being created

முத்தம்பெருமாள் (கணியான்)

From Tamil Wiki
Revision as of 10:18, 3 June 2022 by Navingssv (talk | contribs)

கலைமாமணி பி. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) கணியான் கூத்துக் கலைஞர். முத்தம்பெருமாள் கணியான் குழுவின் அண்ணாவியாக பாடுபவர். நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

பிறப்பு, கல்வி

பி. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரி அரசு மருத்துவமனையில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பத்தின் குலதெய்வம்.

முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.

தனி வாழ்க்கை

முத்தம் பெருமாள் 1988 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக உள்ளார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வக்கீல்), கார்த்திகேயாயினி (எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்).

முத்தம் பெருமாளின் தந்தை பி. வானமாமலை கணியான் அண்ணாவியாகப் பாடுபவர். 1987 ஆம் ஆண்டு இந்திய தேசிய ஒற்றுமை கலை விழாவிற்காக ஒரு மாத காலம் டெல்லியில் தங்கி கூத்து நடத்தினார். அங்கிருந்து நாங்குனேரி திரும்பிய போது அவரது சாரீரம் பழுதடைந்திருந்தது. அவரது குரல் அதன்பின் பாட இயலாமல் ஆனது. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் வானமாமலை நாங்குனேரியில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று குடும்பத்துடன் வள்ளியூருக்கு குடிபெயர்ந்தார்.

1989 ஆம் குடும்ப வறுமை நிலைக் காரணமாக முத்தம் பெருமாள் தன் பத்தொன்பதாம் வயதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் வாகனம் ஓட்டும் பொருட்டு கோவா சென்றார். 1991 முதல் 1994 வரை முழு நேர வாகனம் ஓட்டியாக கோவாவில் இருந்தார். ரயில்வே அதிகாரிகள் பழுதடைந்த வாகனத்தை ஓட்டச் சொன்னபோது அதனை மறுத்து வேலையை ராஜனாமா செய்து வள்ளியூர் திரும்பினார்.

கலை வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.