ப. சரவணன்

From Tamil Wiki
Revision as of 17:00, 28 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)

முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.

முனைவர் ப. சரவணன், மதுரை.

வாழ்க்கைக் குறிப்பு

திரு. சு. பழனிசாமி -– ப. அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக மே 14, 1978இல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

விருதுகள்

1. செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011

2. இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012

படைப்புகள்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக நாவல், வரலாற்று நாவல், சரித்திர நாவல், கட்டுரை, பொதுக்கட்டுரை, வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் எனப் பல்வேறு வகைகளில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரின் அனைத்து நூல்களையும் சென்னை கௌரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புனைவு, புனைவல்லாத படைப்புகளின் பட்டியல்
வ.எண் தலைப்பு பக்கங்கள் நூலைப் பற்றி
1 மதுரைக்கோவில் 160
2 தமிழ் இலக்கியமும் இலக்கணமும் 424
மோகப்பரணி 104
அன்பின் பூங்கொத்து 112
மேடைக்கூத்து 160
வான்டட் (தேடப்படும் குற்றவாளி) 176
குழியானை 366
அப்பாவின் கால்கள் 200
நினைவுகளின் பேரணி 240
பழந்தமிழ்க் கட்டுரைகள் 528
நிர்பயா 326
விழிப்புணர்வு 112
ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்) 112
தெனாலிராமன் (அறிவுசார்ந்த கதைகள்) 80
இரும்புப் பூக்கள் 160
விடுதலைக்கான விலை உயிர் 160
டீம் ஒர்க் 208
லீடர் 168
எது சரி? எது தவறு? 160
ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? 160
சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்) 120
எல்லோரும் எழுதலாம் 184
ஜாலியன்வாலா பாக் (13.04.1919) 72
சிப்பாய்ப் புரட்சி (29.03.1857) 90
புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை 160
பண்டைய வல்லரசுகள் 176
பாரதி (வியத்தகு ஆளுமை) 168
வ.உ.சி. (வியத்தகு ஆளுமை) 136
தாகூர் (வியத்தகு ஆளுமை) 104
வள்ளலார் (வியத்தகு ஆளுமை) 96
ஆன்மிகப் புரட்சியாளர்கள் 104
சிந்தனைச் சிறகுகள் 250
சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும் 168
புனைவுலகில் அ. முத்துலிங்கம் 198
கார்ப்ரேட் கலாச்சாரம் 160
நாவல் வரலாறும் சில ஆளுமைகளும் 280

இணையத்தில் வெளிவந்தவை

  1. எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் படைப்புகள் தொடர்பானவை - வெண்முரசு
  2. எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் தொடர்பானவை - மதிப்பீட்டுக் கட்டுரைகள்