ப. சரவணன்

From Tamil Wiki
Revision as of 17:48, 28 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)

முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.

முனைவர் ப. சரவணன், மதுரை.

வாழ்க்கைக் குறிப்பு

திரு. சு. பழனிசாமி -– ப. அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக மே 14, 1978இல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

விருதுகள்

1. செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011

2. இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012

படைப்புகள்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக நாவல், வரலாற்று நாவல், சரித்திர நாவல், கட்டுரை, பொதுக்கட்டுரை, வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் எனப் பல்வேறு வகைகளில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரின் அனைத்து நூல்களையும் சென்னை கௌரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புனைவு, புனைவல்லாத படைப்புகளின் பட்டியல்
வ.எண் தலைப்பு பக்கங்கள் நூலைப் பற்றி
1 மதுரைக்கோவில் 160 மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய முழு வரலாறு
2 தமிழ் இலக்கியமும் இலக்கணமும் 424 தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியம், நவீனச் சொல்லகராதி வரையிலான படைப்புகள் பற்றிய தொகுப்பு.
3 மோகப்பரணி 104 கவிதைத் தொகுப்பு
4 அன்பின் பூங்கொத்து 112 கவிதைத் தொகுப்பு
5 மேடைக்கூத்து 160 நாடகத் தொகுப்பு
6 வான்டட் (தேடப்படும் குற்றவாளி) 176 க்ரைம் நாவல்
7 குழியானை 366 சரித்திர நாவல்
8 அப்பாவின் கால்கள் 200 தன் வரலாற்று நாவல்
9 நினைவுகளின் பேரணி 240 சமூக நாவல்
10 பழந்தமிழ்க் கட்டுரைகள் 528 இலக்கிய, இலக்கணக் கட்டுரைத் தொகுப்பு
11 நிர்பயா 326 50 சிறுகதைகளின் தொகுப்பு
12 விழிப்புணர்வு 112 25 சிறுகதைகளின் தொகுப்பு
13 ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்) 112 சிறார் இலக்கியம் (மறுஆக்கம்)
14 தெனாலிராமன் (அறிவுசார்ந்த கதைகள்) 80 சிறார் இலக்கியம் (மறுஆக்கம்)
15 இரும்புப் பூக்கள் 160 சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
16 விடுதலைக்கான விலை உயிர் 160 இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
17 டீம் ஒர்க் 208 இணைந்து பணியாற்றுதல் குறித்த தன்னம்பிக்கை நூல்
18 லீடர் 168 பணியாளர் குழுவுக்குத் தலைமையேற்றல் பற்றிய தன்னம்பிக்கை நூல்
19 எது சரி? எது தவறு? 160 மாற்றுக்கல்விக்கான சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள்
20 ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? 160 புத்தக வாசிப்பு குறித்த இன்றியமையாமையை விளக்கும் கட்டுரைகள்
21 சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்) 120 சித்தர்கள் முன்வைத்த மெய்ஞானம் பற்றிய கட்டுரைகள்
22 எல்லோரும் எழுதலாம் 184 புத்தகம் எழுதும் முறை பற்றி விளக்கும் கட்டுரைகள்
23 ஜாலியன்வாலா பாக் (13.04.1919) 72 வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள்
24 சிப்பாய்ப் புரட்சி (29.03.1857) 90 வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள்
25 புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை 160 புலம்பெயர்ந்த தமிழர் நிலையை விளக்கும் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
26 பண்டைய வல்லரசுகள் 176 பழைய அரசியல் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு ஒப்பீடு செய்யும் கட்டுரைகள்
27 பாரதி (வியத்தகு ஆளுமை) 168 பாரதியைப் பற்றிய புதிய சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள்
28 வ.உ.சி. (வியத்தகு ஆளுமை) 136 வ.உ.சி யைப் பற்றிய புதிய பல கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள்
29 தாகூர் (வியத்தகு ஆளுமை) 104 தாகூரைப் பற்றி அறியப்படாத சில தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள்
30 வள்ளலார் (வியத்தகு ஆளுமை) 96 சமய மறுமலர்ச்சிக்கு வள்ளலாரின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள்
31 ஆன்மிகப் புரட்சியாளர்கள் 104 ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்
32 சிந்தனைச் சிறகுகள் 250 இலக்கியம், கலை, வரலாறு குறித்த கட்டுரைகள்
33 சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும் 168 சிறுகதை இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள்
34 புனைவுலகில் அ. முத்துலிங்கம் 198 அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள்.
35 கார்ப்ரேட் கலாச்சாரம் 160 அக்காலம் முதல் இக்காலம் வரை நிறுவனமயமாக்கப்படும் சிந்தனைகள் பற்றிய நூல்
36 நாவல் வரலாறும் சில ஆளுமைகளும் 280 நாவல் இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள்
37 பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்) 140
38 ரத்தப் புரட்சி 160
39 நவீனப் பெண்ணியம் 240
40 தனிமையின் நிழலில் 380
41 இயற்கையின் புன்னகை 400
42 அழியா முகம் 150
43 இருவர் எழுதிய நாட்குறிப்பு 200
44 தமிழக வரலாறு (தொகுதி - 01) 360
45 வழிப்பறி 160
46 ஓவியா 380
47 குறிஞ்சிப்பாட்டு 100
48 கொங்கு நாட்டாரியல் - சிறுவர் பாடல்கள் 64
49 கொங்கு நாட்டாரியல் - கதைகள் 64
50 கொங்கு நாட்டாரியல் - வழிபாட்டு மரபுகள் 76
51 கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள் 76
52 கொங்கு நாட்டாரியல் - ஒப்பாரி 64
53 கொங்கு நாட்டாரியல் - பழமொழிகள் 160
54 கொங்கு நாட்டாரியல் - மந்திரச் சடங்குகள் 88
55 கொங்கு நாட்டாரியல் - மருத்துவமுறைகள் 84
56 கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள் 76
57 நாட்டாரியல் தெய்வங்கள் 128
58 சிற்றிலக்கியம் - மாலை 64
59 பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியம் 143
60 தமிழகக் கோவில் கலை 264
61 நீயும் நானும் 200

இணையத்தில் வெளிவந்தவை

  1. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - வெண்முரசு
  2. எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - மதிப்பீட்டுக் கட்டுரைகள்