புலவர் கே.ரவீந்திரன்

From Tamil Wiki
கே.ரவீந்திரன்

புலவர் கே.ரவீந்திரன் (2 மே 1955) தமிழ் எழுத்தாளர், தமிழிலக்கிய ஆய்வாளர், தமிழிலக்கியச் செயல்பாட்டாளர். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் இலக்கியப்பணியாற்றினார்

பிறப்பு, கல்வி

கன்யாகுமரி மாவட்டம் அருமனை வலியவிளையில் குமாரக்கண் - ஜானகி இணையருக்கு 2 மே 1955ல் பிறந்தார். அருமனை உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்து மதுரை தமிழ்ச்சங்கத்தின் புலவர் பட்டம் பெற்றார். மதுரை காமராஜ் பல்கலையில் தமிழ் பட்டப்படிப்பை முடித்தார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பயின்று இளநிலை ஆய்வாளர் (எம்.பில்) பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

புலவர் கே.ரவீந்திரன் 1982 முதல் 2008 வரை ஊட்டி செயிண்ட் ஜோசப் பள்ளி, ஊட்டி அரசுப்பள்ளி ஆகியவற்றிலும் பின்னர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2009 முதல் 2013 வரை திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஆகிய ஊர்களில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்

இலக்கியப்பணி

புலவர் ரவீந்திரன் மரபுக்கவிஞர். மரபுப்பார்வை கொண்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். தமிழிலக்கிய ஆய்வுகளும் செய்துள்ளார். ஆன்மிகச்சொற்பொழிவாளரும்கூட. இவருடைய வெள்ளிப்பல்லக்கு நாவல் எஸ்.மோகன்குமார் மொழியாக்கத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ளது

நூல்கள்

மரபுக்கவிதை
  • வாமனர் தமிழ்மாலை
  • திர்பரப்பு மகாதேவர் விருத்தம்
ஆய்வு
  • குமரியில் கம்பர்
  • சங்கத்தமிழும் தமிழர் சமயமும்
  • அகில ஒளி ஐயா வைகுண்டர்
நாவல்கள்
  • வயல்காடு
  • வெள்ளிப்பல்லக்கு
  • காட்டுமுல்லை
  • மணல்வீடு

உசாத்துணை