ப. சரவணன்

From Tamil Wiki
Revision as of 15:21, 28 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)

முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திரு. சு. பழனிசாமி -– ப. அனுசுயா தம்பதியரின் மகனாக மே 14, 1978இல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.