under review

புனான்: Difference between revisions

From Tamil Wiki
(Moved the image to a new line in வரலாற்றுக் குறிப்புகள்)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 7: Line 7:
புவா எனப்படும் மூதாதையிலிருந்து புனான் இன வரலாறு தொடங்குவதாக நம்பப்படுகிறது. செகப்பன் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட புவா, ஜாலி அல்லது லப்பான் என அறியப்படும் பெண்ணை மணந்தார். புவாவுக்கு ‘எத்து ஒவா’ எனப்படும் அதீத ஆற்றல் இருந்ததாக நம்பப்படுகிறது. பாஹ் மாவட்டத்துக்குச் சென்று தன் ஆற்றலைக் கொண்டு பாஹ் ஆற்றையும் அதையொட்டி வாழும் புனான் பாஹ் எனப்படும் இனத்தையும் உருவாக்கினார் எனச்சொல்லப்படுகிறது. அவரின் ஆற்றலுக்கு அடையாளமாக பாஹ் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் பாறையொன்று வைக்கப்பட்டிருக்கிறது.

==இனப்பரப்பு==
==இனப்பரப்பு==
[[File:Punan house.jpg|thumb|புனான் இன மக்கள் குடியிருப்பு]]புனான் பெரும்பாலும் சரவாக் பிந்துலு பிரிவில் உள்ள பாண்டன், ஜெலாலாங் மற்றும் காகஸ் ஆகிய இடங்களில் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். ராஜாங் ஆற்றின் அருகே, அவர்களின் குடியிருப்பு பரந்து விரிந்துள்ளன. போர்னியோவின் மையப் பகுதி, ராஜாங் நதி மற்றும் பலுய் பகுதிகளில் செகாபன், கெஜாமன் மற்றும் லஹானன் ஆகியோருடன் சேர்ந்து குடியேறிய ஆரம்பகால மக்களில் புனான் பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் அருகில் இருக்கும் நதிகளின் பெயர்களில் இருந்து இவர்களுக்குப் இப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
[[File:Punan house.jpg|thumb|புனான் இன மக்கள் குடியிருப்பு]]
புனான் பெரும்பாலும் சரவாக் பிந்துலு பிரிவில் உள்ள பாண்டன், ஜெலாலாங் மற்றும் காகஸ் ஆகிய இடங்களில் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். ராஜாங் ஆற்றின் அருகே, அவர்களின் குடியிருப்பு பரந்து விரிந்துள்ளன. போர்னியோவின் மையப் பகுதி, ராஜாங் நதி மற்றும் பலுய் பகுதிகளில் செகாபன், கெஜாமன் மற்றும் லஹானன் ஆகியோருடன் சேர்ந்து குடியேறிய ஆரம்பகால மக்களில் புனான் பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் அருகில் இருக்கும் நதிகளின் பெயர்களில் இருந்து இவர்களுக்குப் இப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
==மொழி==
==மொழி==
[[File:Punan.jpg|thumb|புனான் இன மக்கள்]]புனான் பழங்குடி மக்கள் 'பஹ்-பியாவ்' (Bah-Biau) என்னும் மொழியைப் தாய் மொழியாக் கொண்டுள்ளனர். பஹ் பியாவ் மொழி அஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இம்மொழி செகாபன் (Sekapan) மற்றும் கெஜமான் (Kejaman) பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கு நெருக்கமானது. புனான் மொழியில் Loie Punan Ballu Lole, Punan Lelak Baliu ஆகிய இரண்டு வட்டார வழக்குகள் இருக்கின்றன. இந்த இரண்டு வட்டார வழக்குகளே சிற்சில மாற்றங்களுடன் புனான் இன மக்களிடையே புழங்கிவருகிறது.
[[File:Punan.jpg|thumb|புனான் இன மக்கள்]]
புனான் பழங்குடி மக்கள் 'பஹ்-பியாவ்' (Bah-Biau) என்னும் மொழியைப் தாய் மொழியாக் கொண்டுள்ளனர். பஹ் பியாவ் மொழி அஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இம்மொழி செகாபன் (Sekapan) மற்றும் கெஜமான் (Kejaman) பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கு நெருக்கமானது. புனான் மொழியில் Loie Punan Ballu Lole, Punan Lelak Baliu ஆகிய இரண்டு வட்டார வழக்குகள் இருக்கின்றன. இந்த இரண்டு வட்டார வழக்குகளே சிற்சில மாற்றங்களுடன் புனான் இன மக்களிடையே புழங்கிவருகிறது.
==வாழ்க்கைமுறை==
==வாழ்க்கைமுறை==
புனான் மக்கள் நாடோடிகளாக வாழ விரும்பாதவர்கள். விவசாயம் இவர்களின் பிரதான தொழிலாக இருந்துள்ளது. இவர்கள் மரவள்ளி, சாமை, கரும்பு, புகையிலை போன்ற பல வெப்பமண்டல தாவரங்களை அதிகமாக பயிரிடுவார்கள். விலங்குகளை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மற்றும் வன வளங்களைச் சேகரித்தல் போன்றவைகளும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய காரணியாக இருந்துள்ளது.

Line 15: Line 17:
நெல் சாகுபடி முடிந்ததும் புங்கான் எனப்படும் சடங்கினை புனான் இன மக்கள் மேற்கொள்வர். மோ Mo’a எனப்படும் பாடலைப் பாடித் தங்களுக்குக் கிடைத்த விளைச்சலுக்காக முன்னோர்களுக்கு நன்றி கூறுவர்.

==சமயம்==
==சமயம்==
புனான் பழங்குடியினர் ‘பெசாவிக்’ (Besavik) என்னும் [[ஆன்மவாதம்]] சார்ந்த நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். பின்னர், கென்யா பழங்குடியினரின் வழிப்பாட்டு மரபான ‘புங்கன்’ (Bungan) முறையை கலிமந்தானைச் சேர்ந்த ‘ஜோக் அபுய்’ (Jok Apui) என்பவரின் வழிகாட்டலில் புனான் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். சராவாக் மாநிலத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மிஷினரிகள் மேற்கொண்ட கிறிஸ்துச் சமயப் போதனைகளால் புனான் இன மக்கள் பலரும் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர்.
புனான் பழங்குடியினர் ‘பெசாவிக்’ (Besavik) என்னும் [[ஆன்மவாதம்]] சார்ந்த நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். பின்னர், கென்யா பழங்குடியினரின் வழிப்பாட்டு மரபான ‘புங்கன்’ (Bungan) முறையை கலிமந்தானைச் சேர்ந்த ‘ஜோக் அபுய்’ (Jok Apui) என்பவரின் வழிகாட்டலில் புனான் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். சராவாக் மாநிலத்தில் 19-ம் நூற்றாண்டில் மிஷினரிகள் மேற்கொண்ட கிறிஸ்துச் சமயப் போதனைகளால் புனான் இன மக்கள் பலரும் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர்.
==திருமணச்சடங்குகள்==
==திருமணச்சடங்குகள்==
புனான் இன மக்களின் திருமணம் மணமக்களின் பெற்றோர்களே உறுதிசெய்யப்படுகிறது. மணமகனின் பெற்றோர் மணமகளின் வீட்டுக்குச் சென்று திருமண நிச்சயத்தைச் செய்வர். மணமகள் குடும்பத்தார் திருமணத்தை உறுதி செய்த பின்னர்.திருமண நாளை உறுதிபடுத்துவர். அதன் பின்னர், இரு வீட்டாரும் பராங் இலாங் எனப்படும் குறுவாள், வெற்றிலைத்தாம்பூலம், தட்டுகள், மோதிரம், கோங் தாளக்கருவி ஆகியச் சீர்பொருட்களைத் தயார் செய்வார்கள்

[[File:Keliriang punan 1.png|thumb|[[File:கெலிரியாங் தூண் 2.png|thumb]]கெலிரியங் தூண்]]
==இறப்புச்சடங்குகள்==
==இறப்புச்சடங்குகள்==
[[File:Keliriang punan 1.png|thumb|[[File:கெலிரியாங் தூண் 2.png|thumb]]கெலிரியங் தூண்]]புனான் மக்கள் 50 மீட்டர் உயரத்தில் 'கெலிரியங்' (kelirieng) என்று சொல்லப்படும் ஒரு பரண் உருவாக்கி லாஜர் என்றழைக்கப்படும் தங்களுடைய தலைவர்களை அடக்கம் செய்வார்கள். தற்போது சரவாக்கில் 30க்கும் குறைவான கெலிரியங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கெலிரியங் பெலியான் மரத்தூண்களில் செதுக்கப்படுகின்றது. ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து வெட்டப்பட்டுக் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அம்மரத்தூணைத் துல்லியமாகச் செதுக்கக்கூடியவரிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு வடிவமும் குறிப்பிட்ட பொருளைத் தருவதால் செதுக்குபவர் வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டியது மட்டுமல்லாமல், அவர் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கெலிரியங் தூணை வடிவமைத்து முடிக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனப்படுகிறது. கெலிரியங் உருவாக்கும் பணி நிறைவடைந்தப்பின் அடுத்து வரும் அறுவடை காலத்தில் இரண்டாம் நிலை இறப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்த உடலின் எச்சங்கள் தஜாவ் எனப்படும் ஜாடியில் அடைக்கப்பட்டு கெலிரியங்கில் வைத்து பாதுகாக்கப்படும்.
புனான் மக்கள் 50 மீட்டர் உயரத்தில் 'கெலிரியங்' (kelirieng) என்று சொல்லப்படும் ஒரு பரண் உருவாக்கி லாஜர் என்றழைக்கப்படும் தங்களுடைய தலைவர்களை அடக்கம் செய்வார்கள். தற்போது சரவாக்கில் 30க்கும் குறைவான கெலிரியங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கெலிரியங் பெலியான் மரத்தூண்களில் செதுக்கப்படுகின்றது. ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து வெட்டப்பட்டுக் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அம்மரத்தூணைத் துல்லியமாகச் செதுக்கக்கூடியவரிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு வடிவமும் குறிப்பிட்ட பொருளைத் தருவதால் செதுக்குபவர் வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டியது மட்டுமல்லாமல், அவர் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கெலிரியங் தூணை வடிவமைத்து முடிக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனப்படுகிறது. கெலிரியங் உருவாக்கும் பணி நிறைவடைந்தப்பின் அடுத்து வரும் அறுவடை காலத்தில் இரண்டாம் நிலை இறப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்த உடலின் எச்சங்கள் தஜாவ் எனப்படும் ஜாடியில் அடைக்கப்பட்டு கெலிரியங்கில் வைத்து பாதுகாக்கப்படும்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://dbpedia.org/page/Bah-Biau_Punan_language புனான் மொழி அறிமுகம்]

Latest revision as of 10:13, 24 February 2024

புனான் இன மக்கள்

புனான் (Punan), சரவாக் மாலத்தில் காணப்படும் பழங்குடி இனக்குழுக்களில் ஒன்று. இவர்கள் புனான் பா (Punan Bah) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகுவாங் புங்குலன் (Mikuang Bungulan), மிகுவாங் (Mikuang) மற்றும் அவேங் புவான் (Aveang Buan) போன்ற பெயர்களாலும் புனான் மக்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

வரலாற்றுக்குறிப்புகள்

புனான் இன மூதாதை

புனான் மக்களைப் பற்றிய வரலாற்றுக்குறிப்பை The Chinese Repository Vol VII, 1839 எனப்படும் அமெரிக்க மிஷினரியின் நூலிலிருந்தே அறியமுடிகிறது. புனான் இனக்குழு சரவாக் மாநில சட்ட அமைப்புப்படி காஜாங் பழங்குடியினத்தின் ஒரு பிரிவினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர்.

தொன்மம்

புவா எனப்படும் மூதாதையிலிருந்து புனான் இன வரலாறு தொடங்குவதாக நம்பப்படுகிறது. செகப்பன் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட புவா, ஜாலி அல்லது லப்பான் என அறியப்படும் பெண்ணை மணந்தார். புவாவுக்கு ‘எத்து ஒவா’ எனப்படும் அதீத ஆற்றல் இருந்ததாக நம்பப்படுகிறது. பாஹ் மாவட்டத்துக்குச் சென்று தன் ஆற்றலைக் கொண்டு பாஹ் ஆற்றையும் அதையொட்டி வாழும் புனான் பாஹ் எனப்படும் இனத்தையும் உருவாக்கினார் எனச்சொல்லப்படுகிறது. அவரின் ஆற்றலுக்கு அடையாளமாக பாஹ் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் பாறையொன்று வைக்கப்பட்டிருக்கிறது.

இனப்பரப்பு

புனான் இன மக்கள் குடியிருப்பு

புனான் பெரும்பாலும் சரவாக் பிந்துலு பிரிவில் உள்ள பாண்டன், ஜெலாலாங் மற்றும் காகஸ் ஆகிய இடங்களில் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். ராஜாங் ஆற்றின் அருகே, அவர்களின் குடியிருப்பு பரந்து விரிந்துள்ளன. போர்னியோவின் மையப் பகுதி, ராஜாங் நதி மற்றும் பலுய் பகுதிகளில் செகாபன், கெஜாமன் மற்றும் லஹானன் ஆகியோருடன் சேர்ந்து குடியேறிய ஆரம்பகால மக்களில் புனான் பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் அருகில் இருக்கும் நதிகளின் பெயர்களில் இருந்து இவர்களுக்குப் இப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மொழி

புனான் இன மக்கள்

புனான் பழங்குடி மக்கள் 'பஹ்-பியாவ்' (Bah-Biau) என்னும் மொழியைப் தாய் மொழியாக் கொண்டுள்ளனர். பஹ் பியாவ் மொழி அஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இம்மொழி செகாபன் (Sekapan) மற்றும் கெஜமான் (Kejaman) பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கு நெருக்கமானது. புனான் மொழியில் Loie Punan Ballu Lole, Punan Lelak Baliu ஆகிய இரண்டு வட்டார வழக்குகள் இருக்கின்றன. இந்த இரண்டு வட்டார வழக்குகளே சிற்சில மாற்றங்களுடன் புனான் இன மக்களிடையே புழங்கிவருகிறது.

வாழ்க்கைமுறை

புனான் மக்கள் நாடோடிகளாக வாழ விரும்பாதவர்கள். விவசாயம் இவர்களின் பிரதான தொழிலாக இருந்துள்ளது. இவர்கள் மரவள்ளி, சாமை, கரும்பு, புகையிலை போன்ற பல வெப்பமண்டல தாவரங்களை அதிகமாக பயிரிடுவார்கள். விலங்குகளை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மற்றும் வன வளங்களைச் சேகரித்தல் போன்றவைகளும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய காரணியாக இருந்துள்ளது.

பண்பாடு

நெல் சாகுபடி முடிந்ததும் புங்கான் எனப்படும் சடங்கினை புனான் இன மக்கள் மேற்கொள்வர். மோ Mo’a எனப்படும் பாடலைப் பாடித் தங்களுக்குக் கிடைத்த விளைச்சலுக்காக முன்னோர்களுக்கு நன்றி கூறுவர்.

சமயம்

புனான் பழங்குடியினர் ‘பெசாவிக்’ (Besavik) என்னும் ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். பின்னர், கென்யா பழங்குடியினரின் வழிப்பாட்டு மரபான ‘புங்கன்’ (Bungan) முறையை கலிமந்தானைச் சேர்ந்த ‘ஜோக் அபுய்’ (Jok Apui) என்பவரின் வழிகாட்டலில் புனான் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். சராவாக் மாநிலத்தில் 19-ம் நூற்றாண்டில் மிஷினரிகள் மேற்கொண்ட கிறிஸ்துச் சமயப் போதனைகளால் புனான் இன மக்கள் பலரும் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர்.

திருமணச்சடங்குகள்

புனான் இன மக்களின் திருமணம் மணமக்களின் பெற்றோர்களே உறுதிசெய்யப்படுகிறது. மணமகனின் பெற்றோர் மணமகளின் வீட்டுக்குச் சென்று திருமண நிச்சயத்தைச் செய்வர். மணமகள் குடும்பத்தார் திருமணத்தை உறுதி செய்த பின்னர்.திருமண நாளை உறுதிபடுத்துவர். அதன் பின்னர், இரு வீட்டாரும் பராங் இலாங் எனப்படும் குறுவாள், வெற்றிலைத்தாம்பூலம், தட்டுகள், மோதிரம், கோங் தாளக்கருவி ஆகியச் சீர்பொருட்களைத் தயார் செய்வார்கள்

கெலிரியாங் தூண் 2.png
கெலிரியங் தூண்

இறப்புச்சடங்குகள்

புனான் மக்கள் 50 மீட்டர் உயரத்தில் 'கெலிரியங்' (kelirieng) என்று சொல்லப்படும் ஒரு பரண் உருவாக்கி லாஜர் என்றழைக்கப்படும் தங்களுடைய தலைவர்களை அடக்கம் செய்வார்கள். தற்போது சரவாக்கில் 30க்கும் குறைவான கெலிரியங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கெலிரியங் பெலியான் மரத்தூண்களில் செதுக்கப்படுகின்றது. ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து வெட்டப்பட்டுக் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அம்மரத்தூணைத் துல்லியமாகச் செதுக்கக்கூடியவரிடம் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு வடிவமும் குறிப்பிட்ட பொருளைத் தருவதால் செதுக்குபவர் வடிவமைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டியது மட்டுமல்லாமல், அவர் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு கெலிரியங் தூணை வடிவமைத்து முடிக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனப்படுகிறது. கெலிரியங் உருவாக்கும் பணி நிறைவடைந்தப்பின் அடுத்து வரும் அறுவடை காலத்தில் இரண்டாம் நிலை இறப்பு சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்த உடலின் எச்சங்கள் தஜாவ் எனப்படும் ஜாடியில் அடைக்கப்பட்டு கெலிரியங்கில் வைத்து பாதுகாக்கப்படும்.

உசாத்துணை

✅Finalised Page