மன்னன் மகள்

From Tamil Wiki
Revision as of 22:33, 21 March 2022 by Jeyamohan (talk | contribs)

மன்னன் மகள் (1958) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். ராஜேந்திர சோழனின் கங்கைச்சமவெளிப் படையெடுப்பின் பின்னணியில் அமைந்தது

எழுத்து,வெளியீடு

மன்னன் மகள் சாண்டில்யன் எழுத குமுதம் வார இதழில் 1958 ஜனவரி மாதம் முதல் 1959 நவம்பர் வரை தொடர்கதையாக வெளியானது.குமுதம் இதழில் வெளிவந்த சாண்டியல்யனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் கன்னிமாடம். இந்நாவலே சாண்டில்யனின் முதல் வெற்றிப்படைப்பு. இதன் கட்டமைப்பு, மொழிநடை ஆகியவற்றை அவர் இறுதிவரை கொண்டுசென்றார். வானதி பதிப்பகம் 1960ல் நூலாக கொண்டுவந்தது

கதைச்சுருக்கம்

தன் பெற்றோர் யார் என தேடிச்செல்லும் கரிகாலன் என்னும் புனைவுக்கதாபாத்திரமே இக்கதையின் மையம். அவன் வெங்கிநாட்டுக்குச் சென்று அங்கே நிரஞ்சனாதேவியைச் சந்திக்கிறான். வெங்கிநாட்டு அரசன் விமலாதித்யன்