மதுரை சமணப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்

From Tamil Wiki
Revision as of 23:48, 1 March 2022 by Navingssv (talk | contribs) (Created page with "மதுரையில் சமணமலையின் (எண்பெருங்குன்றம் மலைகளுள் ஒன்று) இருக்குன்றுகளிலும் சமணசமயக் குரவர்களான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் வாழ்ந்ததற்கான சான்றுகள் இங்குள்ள கல்வெ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரையில் சமணமலையின் (எண்பெருங்குன்றம் மலைகளுள் ஒன்று) இருக்குன்றுகளிலும் சமணசமயக் குரவர்களான ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் வாழ்ந்ததற்கான சான்றுகள் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண முனிவர்களும் கர்நாடகத்தைச்(சரவணபெளகோளாவிலிருந்து) சேர்ந்த முனிவர்களும் இங்கு வந்து தங்கியுள்ளனர். இதில் பாண்டிய நாட்டு குறண்டி மலைப் பள்ளியில் வந்த சமணக்குரவர்களின் மாணவர்களே இங்கு அதிக அளவில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். ஆனால் இவர்களது சங்கம், கணம், கச்சம், அன்வயம் போன்ற சமணர்களுக்கு உரிய பிரிவுகள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் தேவர், படாரர், அடிகள், பெரியடிகள், பண்டிதர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள்

மாணவர்கள் தம் ஆசிரியரின் வழிமுறையோடு குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் மாணாக்கர், சட்டன் என்று குறிப்பிடப்படுகின்றனர். இங்கு மாணவர்களாக இருந்தவர்கள் பின்பு இப்பள்ளியின் ஆசிரியராக மாறியுள்ளனர்.

குறண்டி அஷ்டோபவாசிபடாரர்

குறண்டி அஷ்டோபவாசி படாரரின் இரண்டு மாணவர்கள் முக்கியமானவர்கள். குணசேனதேவரும், மகாணந்திப் பெரியாரும் இப்பள்ளியின் மூத்த சமணக்குரவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் குணசேனதேவரின் மாணவர்களே இப்பள்ளியில் அதிக அளவில் இருந்துள்ளனர்.