பெரு விஷ்ணுகுமார்

From Tamil Wiki
Revision as of 19:48, 25 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "பெரு விஷ்ணுகுமார் (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1995) தமிழ் கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == பெரு விஷ்ணுகுமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தில் பெருமா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெரு விஷ்ணுகுமார் (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1995) தமிழ் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பெரு விஷ்ணுகுமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தில் பெருமாள்சாமி பாலசரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளி படிப்பை நெய்க்காரப்பட்டியில் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

முதல் கவிதை 2014-ல் கல்குதிரை இதழில் வெளிவந்து. தன் ஆதர்ச கவிஞர்களாக பிரமிள், தேவதச்சன், ரூமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதை தொகுப்பு
  • ழ என்ற பாதையில் நடப்பவன் (மணல்வீடு பதிப்பகம்)
  • அசகவ தாளம் (காலச்சுவடு பதிப்பகம்)

வெளி இணைப்புகள்