமையாசிரியர் பட்டியல்

எண் தலைமையாசிரியர் பெயர் பணியாற்றிய ஆண்டு
1 முந்தைய தலைமையாசிரியர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை 1948-1966
2 திரு சவரிமுத்து 1965-1975
3 திரு ஏழுமலை 1975-1980
4 திரு முனுசாமி 1981-1985
5 திரு இராஜமணி 1986-1992
5 திரு செல்வராஜு 1992-1992
6 திரு வீரநாதன் 1993-1998
7 டத்தோ குணசேகரன் 1998-2006
8 திரு மணிமுத்து 2007-2015
9 திரு சண்முகம் 2015-2016
10 திருமதி ருக்குமணி 2016-2020
11 குமாரி இந்திரா 2020-

உசாத்துணை

  • 200 ஆண்டுகாலத் தமிழ்ப்பள்ளி மேம்புகழ், 2016, மலேசியக்கல்வி அமைச்சு
  • பள்ளி இதழ், 2023


✅Finalised Page