முள்ளியூர்ப் பூதியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "This page is being created by Ka.Siva")
 
No edit summary
Line 1: Line 1:
This page is being created by Ka.Siva
This page is being created by Ka.Siva
முள்ளியூர்ப் பூதியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர்.  இவரது ஓரு பாடல் சங்க தொகை நூல்களில்  ஒன்றான அகநானூறுவில் இடம் பெற்றுள்ளது
== வாழ்க்கைக் குறிப்பு ==
மலையமானுக்கு உரியதான முள்ளுர்க் கானம் இலக்கியங்களிலே காண்ப்படுகிறது.  முள்ளியூர்ப் பூதியார் என்ற பெயரிலுள்ள முள்ளியூர் அந்தப் பகுதியில் உள்ளதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூதியார் என்ற பெயரமைப்பினில் பூதன் என்ற ஆண்பால் பெயரின் பெண்பால் பெயர் பூதி எனக் கொள்ளப்படுகிறது.
== இலக்கிய வாழ்க்கை ==
முள்ளியூர்ப் பூதியார் இயற்றிய பாடல் சங்கத் தொகை நூலான அகநானூறுவில்  173- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. பொருள்வயிற் பிரியும் காதலரைப் பற்றிக் கூறும் இல்வாழ்வின் நெறிகுறித்தும் 'நன்னன்’ என்பவனின் சிறப்பையும் முள்ளியூர்ப் பூதியார் இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.
== பாடல் சொல்லும் செய்தி ==
===== அகநானூறு 173 =====
* பாலைத்திணை
* தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
* துன்பப்படுவதைச் சிலநாள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு கழலும் உன் வளையல்களைத் திருத்தியவர் அவர் அல்லவா? வந்துவிடுவார்.
* பல புரி கொண்ட நீண்ட கயிற்றை எருதுகளின் கழுத்தில் வரிசையாகக் கட்டி உப்பு வண்டியைப் கொண்டு செல்லும் உமணர் எருதுகளை அதட்டி ஓட்டுவர். அந்த ஒலியைக் கேட்டு அங்கு மேயும் உழைமான் கூட்டத்திலிருந்து பிரிந்து பெண்மான் ஓடும்.
* கோடைக்காலம் காட்டின் அழகைத் தின்றுகொண்டிருக்கும். அப்போது மூங்கில் வெடித்து முத்துக்களைத் தெறிக்கும். அவை அணிந்துகொள்ளப் பயன்படாத முத்துக்கள். அவை கழங்கு விளையாடும் காய் அளவு பருமனாக இருக்கும். அங்குள்ள பழமையான குழிகளில் அவை விழும்.
* அரசன் நன்னன் நறவு உண்டு களிப்பவன். தேரில் செல்லும் பழக்கம் உள்ளவன். மூங்கில் முத்து தெறிக்கும் நன்னன் நாட்டு மலைப் பிளவில், பொன் தோன்றும் மலைப்பகுதியைக் கடந்து பொருளீட்டச் சென்றுள்ள அவர் விரைவில் திரும்பிவிடுவார்.
== பாடல் நடை ==
===== அகநானூறு 173 =====
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
== உசாத்துணை ==
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/agananooru/agananooru_173.html அகநானூறு 173, தமிழ் சுரங்கம்]

Revision as of 10:26, 19 October 2022

This page is being created by Ka.Siva

முள்ளியூர்ப் பூதியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர்.  இவரது ஓரு பாடல் சங்க தொகை நூல்களில்  ஒன்றான அகநானூறுவில் இடம் பெற்றுள்ளது

வாழ்க்கைக் குறிப்பு

மலையமானுக்கு உரியதான முள்ளுர்க் கானம் இலக்கியங்களிலே காண்ப்படுகிறது.  முள்ளியூர்ப் பூதியார் என்ற பெயரிலுள்ள முள்ளியூர் அந்தப் பகுதியில் உள்ளதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூதியார் என்ற பெயரமைப்பினில் பூதன் என்ற ஆண்பால் பெயரின் பெண்பால் பெயர் பூதி எனக் கொள்ளப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

முள்ளியூர்ப் பூதியார் இயற்றிய பாடல் சங்கத் தொகை நூலான அகநானூறுவில்  173- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. பொருள்வயிற் பிரியும் காதலரைப் பற்றிக் கூறும் இல்வாழ்வின் நெறிகுறித்தும் 'நன்னன்’ என்பவனின் சிறப்பையும் முள்ளியூர்ப் பூதியார் இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

பாடல் சொல்லும் செய்தி

அகநானூறு 173
  • பாலைத்திணை
  • தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
  • துன்பப்படுவதைச் சிலநாள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு கழலும் உன் வளையல்களைத் திருத்தியவர் அவர் அல்லவா? வந்துவிடுவார்.
  • பல புரி கொண்ட நீண்ட கயிற்றை எருதுகளின் கழுத்தில் வரிசையாகக் கட்டி உப்பு வண்டியைப் கொண்டு செல்லும் உமணர் எருதுகளை அதட்டி ஓட்டுவர். அந்த ஒலியைக் கேட்டு அங்கு மேயும் உழைமான் கூட்டத்திலிருந்து பிரிந்து பெண்மான் ஓடும்.
  • கோடைக்காலம் காட்டின் அழகைத் தின்றுகொண்டிருக்கும். அப்போது மூங்கில் வெடித்து முத்துக்களைத் தெறிக்கும். அவை அணிந்துகொள்ளப் பயன்படாத முத்துக்கள். அவை கழங்கு விளையாடும் காய் அளவு பருமனாக இருக்கும். அங்குள்ள பழமையான குழிகளில் அவை விழும்.
  • அரசன் நன்னன் நறவு உண்டு களிப்பவன். தேரில் செல்லும் பழக்கம் உள்ளவன். மூங்கில் முத்து தெறிக்கும் நன்னன் நாட்டு மலைப் பிளவில், பொன் தோன்றும் மலைப்பகுதியைக் கடந்து பொருளீட்டச் சென்றுள்ள அவர் விரைவில் திரும்பிவிடுவார்.

பாடல் நடை

அகநானூறு 173

'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த

கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்

வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்

செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்

மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்

சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்

நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,

வருவர் வாழி, தோழி! பல புரி

வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,

பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,

உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,

காடு கவின் அழிய உரைஇ, கோடை

நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்

கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்

கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்

இன் களி நறவின் இயல் தேர் நன்னன்

விண் பொரு நெடு வரைக் கவாஅன்

பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.

உசாத்துணை