under review

மஹாராணி: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added; Image Added.)
 
m (Madhusaml moved page மஹராணி to மஹாராணி without leaving a redirect)
(No difference)

Revision as of 22:42, 23 September 2022

மஹாராணி இதழ்

1887 முதல், பெண்களுக்காக வெளி வந்த இதழ் மஹராணி (The Maharani). இதன் ஆசிரியர் கிருஷ்ணன்.

பதிப்பு, வெளியீடு

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, பெண்களின் நலனை முன்னிறுத்தி, 1887 ஜூன் முதல் வெளிவந்த இதழ் மஹராணி. இது ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவந்தது. பின்னர் இரு மாத இதழாக மாற்றம் செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக கிருஷ்ணன் என்பவர் இருந்தார். இதழின் விலை, ஆண்டு சந்தா பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. எவ்வளவு காலம் இதழ் இதழ் வெளிவந்தது என்பது பற்றியும் அறிய இயலவில்லை.

உள்ளடக்கம்

இதழின் முகப்பில், A PICTORIAL MAGAZINE IN TAMIL மற்றும் For Girl's Schools and Home Reading என்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பள்ளியில் படிக்கும் பெண்களுக்கும், வீட்டில் இருந்தே கல்வி கற்கும் பெண்களுக்கும் உதவியாக இவ்விதழ் வெளிவந்தது. இதழில், “அமிழ்தினு மாற்ற லினிதே தம்மக்கள் சிறுகை யளாவிய கூழ்' எனும் குறள் இடம் பெற்றுள்ளது. இதழில், ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் அகர வரிசை அடிப்படையில் பழமொழிகள் இடம் பெற்றுள்ளன. இலக்கியக் கட்டுரைகள், மொகலாய மன்னர்களின் ஆட்சியியல் பற்றிய கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள். வரலாற்றுக் கட்டுரைகள், நாடகத்தமிழ் பற்றிய கட்டுரைகள் , பெண்களின் சிறப்பியல்புகள் பற்றிய கட்டுரைகள் எனப் பல விதமான கட்டுரைகள் இவ்விதழ்களில் இடம் பெற்றுள்ளன.

தாய்மார்களுக்கு அறிவுரை கூறும் வகையிலான கட்டுரைகளும், குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளைக் காக்கும் தேவதை, ப்ருஷியா தேசத்துச் சக்ரவர்த்தி, கரடி, புதிய மாதிரித் தையல், வென்னீரின் உபயோகம், உபாத்தியாயரும் மாணாக்கனும், மீதூண் விரும்பேல், கலைமான், சின்னி, மக்கா நகரம், குரங்கு, இரும்புத் தூண், பட்டுநூல் மாதிரி தையல், சூரிய கிரணம், நடக்கப் பழகுதல், பரோபகாரம், ப்ளரென்ஸ் நைத்திங்கேல் என்னும் பரோபகாரி, ஜனநெருக்கமும் அசுத்தமான காற்றும், ருஷியா தேசம், மணிப்புறா, கோவிந்தசாமி கதை, கொக்கும் நரியும், சிங்கமும் கரடியும் நரியும், நரியின் தந்திரம், அரேபி தேசத்துக் கதை போன்றவை இடம் பெற்றுள்ளன.

நிறுத்தம்

மஹாராணி இதழ் 1900 வரை வெளிவந்ததற்கான ஆவணக் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதன் பின் எவ்வளவு ஆண்டு காலம் வெளிவந்தது, எப்போது நின்று போனது என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆவணம்

இவ்விதழின் சில பிரதிகள் தமிழ்நாடு ஆவணக் காப்பக்கத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

  • மறைந்து போன தமிழ் இதழ்கள் (1800-1900), ப. ராஜசேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.