being created

மகரிஷி

From Tamil Wiki
எழுத்தாளர் மகரிஷி

பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; பிறப்பு: மே 1, 1932; இறப்பு: செப்டம்பர், 28, 2019) இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதினார். மின்சாரவாரியத்தில் பணியாற்றியவர். இவரது படைப்புகள் சில, திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.

பிறப்பு, கல்வி

மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உயர்கல்வியை முடித்ததும் மின்சாரவாரியத்தில் வேலை கிடைத்தது.

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

மின்சாரவாரியத்தில் பணிபுரிந்துகொண்டே ஓய்வுநேரத்தில் எழுதினார். இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு எழுதினார். முதல் படைப்பான “பனிமலை” என்னும் நாவல், 1962-ல் வெளியானது. மதுரையைச் சேர்ந்த மீனாட்சி புத்தகநிலையம் இதனை வெளியிட்டது. தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், பத்திரிகைத் தொடர்கள் என்று நிறைய எழுதினார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.