மயங்கொலிச் சொற்கள்

From Tamil Wiki
Revision as of 01:13, 24 April 2024 by Editorgowtham (talk | contribs) (Created page with "தமிழில் உள்ள சொற்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒலித்தன்மை உடைய, ஆனால் வேறுபட்ட பொருளைக்கொண்ட சில சொற்களை மயங்கொலிச்சொற்கள் என குறிப்பிடுகிறோம். இதனை ஒலிக்கும் போது எது சரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழில் உள்ள சொற்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒலித்தன்மை உடைய, ஆனால் வேறுபட்ட பொருளைக்கொண்ட சில சொற்களை மயங்கொலிச்சொற்கள் என குறிப்பிடுகிறோம். இதனை ஒலிக்கும் போது எது சரி, எது தவறு என புரியாமல் மயங்க வைக்கும். (உதா: பணி, பனி). அதனால் இவை 'மயங்கொலிச் சொற்கள்' என்றழைக்கப்படுகின்றன.

மயங்கொலி எழுத்துக்கள்

இந்த வகை எழுத்துக்கள் மொத்தம் எட்டு வகைப்படும். இந்த எட்டு எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்ட சொற்கள் பேசும் போது என்று போலவும், எழுத்தில் வேறு வகையிலும் பொருள் தருகின்றன.

  1. ண – டண்ணகரம்
  2. ன – றன்னகரம்
  3. ந – தந்நகரம்
  4. ல – லகரம்
  5. ழ – மகர ழகரம்
  6. ள –  ளகரம்
  7. ர – இடையின ரகரம்
  8. ற – வல்லின றகரம்

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்

ர, ற பொருள் வேறுபாடு

  • அணல் - தாடி, கழுத்து
  • அனல் - நெருப்பு
  • அணி - அழகு
  • அனி - நெற்பொறி
  • அணு - நுண்மை
  • அனு - தாடை, அற்பம்
  • அணுக்கம் -  அண்டை,  அண்மை
  • அனுக்கம் - வருத்தம், அச்சம்
  • அணை -  படுக்கை,  அணைத்துக் கொள்ளுதல்  
  • அனை - அன்னை, மீன்
  • அணைய - சேர, அடைய
  • அனைய - அத்தகைய
  • அண்மை - அருகில்
  • அன்மை - தீமை, அல்ல
  • அங்கண் - அவ்விடம்
  • அங்கன் - மகன்
  • அண்ணம் - மேல்வாய்
  • அன்னம் -  சோறு, அன்னப்பறவை
  • அண்ணன் - தமையன்
  • அன்னன் - அத்தகையவன்
  • அவண் - அவ்வாறு
  • அவன் -  சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
  • ஆணகம் - சுரை
  • ஆனகம் - துந்துபி
  • ஆணம் - பற்றுக்கோடு
  • ஆனம் - தெப்பம், கள்
  • ஆணி -  எழுத்தாணி, இரும்பாணி
  • ஆனி -  தமிழ் மாதங்களுள் ஒன்று
  • ஆணேறு - ஆண்மகன்
  • ஆனேறு - காளை, எருது
  • ஆண் - ஆடவன்
  • ஆன் - பசு
  • ஆணை - கட்டளை, ஆட்சி
  • ஆனை - யானை
  • இணை - துணை, இரட்டை
  • இனை - இன்ன, வருத்தம்
  • இணைத்து - சேர்த்து
  • இனைத்து - இத்தன்மையது
  • இவண் - இவ்வாறு
  • இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு
  • ஈணவள் - ஈன்றவள்
  • ஈனவள் - இழிந்தவள்
  • உண் - உண்பாயாக
  • உன் - உன்னுடைய
  • உண்ணல் - உண்ணுதல்
  • உன்னல் - நினைத்தல்
  • உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
  • உன்னி - நினைத்து, குதிரை
  • ஊண் - உணவு
  • ஊன் - மாமிசம்
  • எண்ண - நினைக்க
  • என்ன - போல, வினாச்சொல்
  • எண்ணல் - எண்ணுதல்
  • என்னல் - என்று சொல்லுதல்
  • எண்கு - கரடி
  • என்கு - என்று சொல்லுதல்
  • ஏண் - வலிமை
  • ஏன் -  வலிமை, ஒரு வினைச்சொல்
  • ஏணை - தொட்டில்
  • ஏனை - மற்றது
  • ஐவணம் - ஐந்து வண்ணம்
  • ஐவனம் - மலை நெல்
  • ஓணம் - ஒரு பண்டிகை
  • ஓனம் – எழுத்துச்சாரியை
  • கணகம் - ஒரு படைப்பிரிவு
  • கனகம் - பொன்
  • கணப்பு - குளிர்காயும் தீ
  • கனப்பு - பாரம், அழுத்தம்
  • கணி - கணித்தல்
  • கனி - பழம், சுரங்கம், சாரம்
  • கணம் - கூட்டம்
  • கனம் -பாரம்
  • கண்ணன் - கிருஷ்ணன்
  • கன்னன் - கர்ணன்
  • கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
  • கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி
  • கணை - அம்பு
  • கனை - ஒலி, கனைத்தல்
  • கண் - ஓர் உறுப்பு
  • கன் - கல், செம்பு, உறுதி
  • கண்று - அம்பு
  • கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
  • கண்ணல் - கருதல்
  • கன்னல் - கரும்பு, கற்கண்டு
  • காண் - பார்
  • கான் - காடு, வனம்
  • காணம் - பொன், கொள்
  • கானம் - இசை, காடு, வனம், தேர்
  • காணல் - பார்த்தல்
  • கானல் - பாலை
  • கிணி - கைத்தாளம்
  • கினி - பீடை
  • கிண்ணம் - வட்டில், கிண்ணி
  • கின்னம் - கிளை, துன்பம்
  • குணி - வில், ஊமை
  • குனி - குனிதல், வளை
  • குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
  • குனித்தல் - வளைதல்
  • குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
  • குனிப்பு - வளைப்பு, ஆடல்
  • கேணம் - செழிப்பு, மிகுதி
  • கேனம் - பைத்தியம், பித்து
  • கேணி - கிணறு
  • கேனி - பித்துப் பிடித்தவர்
  • கோண் - கோணல், மாறுபாடு
  • கோன் - அரசன்
  • சாணம் - சாணைக்கல், சாணி
  • சானம் - அம்மி, பெருங்காயம்
  • சுணை - கூர்மை, கரணை
  • சுனை - நீரூற்று
  • சுண்ணம் - வாசனைப் பொடி
  • சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
  • சேணம் - மெத்தை
  • சேனம் - பருந்து
  • சேணை - அறிவு
  • சேனை - படை
  • சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
  • சோனம் - மேகம்
  • சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
  • சோனை - மழைச்சாரல், மேகம்
  • தண் - குளிர்ச்சி
  • தன் - தன்னுடைய
  • தணி - தணித்தல்
  • தனி - தனிமை
  • தாணி - தான்றிமரம்
  • தானி - இருப்பிடம், பண்டசாலை
  • தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
  • தானு - காற்று
  • திணை - ஒழுக்கம், குலம்
  • தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப் பயிர்
  • திண்மை - உறுதி
  • தின்மை - தீமை
  • திண் - வலிமை
  • தின் - உண்
  • துணி - துணிதல், கந்தை
  • துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
  • தெண் - தெளிவு
  • தென் - தெற்கு, அழகு
  • நண்பகல் - நடுப்பகல்
  • நன்பகல் - நல்லபகல்
  • நணி - அணி (அழகு)
  • நனி - மிகுதி
  • நாண் - வெட்கம், கயிறு
  • நான் - தன்மைப் பெயர்
  • நாணம் - வெட்கம்
  • நானம் - புனுகு, கவரிமான்
  • பணி - வேலை, கட்டளையிடு
  • பனி - துன்பம், குளிர், சொல், நோய்
  • பணை - முரசு, உயரம், பரந்த
  • பனை - ஒருவகை மரம்
  • பண் - இசை
  • பன் - அரிவாள், பல
  • பண்ணை - தோட்டம்
  • பன்னை - கீரைச்செடி
  • பண்ணுதல் - செய்தல்
  • பன்னுதல் - நெருங்குதல்
  • பண்ணி - செய்து
  • பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
  • பண்மை - தகுதி
  • பன்மை - பல
  • பணித்தல் - கட்டளையிடுதல்
  • பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
  • பட்டணம் - நகரம்
  • பட்டினம் - கடற்கரை நகர்
  • பாணம் - நீருணவு
  • பானம் - அம்பு
  • புணை - தெப்பம்
  • புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
  • புண் - காயம்
  • புன் - கீழான
  • பேணம் - பேணுதல்
  • பேனம் - நுரை
  • பேண் - போற்று, உபசரி
  • பேன் - ஓர் உயிரி
  • மணம் - வாசனை, திருமணம்
  • மனம் - உள்ளம், இந்துப்பு
  • மணை - மரப்பலகை, மணவறை
  • மனை - இடம், வீடு
  • மண் - தரை, மண்வகை
  • மன் - மன்னன், பெருமை
  • மண்ணை - இளமை, கொடி வகை
  • மன்னை - தொண்டை, கோபம்
  • மாணி - அழகு, பிரம்மசாரி
  • மானி - மானம் உடையவர்
  • மாண் - மாட்சிமை
  • மான் - ஒரு விலங்கு
  • முணை - வெறுப்பு, மிகுதி
  • முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை
  • வணம் - ஓசை
  • வனம் - காடு, துளசி
  • வண்மை - வளப்பம், கொடை
  • வன்மை - உறுதி, வலிமை
  • வண்ணம் - நிறம், குணம், அழகு
  • வன்னம் - எழுத்து, நிறம்
  • வாணகம் - அக்கினி, பசுமடி
  • வானகம் - மேலுலகம்
  • வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
  • வானம் - ஆகாயம், மழை
  • வாணி - கலைமகள், சரஸ்வதி
  • வானி - துகிற்கொடி