under review

மனுஷி: Difference between revisions

From Tamil Wiki
Line 6: Line 6:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:மனுஷி4.jpg|thumb|329x329px|மனுஷி]]
[[File:மனுஷி4.jpg|thumb|329x329px|மனுஷி]]
தொடக்கத்தில் கீற்று.காம், மலைகள்.காம் போன்ற இணைய தளங்களில் மனுஷியின் படைப்புகள் வெளிவந்தன. மனுஷியின் முதல் தொகுப்பு ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ 2013இல் மித்ரா பதிப்பகம் மூலம் வெளியானது. 2017இல் மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது பெற்றார். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறேன்.
தொடக்கத்தில் கீற்று.காம், மலைகள்.காம் போன்ற இணைய தளங்களில் மனுஷியின் படைப்புகள் வெளிவந்தன. மனுஷியின் முதல் தொகுப்பு ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ 2013-ல் மித்ரா பதிப்பகம் மூலம் வெளியானது. 2017-ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது பெற்றார். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறேன்.
மலையாளத்தில் கமலாதாஸ், பஷீர், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரின், பாப்லோ நெருடா, ரூமி, மஹ்மூத் தர்வீஷ், சில்வியா ப்ளாத், இளம்பிறை, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை ஆகியோரை இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். ’இரும்பன்’ திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதினார்.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 13: Line 13:
== விருதுகள் ==
== விருதுகள் ==
* முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது பெற்றார்.
* முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது பெற்றார்.
* ’ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’கவிதைத்தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றார்.
* ’ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’கவிதைத்தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருத  பெற்றார்.
* 2019இல் புதிய தலைமுறையின் இளம் எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றார்.
* 2019-ல் புதிய தலைமுறையின் இளம் எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றார்.
* தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது பெற்றார்.
* தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது பெற்றார்.
* ஈரோடு தமிழன்பன் விருது
* ஈரோடு தமிழன்பன் விருது
* திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது
* திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது
* பூவரசி இலக்கிய விருது
* பூவரசி இலக்கிய விருது
== நூல்கள் ==
== நூல்கள் ==
* குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் (மித்ரா பதிப்பகம்: 2013)
* குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் (மித்ரா பதிப்பகம்: 2013)
Line 26: Line 25:
* கருநீல முக்காடிட்ட புகைப்படம் (வாசகசாலை: 2019)
* கருநீல முக்காடிட்ட புகைப்படம் (வாசகசாலை: 2019)
* யட்சியின் வனப்பாடல்கள் (வாசகசாலை: 2019)
* யட்சியின் வனப்பாடல்கள் (வாசகசாலை: 2019)
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.hindutamil.in/news/blogs/194617-.html புது எழுத்து | மனுஷி பாரதி - பெண் குரல்: இந்து தமிழ் திசை]
* [https://www.hindutamil.in/news/blogs/194617-.html புது எழுத்து | மனுஷி பாரதி - பெண் குரல்: இந்து தமிழ் திசை]
Line 33: Line 31:
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=1820962&fbclid=IwAR3r5Qg49_Cc1GPKwQaQkSpBF8pw9ioHoUT90MXIfbFPc7iPXFrhr8yV9tc இலக்கிய உலகின் இறைவி - மனம் திறக்கும் மனுஷி: தினமலர்]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=1820962&fbclid=IwAR3r5Qg49_Cc1GPKwQaQkSpBF8pw9ioHoUT90MXIfbFPc7iPXFrhr8yV9tc இலக்கிய உலகின் இறைவி - மனம் திறக்கும் மனுஷி: தினமலர்]
* [https://www.dailythanthi.com/Devathai/Achievers/2022/05/07135319/Have-a-life-like-poetry-manushi.vpf கவிதை போல ஒரு வாழ்க்கை வேண்டும் - மனுஷி: தினத்தந்தி]
* [https://www.dailythanthi.com/Devathai/Achievers/2022/05/07135319/Have-a-life-like-poetry-manushi.vpf கவிதை போல ஒரு வாழ்க்கை வேண்டும் - மனுஷி: தினத்தந்தி]
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:05, 28 August 2022

மனுஷி

மனுஷி(மனுஷி பாரதி) தமிழில் எழுதி வரும் கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர். தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

மனுஷியின் இயற்பெயர் ஜெயபாரதி. விழுப்புரம், திருநாவலூரில் பிறந்தார். சங்கர் ரெட்டியார் அரசினர் கல்லூரியில் பள்ளிக் கல்வி பயின்றார். புதுச்சேரி, பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கியம் இளங்கலைப்பட்டம் பெற்றார். புதுச்சேரி மத்தியப் பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வில் உள்ளார். தற்போது ஆரோவில் பகுதியில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

மனுஷி

தொடக்கத்தில் கீற்று.காம், மலைகள்.காம் போன்ற இணைய தளங்களில் மனுஷியின் படைப்புகள் வெளிவந்தன. மனுஷியின் முதல் தொகுப்பு ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ 2013-ல் மித்ரா பதிப்பகம் மூலம் வெளியானது. 2017-ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது பெற்றார். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறேன். மலையாளத்தில் கமலாதாஸ், பஷீர், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரின், பாப்லோ நெருடா, ரூமி, மஹ்மூத் தர்வீஷ், சில்வியா ப்ளாத், இளம்பிறை, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை ஆகியோரை இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். ’இரும்பன்’ திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதினார்.

இலக்கிய இடம்

"மனுஷியின் கவிதைகள் வெற்று வார்த்தைச் சேர்க்கைகள் அல்ல. சந்தம் பார்த்து, அழகு எனக்கருதப்படும் சொல்லாடல் கொண்டு. அவருடைய கவிதைகள் சோகம், எதிர்பார்ப்பு ஆனந்தம் போன்ற உணர்வுகளோடு அவை காட்சி அனுபவமாகவும் நம்மை வந்தடைகின்றன. ஒளிச் சொற்கள் போன்ற சொற்றொடர்கள் அபூர்வம் தான். ஆனால் என்னைக் கவர்வது, மனுஷியின் கவித்வத்துக்கு ஒரு தனித்தன்மை கொடுப்பது, அது அவருக்கு இயல்பாக வந்து சேர்ந்துள்ளது என்று, சொல்வது அவரது சொற்கள் தாங்கி வரும் உணர்வுகளும் காட்சி அனுபவங்களும் தான். இதை யோசித்து உருவாக்க முடியாது. சொல் விளையாட்டிலும் வருவதல்ல" என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மனுஷியின் ’குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ கவிதைத்தொகுப்பு பற்றி மதிப்பிடுகிறார்.

யட்சியின் வனப்பாடல்கள்

விருதுகள்

  • முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது பெற்றார்.
  • ’ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’கவிதைத்தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருத பெற்றார்.
  • 2019-ல் புதிய தலைமுறையின் இளம் எழுத்தாளருக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றார்.
  • தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது பெற்றார்.
  • ஈரோடு தமிழன்பன் விருது
  • திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது
  • பூவரசி இலக்கிய விருது

நூல்கள்

  • குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் (மித்ரா பதிப்பகம்: 2013)
  • முத்தங்களின் கடவுள் (உயிர்மை பதிப்பகம்: 2014)
  • ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் (உயிர்மை பதிப்பகம்: 2015)
  • கருநீல முக்காடிட்ட புகைப்படம் (வாசகசாலை: 2019)
  • யட்சியின் வனப்பாடல்கள் (வாசகசாலை: 2019)

இணைப்புகள்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.