மாதர் மறுமணம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 13:01, 18 August 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மாதர் மறுமணம் இதழ்

கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துத் தமிழில் வெளியான முதல் மற்றும் ஒரே மாத இதழ் 'மாதர் மறுமணம்'. 1936, ஆகஸ்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் சொ.முருகப்பா. மாதர் மறுமணம் குறித்து இவ்விதழில் வெளியான கட்டுரைகளும், பாடல்களும், ,செய்திகளும் சமூக விழிப்புணர்வைத் தூண்டுவதாய் அமைந்திருந்தன.

பதிப்பு, வெளியீடு

தன வைசிய ஊழியன்’, ‘குமரன்’ போன்ற இதழ்களை நடத்தி வந்தவர் சொ.முருகப்பா. சுயமரியாதை இயக்க ஆதரவாளரான இவர், அதனை வளர்க்கும் பொருட்டு ‘சண்டமாருதம்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் கைம்பெண்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய இவர், அவர்களை மீட்கும் பொருட்டு காரைக்குடியில் 1934-ல் ‘மாதர் மறுமண இயக்கம்' என்ற அமைப்பைத்  தொடங்கினார். அமைப்பின் முன் மாதிரியாக, முருகப்பா, கைம்பெண்களில் ஒருவரான மரகதவல்லியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆண்கள் பலரும் விதவைகளை மணக்க முன் வர வேண்டும் என்ற எண்ணத்தில், விதவைப் பெண்களின் அவலம் நீக்குவதற்காகவும், அவர்களின் மறுமணத்தை வலியுறுத்தியும் ‘மாதர் மறுமணம்’ இதழை 1936, ஆகஸ்டில்  ஆரம்பித்தார் சொ. முருகப்பா. அவரது மனைவி மு. மரகதவல்லி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.