under review

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்: Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Corrected text format issues)
 
Line 26: Line 26:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்]

}
}
{{Finalised}}
{{Finalised}}
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:48, 3 July 2023

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

எண்வகைக் கூலத்தோடு உணவாகிப் பயன்படும் பிறபொருள்களையும் சேர்த்து "பண்டம்" என்றழைத்தனர். பண்டவாணிபம் இக்காலத்தைய பலசரக்கு கடை போன்றது. இளந்தேவனார் மதுரை பெருங்கடைத்தெருவில் பலசரக்குக் கடை வைத்து வாணிபத்தொழில் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இளந்தேவனார் பாடிய பாடல் நற்றிணையில்(41) பாலைத்திணைப் பாடலாக உள்ளது. பிரிவு ஆற்றாளாகிய தலைமகளுக்கு தோழி உலகியலை எடுத்துக் கூறுவதாக பாடல் அமைந்துள்ளது. அகநானூற்றில் (58) குறிஞ்சித்திணைப்பாடலாக உள்ளது. தலைமகனுக்கு தலைவி கூறியதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

  • நற்றிணை 41

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.

  • அகநானூறு 58

நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.

உசாத்துணை

} ‎

✅Finalised Page