standardised

மதனகல்யாணி சண்முகானந்தன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 44: Line 44:
== விருதுகள், சிறப்புகள் ==
== விருதுகள், சிறப்புகள் ==
[[File:Madanakalyaniaward.jpg|thumb|Thamizhnandhi.blogspot.com]]
[[File:Madanakalyaniaward.jpg|thumb|Thamizhnandhi.blogspot.com]]
 
[[File:Silappathikaram.jpg|thumb|https://muelangovan.wordpress.com/]]
[[File:Chevalier.jpg|thumb|செவாலியே மற்றும் ஒபீசியே விருது]]
* கலைமாமணி விருது (புதுவை அரசு -2003)
* கலைமாமணி விருது (புதுவை அரசு -2003)
[[File:Chevalier.jpg|thumb|செவாலியே மற்றும் ஒபீசியே விருது]]
* மதனகல்யாணியின் பணிகளைப் பாராட்டி பிரெஞ்சு அரசு 2002-ல் ஷெவாலியே விருது அளித்தது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒஃபிஸியே விருதை 2011 ல் அளித்தது. ஒபீசியே விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவரேயாவார்.
* மதனகல்யாணியின் பணிகளைப் பாராட்டி பிரெஞ்சு அரசு 2002-ல் ஷெவாலியே விருது அளித்தது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒஃபிஸியே விருதை 2011 ல் அளித்தது. ஒபீசியே விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவரேயாவார்.
* Diplôme de MENTION SPECIALE: L’ACADEMIE DE PROVENCE- 1995 – France
* Diplôme de MENTION SPECIALE: L’ACADEMIE DE PROVENCE- 1995 – France
* PRIX D’HONNEUR: L’ACADEMIE DE PROVENCE- (France) 1995- புதுச்சரி நாட்டுப்புறக்கதைகள் (பிரஞ்சு)
* PRIX D’HONNEUR: L’ACADEMIE DE PROVENCE- (France) 1995- புதுச்சரி நாட்டுப்புறக்கதைகள் (பிரஞ்சு)
* PREMIER ACCESSIT: Grand Concours littéraire International – 1999, L’ACADÉMIE …DE PROVENCE- FRANCE.
* PREMIER ACCESSIT: Grand Concours littéraire International – 1999, L’ACADÉMIE …DE PROVENCE- FRANCE.
* மணிக்கவி மஞ்ஞை – பாராட்டு நன்மங்கலம் – உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992
* மணிக்கவி மஞ்ஞை – பாராட்டு நன்மங்கலம் – உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992
* சிறந்த எழுத்தாளர் விருது – 1996 – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் – புதுச்சேரி மாநிலக்கிளை
* சிறந்த எழுத்தாளர் விருது – 1996 – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் – புதுச்சேரி மாநிலக்கிளை
*தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – நற்சான்றிதழ் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு – 2002 கோலாலம்பூர்(மலேசியா),
*தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – நற்சான்றிதழ் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு – 2002 கோலாலம்பூர்(மலேசியா),
* பாராட்டிதழ் – தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி
* பாராட்டிதழ் – தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி
* பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் – 1990 – புதுச்சேரி
* பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் – 1990 – புதுச்சேரி
* பாராட்டிதழ் – புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் – 1999 – புதுச்சேரி
* பாராட்டிதழ் – புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் – 1999 – புதுச்சேரி
* பாராட்டிதழ் – பாவேந்தர் பாசறை – 2003
* பாராட்டிதழ் – பாவேந்தர் பாசறை – 2003
Line 68: Line 62:


== படைப்புகள் ==
== படைப்புகள் ==
[[File:Silappathikaram.jpg|thumb|https://muelangovan.wordpress.com/]]


* கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்
* கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்

Revision as of 18:51, 25 April 2022

மதனகல்யாணி சண்முகானந்தன் (அக்டோபர் 5, 1938) புதுவையைச் சேர்ந்த தமிழ் மற்றும் பிரெஞ்சு அறிஞர். பிரான்சு நாட்டின் மிக உயரிய விருதுகளான 'ஒபிசியே' மற்றும் 'செவாலியே' விருதுகளைப் பெற்றார்.பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். தமிழ், ஆங்கிலம்,பிரெஞ்சு மூன்று மொழிகளிலும் பெரும் புலமை பெற்றவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தார்.லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்து ஓய்வு பெற்றார். புதுவை அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மதனகல்யாணி சண்முகானந்தன் அக்டோபர் 5, 1938 அன்று புதுச்சேரியில் காவல்துறை ஆணையர் செ. கிருட்டிணசாமி, கி. இராசாம்பாள் தம்பதிகளுக்கு மகளாகப்பிறந்தார். பள்ளிக்கல்வியை புதுச்சேரியில் பயின்றார். பாரிஸ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1958-ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார் ( BACCALAURÉAT) DIPLÖME DE BACHELIER DE L’ENSEIGNEMENT SECONDAIRE (UNIVERSITY OF PARIS).1974-ஆம் வருடம் சென்னைபல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.முதுகலை பிரஞ்சு (MASTER OF ARTS: FRENCH ) பட்டத்தை கர்நாடகப் பல்கலைக்கழகமத்தின் ( தார்வார்) வாயிலாகப் பெற்றார்.

தமிழையும் பிரெஞ்சு மொழியையும் போதிக்க பின்வரும் சான்றிதழ்கல்விப் பட்டயங்களைப் பெற்றார்..

  • பிரஞ்சு மொழியை அயல்நாட்டார்க்குக் கற்பிக்கும் முறை-(DIDACTIQUE DU FRANÇAIS LANGUE ETRANGÈRE, CREDIF), ப்ரோவான்ஸ் பல்கலைக்கழகம், 1982 (பிரான்சில் சென்றெடுத்த பயிற்சி) – தமிழ் கற்பிக்கவும்; பயன்பட்டது)
  • கணினி வாயிலாகப் போதித்தல்; (INFOR MATIQUE ET PÉDQGOGIE) France: L’ IDEN en résidence à Pondichéry, 1989
  • வகைப்படுத்துதல் போதனாமுறை – (PÉDAGOGIE DIFÉRENCIÉE – Ambassade de France en Inde) – 1993
  • கல்லூரிகளில் போதனாமுறையைத் திருத்தி அமைத்தல்(RENOVATION PÉDAGAOGIQUE DES LYCÉES (Ambassade de France en Inde) – 1993
  • கேட்சி – காட்சிக் கல்வி (UTILISATION DES MOYENS AUDIOS -VISUELS ET INTÉGRATION-Ambassade de France en Inde) – 1993
  • பள்ளியும் குடியுரிமையும் (ECOLE ET CITOYENNETE – Agence pour l’enseignement français à l’étranger) – 1998

தனி வாழ்க்கை

மதனகல்யாணி தன் கணவர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி திரு.த. சண்முகானந்தனுடன் புதுவையில் வசிக்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

கல்விப் பணி

புதுச்சேரியில் பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றினார்..பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தார்.

இலக்கியப் பணி,மொழியாக்கம்

muelangovan.wordpress.com
நன்றி:க்ரியா பதிப்பகம்
பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்த நூல்கள்

ஆல்பெர் காம்யுவின் La Peste’ நாவலை ‘கொள்ளை நோய்’ என்ற தலைப்பில் தமிழில் மொழியக்கம் செய்தார்.

பல்சாக் படைப்பான Le pero Goirot என்ற நாவலை ‘தந்தை கொரியோ’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார்.

புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு (ழெரார் துய்வால்)

குட்டி இளவரசன் (Le Petit Prince by Antoine de Saint-Exupéry)

தமிழிலிருந்து பிரெஞ்சில் மொழியாக்கம் செய்த நூல்கள்

எழுத்தாளர் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார்.

'புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்கள்' என்ற தலைப்பில் 200 பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளிலும் வெளியிட்டார்.

இவரது ‘புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை பிரான்ஸின் புகழ்வாய்ந்த பதிப்பகமான கர்த்தாலா (Karthala) வெளியிட்டது.

பிரெஞ்சு அறிந்த சிறுவர்களுக்காக சிலப்பதிகார நூலின் சுருக்கத்தைப் படங்களுடன் வெளியிட்டார்.

பாரதியார் பாடல்கள் பலவற்ரை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சிறுத்தொண்டர் புராணம்,சாக்கியர் புராணம் ஆகியவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சில் மொழியாக்கம் செய்த நூல்கள்

Les aspects de la culture Tamij (The aspects of Tamil culture by Dr. KOTHANDARAMAN, Former Vice – Chancellor of Chennai University)

கோதலூப், மொரீசியஸ், ரீயூனியன் தீவுகளில் வாழும் பிரெஞ்சு பேசும் தமிழ்மொழி அறியாத தமிழர்கள் மாரியம்மன் தாலாட்டு, மதுரைவீரன் அலங்காரச் சிந்து முதலியவற்றை இசையோடு ஆனால் பொருள் தெரியாமல் பாடினார்கள். அவர்களுக்காக பிரெஞ்சு மொழியில் இரண்டு நூல்களை எழுதினார்.

விருதுகள், சிறப்புகள்

Thamizhnandhi.blogspot.com
செவாலியே மற்றும் ஒபீசியே விருது
  • கலைமாமணி விருது (புதுவை அரசு -2003)
  • மதனகல்யாணியின் பணிகளைப் பாராட்டி பிரெஞ்சு அரசு 2002-ல் ஷெவாலியே விருது அளித்தது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒஃபிஸியே விருதை 2011 ல் அளித்தது. ஒபீசியே விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவரேயாவார்.
  • Diplôme de MENTION SPECIALE: L’ACADEMIE DE PROVENCE- 1995 – France
  • PRIX D’HONNEUR: L’ACADEMIE DE PROVENCE- (France) 1995- புதுச்சரி நாட்டுப்புறக்கதைகள் (பிரஞ்சு)
  • PREMIER ACCESSIT: Grand Concours littéraire International – 1999, L’ACADÉMIE …DE PROVENCE- FRANCE.
  • மணிக்கவி மஞ்ஞை – பாராட்டு நன்மங்கலம் – உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992
  • சிறந்த எழுத்தாளர் விருது – 1996 – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் – புதுச்சேரி மாநிலக்கிளை
  • தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – நற்சான்றிதழ் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு – 2002 கோலாலம்பூர்(மலேசியா),
  • பாராட்டிதழ் – தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி
  • பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் – 1990 – புதுச்சேரி
  • பாராட்டிதழ் – புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் – 1999 – புதுச்சேரி
  • பாராட்டிதழ் – பாவேந்தர் பாசறை – 2003
  • நாடகத்துறை சான்றிதழ் – ஜவஹர்லால் நேரு இளைஞர்க் கழகம் – சென்னை கிளை டூ 1976
  • கலைமாமணி விருது (புதுவை அரசு -2003)

படைப்புகள்

  • கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்
  • கவிதை நூல்கள் – ஆராதனை, தூறல்
  • கொள்ளை நூல்
  • குட்டி இளவரசன்
  • தந்தை கொரியோ
  • வீழ்ச்சி

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.