under review

மருத்துவன் மகள்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Moved categories to bottom of article)
Line 14: Line 14:
* தமிழ்நாவல்- சிட்டி சிவபாத சுந்தரம். கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு
* தமிழ்நாவல்- சிட்டி சிவபாத சுந்தரம். கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு


[[Category:நாவல்கள்]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]

Revision as of 15:38, 29 December 2022

மருத்துவன் மகள் (1928) மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய நாவல். சமூக சீர்திருத்த நோக்கமும் தமிழ் மறுமலர்ச்சி நோக்கமும் கொண்டது

எழுத்து, பிரசுரம்

இந்நாவல் 1926 முதல் லோகோபகாரி இதழில் தொடராக வெளிவந்து பின்னர் 1928-ல் நூலாக வெளிவந்தது. மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், ஆங்கிலத்திலும் எழுதியவர். அவர் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். மருத்துவன் மகள், தப்பிலி

கதைச்சுருக்கம்

சங்கர பண்டிதர் என்னும் மருத்துவர் தம்முடைய முதல் பெண் மாணிக்கத்துக்கு மணம் செய்விக்க முயல்கிறார். தன் சொந்த மருமகன் அம்பலவாணனுக்கா அல்லது நண்பரின் மகன் மாணிக்கத்துக்கா எவருக்கு மகளைக்கொடுப்பது என்னும் குழப்பம் உருவாகிறது. மாணிக்கம் அம்பலவாணனை நேசிக்கிறாள். திருமணத்தில் பெண்ணின் விருப்பமே முதன்மையானது என ஒரு சமூகத்தொண்டர் கூறுவதற்கிணங்க சங்கரபண்டிதர் மகலை அம்பலவாணனுக்கு மணம் செய்து கொடுக்கிறார்

இலக்கிய இடம்

தமிழில் சமூகசீர்திருத்த நோக்கத்துடன் எழுதப்பட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. மரபார்ந்த பார்வை கொண்டவர்கள்கூட சற்று முற்போக்குப்பார்வையை நோக்கித் திரும்புவதை இந்நாவல் காட்டுகிறது

உசாத்துணை

  • தமிழ்நாவல்- சிட்டி சிவபாத சுந்தரம். கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு



✅Finalised Page