under review

முத்துகுமாரப் புலவர்

From Tamil Wiki
Revision as of 09:30, 11 December 2022 by Madhusaml (talk | contribs)

முத்துகுமாரப் புலவர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிவபக்தர். சைவப்பாடல்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துகுமாரப் புலவர் கொங்கு நாடு திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகில் சேவூரில் அண்ணாமலை முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். சிவபக்தர். இளமைக்கல்வி கற்றார். ஜோதிடக்கலையைக் கற்றார். சேவூர் பத்ரகாளியம்மன் கோயிலில் இவரின் கற்சிலை உள்ளது. அருகிலேயே இவரின் ஜீவசமாதியும் உள்ளது.

தொன்மம்
  • சாமராஜ உடையார் அரசராக இருந்தபோது மைசூர் சென்றார். மக்களை வருத்திய சிறுத்தைப் புலிகளைக் கொன்றார் என்பர்.
  • மைசூர் அரசர் குழந்தை பேறின்மையின்றி இருந்தபோது அவருக்கு பிறக்கும் என்று ஜோதிடம் கூறினார். பத்து மாதங்களில் பிள்ளை பிறக்க அவருக்கு அரசர் நன்கொடைகள் வழங்கினார்.
  • அவிநாசிக்கு அருகேயுள்ள தோட்டத்தில் பரண் கட்டி அங்கே தவம் புரிந்து காலமானார் என்ற தொன்மம் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

சிவபதிகளுக்குச் சென்று பாடல்கள் பாடினார். அவிநாசி பெருங்கருணையம்மனைப் பாடினார். செய்யுட்கள் பல பாடினார். முத்துகுமாரப் புலவர் பற்றி பலரும் பிள்ளைத்தமிழ் பாடினர்.

உசாத்துணை


✅Finalised Page