under review

மா. ஆண்டோபீட்டர்

From Tamil Wiki
Revision as of 02:11, 19 October 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மா. ஆண்டோபீட்டர் (நன்றி: மு. இளங்கோவன்)

மா. ஆண்டோபீட்டர் (ஏப்ரல் 26, 1967 - ஜூலை 12, 2012) கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். கணினித்தமிழ்ச் சங்கத்தை நிறுவினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மா. ஆண்டோபீட்டர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஏப்ரல் 26, 1967-ல் பிறந்தார். மா. ஆண்டோபீட்டர் சி.எஸ்.சி சாஃப்ட் வ்யூ நிறுவனத்தின் நிறுவனர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டார்.

அமைப்புப் பணி

மா. ஆண்டோபீட்டர் கணினித்தமிழ்ச் சங்கத்தை நிறுவி பணி செய்தார். உத்தமம் (உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம்) அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

மா. ஆண்டோபீட்டர் கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது, தமிழ்மென்பொருள்களை வடிவமைப்பது, கணிப்பொறி சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது போன்ற பணிகளை தன் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் மூலம் செய்தார். கணிப்பொறியியல், இணையத்தில் தமிழ் மொழியை முன்னிறுத்தும் பணிகளில் ஈடுபட்டார். கணினித்தமிழ் சார்ந்த நூல்கள் எழுதினார்.

விருது

  • தந்தை பெரியார் விருது

மறைவு

மா. ஆண்டோபீட்டர் ஜூலை 12, 2012-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மல்டிமீடியா அடிப்படைகள்
  • தமிழும் கணிப்பொறியும்
  • கணினி கலைச் சொற்கள்
  • இண்டெர்நெட் இமெயில்
  • கம்ப்யூட்டர் படிப்புகள்
  • மல்டி மீடியா
  • கிராபிக்ஸ் அனிமேஷன்

உசாத்துணை


✅Finalised Page