மனீஷா ராஜு

From Tamil Wiki
Revision as of 16:25, 6 October 2022 by Jayaramart (talk | contribs) (Created page with "மனீஷா ராஜு(பிறப்பு: 13 டிசம்பர், 1969) சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். மகாராஷ்டிராவின் நாக்பூரை பூர்விகமாகக் கொண்டவர். அதிகமாக பக்தி ஆன்மீக மரபு சார்ந்த புராண இதிகாச பாத்திரங்கள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மனீஷா ராஜு(பிறப்பு: 13 டிசம்பர், 1969) சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். மகாராஷ்டிராவின் நாக்பூரை பூர்விகமாகக் கொண்டவர். அதிகமாக பக்தி ஆன்மீக மரபு சார்ந்த புராண இதிகாச பாத்திரங்கள், பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள் ஆகியவைகளை தன் படைப்பில் சித்தரித்திருப்பவர். பல்வேறு கலை கண்காட்சிகளிலும் முகாம்களிலும் பங்கெடுத்தவர்.

பிறப்பு, கல்வி

மனீஷா ராஜூ 1969-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பிறந்தவர். அப்பா ஹரியத் லக்ஷ்மண் ராவ் குகில்வார் இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் ஆயுத தொழிற்சாலை வாரியத்தில்(Ordnance Factory Board) பணியாற்றினார். அம்மா பிரதீபா. மனீஷாவுக்கு அடுத்து ஒரு தங்கையும் இரண்டு தம்பிகளுடன் நான்கு குழந்தைகள். தங்கை- சங்கீதா, தம்பிகள்- ஶ்ரீகாந்த், அர்ஜுன். பள்ளிக் கல்வியை ஹடஸ் மேல்நிலைப்பள்ளியில்(Hadas High School, Nagpur) முடித்தார். அறிவியல் கழக கல்லூரியில் கணிதம், வேதியியல் மற்றும் புள்ளியியலில் இளங்கலையும், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மனித வளத்தில் எம்.பி.ஏ, பொது நிர்வாகத்தில் முதுகலை பயின்றார். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள நாற்பு ஆலைகளின் செயல்திறன் மதிப்பீடு குறித்த விமர்சன ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த ஆய்விற்காக ஒரு விருதும் வாங்கியிருக்கிறார்.

தனி வாழ்க்கை

மனீஷா ராஜு 1997-ல் ராஜு துர்ஷெட்டிவாலா என்ற ஓவியரை திருமணம் செய்து கொண்டார். மகள் ஹர்ஷதா.

கலை வாழ்க்கை

இளமை நாட்கள்

மனீஷா ராஜுவின் அப்பா கலையார்வம் உள்ளவர். அம்மா பட்டு நூல், துணிகள் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.  குழந்தைகளில் மனீஷா ராஜுவிற்கு மட்டும் ஓவிய ஆர்வம் இருந்ததால் அவரது அப்பா அவரை ஓவியம் கற்க உற்சாகப்படுத்தினார். மனீஷா ராஜுவை கலை பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள கலை ஆசிரியர்கள் வரைவதையும், வண்ணத்தை பயன்படுத்தும் விதத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவிய வகுப்புகளில் பயிற்சிக்கு அனுப்பினார். கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு, மனித வளத்தில் எம்.பி.ஏ, பொது நிர்வாகத்தில் முதுகலை முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் சாந்திநிகேதனில் பயின்றவரும் அபனேந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளுடன் பழகியவருமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரின் அறிமுகம் மனீஷா ராஜுவிற்கு கிடைத்தது. தேஷ்முக் அளித்த ஊக்கத்தால் அவர் ஸ்டுடியோவிற்கு சென்று சிற்றோவியங்கள், டெம்பரா ஆக்கங்கள் செய்து பார்த்தார். மனீஷா ராஜு ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர்.

சோழமண்டலம்

பிறகு நாக்பூர் கலைக் கல்லூரியில் படித்தவரான ஓவியர் ராஜு துர்ஷெட்டிவாலாவை திருமணம் செய்து கொண்டார். ராஜு துர்ஷெட்டிவாலா சென்னை சோழ மண்டலம் கலை கிராமத்தில் தங்கியிருந்து படைப்பு முயற்சிகள் செய்து கொண்டிருந்ததால் மனீஷா ராஜுவும் அவருடன் இணைந்து கொண்டார். சோழமண்டலத்தின் தலைவர் சேனாதிபதியின் வீட்டின் மேல்தளத்தில் இருவரும் வாடகைக்கு குடியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் சோழமண்டலத்தின் முக்கிய கலைஞர்களான சேனாதிபதி, கோபிநாத், நந்தன், டக்ளஸ், வெங்கடபதி போன்ற பலருடன் நேரடியாக உரையாடவும் கலைஞர்களின் படைப்புகளை பார்க்கவும் கலைக் கூடங்களுக்கு செல்லவும் மனீஷா ராஜுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை கலைஞர்களான கே.சி.எஸ்.பணிக்கர், ரெட்டப்ப நாயுடு, பாரிஸ் விஸ்வநாதன், கோபிநாத், பி. எஸ். நந்தன், சி. டக்ளஸ், ஜானகிராமன், எஸ். தனபால், சந்தான ராஜ், கே. வி. ஹரிதாசன், முனுசாமி, வெங்கடபதி போன்ற கலைஞர்களின் படைப்புகளை மிகவும் விரும்பினார். கே. சி. எஸ். பணிக்கரை பெரிய ஆளுமை என்று குறிப்பிட்ட மனீஷா ராஜு நாம் பயில்வதற்கான பல விஷயங்கள் கே. சி. எஸ். பணிக்கரின் படைப்பிலும் ஓவியர் சந்தானராஜ் படைப்பிலும் உள்ளன என்றார். சோழமண்டலத்தின் கலைஞர்கள் சங்கமான PPA- Progressive Painting Association-ல் உறுப்பினராக இருந்தார். கணவர் ராஜுவும் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்த அனுபவங்கள் மனீஷா தன்னை வளர்த்துக் கொள்ளவும் முழுநேர ஓவியராக மாறவும் தூண்டுதலாக இருந்தது. தொடர்ந்து நீர்வண்ணம்(water color), வண்ணக்குச்சிகள்(pastels), அக்ரிலிக்(acrylic) போன்ற பல ஊடகங்களை(medium) பயன்படுத்தி பயிற்சிகளில் ஈடுபட்டார். மனீஷா ராஜுவின் முதல் குழு கண்காட்சி 2002 ஆம் ஆண்டு நடந்தது. 2004-ல் முதல் தனிநபர் கண்காட்சி சி பி ராமசாமி அறக்கட்டளையின் நந்திதா கிருஷ்ணாவின் ஏற்பாட்டில் நடந்தது.

முழுநேர ஓவிய கலைஞர்

1997 முதல் 2002 வரை தன் முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டார். அதற்காக நாக்பூருக்கு அவ்வப்போது பயணம் செய்தார். பிறகு சென்னையில் ஒரு கல்லூரியின் மேலாண்மை பிரிவில் பேராசிரியராக 4 வருடங்கள் பணியாற்றினார். 2008ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர ஓவியரானார்.

அழகியல்

மனீஷா ராஜு நீர்வண்ணம்(water color on paper), வண்ணக்குச்சிகள்(pastels), கேன்வாசில் அக்ரிலிக்(acrylic on canvas) போன்ற ஊடகங்களை(medium) பயன்படுத்தி ஓவியம் வரைபவர். தான் பயன்படுத்தும் ஊடகங்களில் வண்ணக்குச்சிகள்(pastels) தனக்கு அணுக்கமானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனீஷா ராஜுவின் படைப்புகளில் பெரும்பாலும் புராணா இதிகாச கதைகளின் பாத்திரங்கள், பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், பக்தி மரபு சார்ந்த ஆளுமைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிறு வயதில் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச கதைகளும் சென்னை வந்த பிறகு அக்கதைகளை திரும்பவும் நினைவுபடுத்தும் அவர் சென்ற சிதம்பரம், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில் உள்ள கருங்கல் சிற்பங்களும் மனீஷா ராஜுவின் ஓவியங்களில் பிரதிபலிக்கின்றன. மனீஷா ராஜுவின் ஆரம்பகால ஓவியங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கை சித்தரிப்புகள் பெருமளவில் இடம்பெற்றன. மனீஷா ராஜு நாக்பூர் என்ற சிறு நகரில் இருந்து திருமணத்திற்கு பிறகு சென்னை என்ற பெருநகருக்கு குடிபெயர்ந்ததால் இங்குள்ள பரபரப்பான வாழ்க்கை புதிய சூழல் எல்லாம் அவரை தனிமை, சுய தேடல் நோக்கி திருப்பியது. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் மற்ற வேலைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கென்று அளிக்கவில்லை என்று மனீஷா ராஜு உணர்ந்ததால் சுய தொடர்பு(self connection), சுய உரையாடல்களுக்கு(self discussion) முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் குழந்தைகள், அம்மா-குழந்தை, சகோதரிகள், மக்களுடன் உரையாடுவது, தங்களுக்குள் உரையாடுவது போன்ற பேசு பொருள்களில் நிறைய பெண் ஓவியங்களை 2007 வரை தொடர்ந்து வரைந்தார். அக்காலத்தில் ஜோதிடம் ஜாதகம் பற்றி படித்து கொண்டிருந்ததால் அதை படைப்பில் கொண்டு வர விரும்பினார் மனீஷா ராஜு. அதன் பலனாக 2007-ல் 'நவக்கிரகா' என்ற தலைப்பில் அக்ரிலிக் ஓவியங்களின் தனிநபர் கண்காட்சியை நடத்தினார். அது முதல் புராண இதிகாச விஷயங்கள் கடவுள்கள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் வர ஆரம்பித்தது.

சிவப்பு நிறம் மனீஷா ராஜுவின் ஓவியங்களில் மிகுதியாக உள்ளன. சிவப்பு நிற உருவங்கள், சிவப்பு நிற பூக்கள், நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கூடிய பெண்முகங்கள், சிவப்பு நிறப்பின்னணி ஆகியவை மனீஷா ராஜு படைப்புகளின் அடையாளமாக உள்ளது. பெண் உருவங்களை ஆதிக்கம் நிறைந்த சிவப்பு-மஞ்சள் நிறத்தில் சித்தரிக்கும் போது ஆண் உருவங்களை குளிர்ந்த நீல நிறம், ஊதா, பச்சை நிறங்களில் சித்தரித்துள்ளார். மனீஷா ராஜுவிற்கு பிடித்தமான அர்த்தநாரீஸ்வரர் ஓவியங்களில் சக்தியின் உருவப்பகுதி சிவப்பு நிறத்திலும் சிவனின் உருவப்பகுதி நீல ஊதா நிறத்திலும் இருக்கிறது. பல ஓவியங்களின் பின்னணியிலும் சிவப்பு-மஞ்சள் நிறத்தையும் அதை சமன் செய்யும் விதத்தில் நீலம், ஊதா, பச்சை போன்ற நிறங்களையும் பயன்படுத்தி உள்ளார். மனீஷா ராஜுவிற்கு சக்தி வழிபாட்டில் உள்ள ஈடுபாடும் அவர் வழக்கமாக வழிபடும் ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோவில் போன்ற தமிழ்நாட்டின் சிறு தெய்வ அம்மன் கோவில்களில் காண கிடைக்கும் மஞ்சள் குங்குமத்துடன் கூடிய அம்மன் அலங்காரமும் அவர் விரும்பி பார்க்கும் தமிழ் அம்மன் திரைப்படங்களும் அவரது ஓவியங்களில் உள்ள சிவப்பு-மஞ்சள் நிறத்திற்கு பின்புலமாக இருக்கிறது.

மனீஷா ராஜு பகவத் கீதை போன்ற தத்துவ நூல்களில் ஈடுபாடு உடையவர். ஓஷோவின் நூல்களை விரும்பி படித்திருக்கிறார். சென்னை வந்த பிறகு தமிழ் மரபு மற்றும் பக்தி கதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்தார். அவர் கண்ணகி, ஆண்டாள், அக்கமாதேவி, கபீர் முதலியவர்களின் கதைகளை வாசித்ததில் ஆண்டாளை அணுக்கமாக உணர்ந்ததால் ஆண்டாளை மையமாக கொண்ட பல ஓவியங்களை வரைந்துள்ளார். மனீஷா ராஜு தன் படைப்புகளில் இருக்கும் பெங்காள் கலைப் பள்ளியின் செல்வாக்கு தனக்கு நாக்பூரில் அறிமுகமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரிடமிருந்து வந்தது என்று கூறியிருக்கிறார். தாதாசாகெப் தேஷ்முக் சாந்திநிகேதனில் பயின்றவர். அபனேந்திரநாத் தாகூர் போன்ற பெங்காள் கலை பள்ளி ஆளுமைகளுடன் நேரடியாக பழகியவர். மனீஷா ராஜுவின் தேடல் அவர் சிறுவயதில் கேட்ட புராண இதிகாச கதாபாத்திரங்களின் ஞாபகங்களுக்கும் அந்த ஞாபகங்களை திரும்பவும் நினைவு படுத்தும் தமிழக தென்னிந்திய கோவில் கற்சிற்பங்களுக்கும், சிறுதெய்வ அம்மன் கோவில்களுக்கும், அவர் பார்த்த அம்மன் திரைப்படங்கள், அவர் வாசித்த புராண கதைகள், பக்திமரபை சேர்ந்தவர்களை நோக்கி கொண்டு சென்றன. இவற்றின் கூறுகள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் உள்ளது.

அவரது ஓவியங்களில் கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதை போன்ற கடவுள்கள் பெண் முகங்கள் உருவங்கள் ஆகியவை சுய தேடலையும் தன்னை தானே ஆழ்ந்து நோக்குவதையும் அதன் மூலம் இந்த பௌதிக உடலின் தோற்றம் மற்றும் முடிவையும், ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் முடிவும் வரம்பும் அற்ற அழியாத ஆத்மாவின் இருப்பை உணர்ந்து கொள்வதற்கும் அந்த ஆத்மாவுடன் சிறிது நேரமாவது உரையாட வேண்டியதன் தேவையையும் குறிப்பதாகும் என்று மனீஷா ராஜு குறிப்பிட்டிருக்கிறார். மனீஷா ராஜு தன் படைப்புகள் பற்றி "ஓவியம் என்பது ஒருவரின் நிஜ உணர்வு, எண்ணங்கள் மற்றும் கற்பனையின் வெளிப்பாடாகும். எனது படைப்புகளை எக்காரணம் கொண்டும் சிக்கலாக்கவும் அதன் அமைதியை திசைதிருப்பவும் விரும்பவில்லை. படைப்பை பார்க்க வரும் பார்வையாளனை குழப்பி வெறுமனே மனப்பயிற்சி அனுபவம் மட்டும் அளிக்காமல் எளிமையான வழியில் பார்ப்பவருக்கு ஆறுதலை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

கலைத்துறையில் இடம்,

விவாதங்கள்

கலைஞர்களுக்காக கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கலைஞர்களால் வழிநடத்தப்பட்ட சோழமண்டலம் கலை கிராமத்தின் அமைப்புமுறையை முன்மாதிரியாக கருதும் மனீஷா ராஜு கே. சி. எஸ். பணிக்கர் போன்ற ஒருவரின் சரியான தலைமை இல்லாததாலும் இன்றைய கலைஞர்களுக்கு அமைப்புகளின் தேவை ஏற்படாததாலும் கலைஞர்களுக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மை காரணமாகவும் மும்பை, பூனே, டெல்லி, பரோடா முதலிய இடங்களில் உள்ளது போல சென்னையில் கலைஞர்களின் வலுவான கூட்டமைப்புகள் இன்று இல்லை என்று கூறினார்.

விருதுகள்

பங்கெடுத்த ஓவிய முகாம்கள்

கண்காட்சிகள்

தனிநபர் கண்காட்சிகள்

2021   Nostalgia by Forum Art Gallery, Chennai

2017    kalakriti Art Gallery, Hyderabad

2015    Swayamsiddha, A Gallery opening show for Ambrosia Art Gallery, Chennai

2011    Tathagata, Prakrit Arts Gallery, Chennai

2009    “Stuthi”, Prakrit Art Gallery Chennai

2008    ‘Re-Visited’, Sri Parvathy Arts Gallery, Chennai

2007    ‘Navagraha’ Prakrit Arts Gallery, Chennai.

2004     ‘Search for self’ Solo Show at CPR Art  Gallery, Chennai

2006    ‘Nostalgia’ Kasthuri Shrinivasan Art Gallery, Coimbatore.

2004    ‘Search for self’ Solo Show at Ananya Art Gallery, Pondicherry


Two Person Show ( India)

2011   Pratyaksha –Paroksha, at CISFA ki choti Gallery, Nagpur

2005    ‘Foot Steps of Time’, at Dakshinachitra Art Gallery, Chennai

Online Exhibition during Pandemic

2021  Un-Lock  Series 17.1 (Solo Show) by Sarala Art Gallery, Chennai

2021  Quiescent II, (Group Show )

2021  Vishwam, by Vasant Rao Curation Project

2021  Dare to Dream, by Art Cube Gallery, Bagalore

2020  Panchali, by Vasant Rao Curation Project

2020  Nature (Group Show) , by Veda Art Gallery, Chennai

2020  Quiescent I, (Groups Show)


Group Shows ( India)

2022  Games people play, by Forum Art Gallery, Chennai

2020  Talking Spaces at Forum Art Gallery, Chennai

2019    Identity & Experience at Forum Art Gallery , Chennai

2019    Gnani Art Gallery, Singapore presented by Forum Art Gallery Chennai

2018    Kadamba Show in Forum Art Gallery ,Chennai

2017    Artitude at Art Houz, Chennai

2017    Artitude at WestIn hotel, Chennai

2017    In house show at Forum art gallery Chennai

2017   In house show at Veda Art Gallery

2017    Fusion, Organized and curated  by Dimples Art Gallery Chennai

2016   Show organized by Asian Art Gallery, US

2016   In house show organize by Veda Art gallery in Hayaat, Chennai

2016   Show organized by Vinyasa Art Gallery

2016   small format exhibition by Cholamandal

2016     Visible Visages organized by Veda Art Gallery, Chennai

2015   Plethora of Gods, at Forum Art Gallery, Chennai

2015    Show organized by Spastics society of India, Art Houz Gallery Chennai

2015    Small format exhibition by Cholamandal

2015    Ganesha Show at Ambrosia Art Gallery, Chennai

2014    The ai-Smile, Women Artist’ show, charity gala at Hyaat , Chennai

2014    Sapthas , group show by Chennai women artists at KST Gallery, Coimbatore

2013    Women artists, exhibition at Vinyasa Art gallery, Chennai

2011    Kamalini show with artist at Prakrit Arts Gallery on the occasion of International    women’s day.

2011   Panchatantra in participation with five artists at Laburnum & Indigo Galleries at  Cholamandal Artists ’village Chennai.

2010    “Panchamukhi” group show by five Chennai woman artists at Vernissage Art Gallery,       Cochin

2009    “Diverse Phrase” in participation with five artists at Kasthuri Srinivasan Arts Gallery,                     Coimbatore

2009    “Panchamukhi” group show by five Chennai woman artists at Kasthuri Srinivasan Arts     Gallery, Coimbatore

Shows in Participation( abroad)

2016   Show at Singapore by Art Houz gallery, Chennai

2011    Samay, organized by Prakrit Arts Gallery, Chennai at Neharu Arts center, London

2011    Lafz, organized by Krishala Arts Gallery, Bangalore

2011    Invite show at Malaysia by Lakshana Arts gallery

2010    Size - S, organized by Prakrit Arts and Krishala Art Gallery, at Neharu Arts Center London

2010    Madras Canvas, organized by Forum art gallery Chennai at Kula Lumpur


Shows in Participation ( India)

2018    Show organized by c4c for flood relief Kerala, Chennai

2017    Participation Show in Forum Art Gallery

2016   Participation show in Forum Art Gallery

2016    Participation show in Veda Art Gallery

2016    Participation show in Forum Art Gallery

2016    Participation show in Veda Art Gallery

2015    Shloka – organized and arranged by Lokaat Art Gallery, Nagpur, MS

2015   Progressive Painters Association Show at Laburnum and Indigo Art Galleries

2015    Eternal Enlightenment – show on Goutam Buddha at Ailamma Art Gallery, Hyderabad

2015   Padme – show on lotus at Forum Art gallery, Chennai

2015    Show on Ganesha at Ambrosia Art Gallery, Chennai

2015    Show by Concern India Foundation at ITC Chola

2015    Show by Spastics Society of India Show at Art Houz

2014    Progressive Painters Association Show at Forum Art gallery, Chennai

2014    Progressive Painters Association Show at Laburnum and Indigo Art Galleries

2014   Small format exhibition at Vinyasa Art Gallery, Chennai

2014   Art for Concern by Concern India Foundation, ITC Grand Chola, Chennai

2013   Small Format Annual Art Exhibition at Cholamandal Art Gallery, Chennai

2013    Resist – art exhibition at Forum Art Gallery, Chennai

2013   Madras musing, Veda Art Gallery, Chennai

2013   Contemporary small format exhibition at Time & Space Gallery, Bangalore

2013   Group Show at Forum Art Gallery, Chennai

2013    1 X 1 of Its kind, PPA Show at Forum Art Gallery

2012   Show organized by Anand Vikatan at Lalit Kala Akademi, Chennai

2011    Basant Panchami, by Prakrit Arts Gallery, Chennai

2011    PPA Cholamandal Exhibition, Cholamandal Art Gallery Chennai

2011    KCS Panikers celebration at part of Art Chennai  at Cholamandal Art Gallery, Chennai

2010   Cholamandal Show at Cholamandal arts Gallery, Chennai

2010     Preview Show, lonavala Pune

2010    “Fusion” at Hotel Taj, Bangalore organized by Krishala Art, Bangalore

2010     Artist Handicraft Association, Cholamandal Art Gallery Chennai

2009   ‘Art fusion Show’ Neharu art Centre, Mumbai

2009    PPA Art Exhibition at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore

2009    PPA Art Exhibition, Laburnum & Indigo wing Cholamandal Art Gallery Chennai

2009    Serenity to Womanhood, by Forum Art Gallery, Chennai

2009    Madras Canvas in short, by Forum Art Gallery Chennai

2008   Chola Sherton, by FROZEN, social organization, Chennai.

2008    ‘Double take’ by Prakrit art gallery, chennai

2008    ‘Madras Canvas’ by Forum art Gallery, Chennai.

2008   Lalit Kala Academy by Pallava artist Village, Chennai

2008    Apparao Galleries Chennai and Delhi

2008    Affordable Art Show by Vinyasa art gallery, Chennai

2008    ‘Between the Lines’ an art shows organized by Art. Here. Now, at Lalit Kala  Academy, Chennai

2007    ‘Southern Metaphor’ at Prakrit Arts Gallery, Chennai.

2005     ‘Affordable Art Show’ by Vinyasa Art Gallery at Chitrakala Parishad, Bangalore.

2004    Concern India Foundation, Sunder Mahal Chennai

2004    Royal Academy “Ganesha Show”, Gulbarga, Karnataka.


National exhibition

2011    South Central Zone Cultural Center, Nagpur, Maharashtra

Auction

2015   Spastics Society of India, Chennai

2010     Confluence, art Auction by Prakrit Arts Chennai

2008    ‘Gems 2008’ an auction organized by MSSI, Park Sherton, Chennai


Art Fair

2014    Art Chennai at Cholamandal Gallery, Cholamandal Artist Village, Chennai

2014    Art Mela organized by Sarala Art Center, Chennai at Cholamandal Artists’  Chennai

2012    Art Chennai , Cholamandal Gallery, Cholamandal Artists Village, Chennai

2008    ‘Kala Mela’ organized by Lalit Kala Academy, Chennai


Camp

2019    National camp by Lalit Kala Academi, at Wardha, MS

2017    Camp organized by Integral Coach Factory for museum at ICF Chennai

2012    Camp organized by Prakrit arts Gallery, Chennai at Bhedaghat, MP


Social contribution through Art

2019    Wall painting for beautification of Gandhi Sarovar Lake, Nagpur, MS

2018    lamp making workshop for tribal children in Gadchiroli, MS in association with Ambuja    Cements

2017    Workshop For Tribal Children on Gond Art, on school walls , organized by Ambuja           Foundation in Gadchiroli, MS

2015    Camp organized by me on the occasion of International women’s day under the banner of Prangan in Chennai, Participating Artists 10 from Chennai and Nagpur ;

2014    Work shop on wall-Painting for rural school students organized by Ambuja cement         Chandrapur, Maharashtra

Open Studio

2020    Open Studio In and around Cholamandal Artist Village, Chemmai

2018    Open Studio at Cholamandal Artist Village, Chemmai

Lectures and Interaction

2015    Govt. College of Arts , Nagpur, MS

2017    Govt. College of Arts, Nagpur, Maharashtra

நூல்கள்

இணைப்புகள்

https://www.newindianexpress.com/cities/chennai/2011/nov/14/reaching-out-to-the-spiritual-side-through-art-310154.html

https://www.newindianexpress.com/cities/chennai/2017/jul/22/her-journey-flows-like-pastels-on-canvas-1631818.html

https://www.thehindu.com/entertainment/art/manisha-rajus-works-are-based-on-women-and-the-female-energy/article19923942.ece

https://www.thehindu.com/features/friday-review/art/Paen-to-women/article16882150.ece?homepage=true

https://www.youtube.com/watch?v=hrfKhsCK8uA

https://www.youtube.com/watch?v=3_-V1IPARis

https://www.youtube.com/watch?v=blbMoAJfOAQ