under review

மீ. சுப்ரமணிய ஐயர்

From Tamil Wiki
Revision as of 10:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மீ. சுப்ரமணிய ஐயர் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட்சி சுந்தரம் ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்க்கல்வியை சுப்பராயர், செந்நெற்குடி வீமகவி இருவரிடமும் கற்றார். பல மாணவர்கள் இவரிடம் இலக்கண, இலக்கியப் பாடங்களைக் கற்றனர்.

மாணவர்கள்
  • வேங்கடராமைய்யர்
  • வெ.இ. இராமசாமி ஐயர்
  • வினைதீர்த்தான் ஆசாரி
  • சொ. முத்தையா பிள்ளை

இலக்கிய வாழ்க்கை

மீ. சுப்ரமணிய ஐயர் செய்யுள்கள் பல இயற்றினார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாகப் பாடினார். க.வீ.அள.மு. இராம நாதன் செட்டியார் இந்நூலை அச்சில் பதிப்பித்தார்.

பாடல் நடை

அயோத்தியா காண்டம் சூழ்வினைப்படலம்

மன்னவன்சொல் அன்றேல் மறுப்பனோ நின்பணியென்
பின்னவன் றன் செல்வமியான் பெற்றதன்றோ - என்னவிதின்
செல்வாம் வன்மின்றே சேரவிடை தாவென்றான்
சொல்வாள் மலர்தாள் துதித்து

சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்

  • இராமசந்திர சாஸ்திரிகள்
  • கிரீச பாகவதர்
  • வீமசேஷ கவிராயர்
  • ஆவுடையார் கோயில் க. சுப்ரமணிய ஐயர்
  • வெ. இராமசாமி ஐயர்
  • பரமேசுரக் குருக்கள்
  • வினைதீர்த்தான் ஆசாரி
  • சொ. முத்தையபிள்ளை
  • வேங்கட்டராமையார்

நூல் பட்டியல்

  • இராமாயணம் வெண்பா
  • துர்க்காம்பாள் பதிகம்

உசாத்துணை


✅Finalised Page